Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
மூளையை சுறுசுறுப்பாக்க வைக்க உதவும் பகல் நேர குட்டித் தூக்கம்

நம் உடலே, தினமும் இரண்டு வேளைக்குத் தூங்கும் பழக்கம் கொண்டது தான். இரவு நேரத்தில், குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை, உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை கொடுக்கும்போது, சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல், மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும்.
அந்த நேரத்தில், வேலைகளை உடனே நிறுத்தி விட்டு, எல்லாவற்றையும் மறந்து, அரை மணி நேரம் கண்ணயர்ந்து விட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன என, மருத்துவர்கள் கூறுகின்றனர். பகல் நேரத்தில் தூங்கினால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
பெர்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 39 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பகல் தூக்கத்தினால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாக தூங்கவைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்கவைத்தனர். அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் உறங்கவைத்தனர். இவர்களின் செயல்திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது.
இதில், இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட, பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளைசெயல்பாட்டு திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதே முடிவுதான் கிடைத்தது.
இதயத்தை காக்கும்
பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்றும் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பென்சில்வேனியா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் ரியான் பிரின்டில், சாரா காங்கிளின் ஆகியோர் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இதனை கண்டறிந்துள்ளனர். மாணவர்களில் ஒரு பாதியினரை பகலில் ஒரு மணிநேரம் தூங்கும்படியும், இன்னொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணிநேரம் தூங்கினால் ரத்தம் அழுத்தம் குறைவது கண்டறியப்பட்டது. இதன் மூலம் பகலில் தூங்குவதன் மூலம் இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அரை மணி நேரத் தூக்கம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்தால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
