Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
சிறுநீர் நோய்களை நீக்கும் கூகைக் கிழங்கு!
மண்ணிற்கு அடியில் விளையும் கிழங்குகளின் மருத்துவ குணங்கள் மகத்துவம் மிக்கவை. நாம் அதிகம் கேள்விப்பட்டிராத கூகைக்கிழங்கு வயிறு தொடர்புடைய நோய்களை நீக்கும் தன்மை கொண்டது. கூகைக் கிழங்கு என்ற பெயரை விட அர்ரூட் மாவு என்ற பெயரே பலருக்கும் பரிச்சயமானது. இதற்கு அரரூட் கிழங்கு, மாக்கிழங்கு, கூகைக் கிழங்கு என்ற பெரும் உண்டு.
மருந்தாக பயன்படும் மாவு
மலைப் பகுதிகளிலும், மலை அடிவாரங்களிலும், தானே வளரும் செடி இனத்தைச் சேர்ந்தது. இதில் முற்றிய கிழங்குகள் நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. முற்றிய கிழங்கை தோல் நீக்கிச் சுத்தம் செய்து, பின்னர் துண்டுகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி காய்ந்த பின் இடித்து தூளாக்கி, வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவை நீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் வடிகட்டிய மாவை மீண்டும் நீரில் கரைத்து வடிகட்ட வேண்டும். இவ்வாறு மூன்று முறை வடிகட்டி எடுத்த மாவை வெயிலில் நன்கு உலர்த்தி அத்தூளைப் பயன்படுத்த வேண்டும்.
மேனியிடும் வாய்க்கு மிருதுவாம் ஆக்கியுண்ணத்
தானிருமல் வெப்பதிக தாகமிவை -ஏ னிருக்கும்
அம்பே ரிளங் கிழங்கி தியாவ்ர்க்கு மாமண ப்பூங்
கொம்பே கூகை கிழங்கை கூறு என்று அகத்தியர் குண பாடத்தில் கூகைக் கிழங்கு பற்றி கூறப்பட்டுள்ளது.
சிறுநீர் நோய்கள் தீரும்
சிறுநீர்க் கோளாறுகள் எதுவானாலும், இந்த மாவை கஞ்சி போல காய்ச்சிக் கொடுக்கலாம். இதனால் சிறுநீர் தாராளமாக பிரியும். சிறுநீர் தொடர்புடைய நோய்களும் தீரும்.
உடல் சூடு குணமடையும்
இது உடல் சூட்டைத் தணிக்க வல்லது. உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்கும். மூலச்சூடு இருந்தாலும், இதனால் சமனப்படும். இருமல், ஜுரம், நீர் வேட்கை நீங்கும், உடலுக்கு வலிமை தரும்.
வயிற்றுப் போக்கு அதிகமாக இருப்பவர்கள் இந்த மாவினை கஞ்சிபோல காய்ச்சி குடிப்பார்கள்.பேதி, சீதபேதி, ஆகும் நிலையில் இந்த மாவை கஞ்சி காய்ச்சிக் கொடுக்க நிற்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
