Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
புற்றுநோயை தடுக்கும் புராக்கோலி – ஆய்வில் தகவல்

இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறியாகும். முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு ப்ரூக்கோலி முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள தாதுஉப்புக்கள் உயர்ரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.
சூப்பர் புராக்கோலி
நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் ஆய்வு செய்து ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் குளூக்கோராபேனின்' என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ள புதிய புராக்கோலியை உருவாக்கியுள்ளனர். இந்த குளூக்கோராபேனின்', இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
புற்றுநோயை கட்டுப்படுத்தும்
இது வழக்கமான புராக்கோலியைப் போலவே இருக்கும். ஆனால் இந்த சூப்பர் புராக்கோலி, மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் குறைக்கிறது, புற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது, நோய்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி ஆக்சிடன்ட்களை' ஊக்குவிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதன்மூலம், நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளை மேலும் சத்து நிறைந்ததாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
