ஆண்களே! உங்களோட இந்த 2 விரல்கள் உங்களுக்கு வழுக்கை வருமா வராதா-ன்னு சொல்லுமாம்.. உங்களுக்கு வருமா பாருங்க..

Finger Length And Baldness: தற்போது பெரும்பாலான ஆண்களுக்கு பெரும் கவலையாக வழுக்கைத் தலை பிரச்சனை உள்ளது. அதுவும் நிறைய ஆண்களுக்கு திருமணமாவதற்கு முன்னரே தலை வழுக்கையாகிவிடுவதால், திருமணமாவதில் பிரச்சனையை சந்திக்கின்றனர். இதன் விளைவாக ஒருவித மன உளைச்சலுக்கும் ஆண்கள் ஆளாகின்றனர். ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்பட அவர்களின் மரபணுக்கள் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களின் அஜாக்கிரதையும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவருக்கு வழுக்கைத் தலை எந்த வயதிலும் ஏற்படலாம். அதுவும் அதிக முடி உதிர்தலால் ஏற்படும் வழுக்கையை அலோபீசியா என்று அழைப்பர். இந்த அலோபீசியா இளமைப் பருவத்தில், நடுத்தர வயதில் அல்லது 50 வயதிற்கு மேல் கூட ஏற்படலாம். ஆனால் அந்த அலோபீசியா ஏற்படும் முன் ஒருசில அறிகுறிகள் தெரியும். அந்த அறிகுறிகளை கவனித்தால், முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தலாம்.

These Two Fingers That Predict Whether You Are Going Bald Top US Based Doctor Says

சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவரான டாக்டர் ஜோ விட்டிங்டன், ஒருவருக்கு வழுக்கைத் தலை வருவதை சுட்டிக்காட்டும் ஒரு சுவாரஸ்யமான எளிய வழி குறித்து இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தார். அதுவும் ஒருவரது விரல்கள் அந்நபருக்கு வழுக்கை ஏற்படுமா இல்லையா என்பதை வெளிப்படுத்துவதாக டாக்டர் கூறியுள்ளார். மேலும் ஒருவருக்கு வரவுள்ள வழுக்கையின் அறிகுறிகள் அந்நபரின் மோதிரம் மற்றும் ஆள்காட்டி விரல்களின் விகிதாச்சாராத்துடன் தொடர்புடையதாக கூறியுள்ளார். இதை 2D:4D விகிதம் என்பர். அதாவது, இதன்படி ஒருவரது ஆள்காட்டி விரலின் நீளத்துடன் ஒப்பிடும் போது மோதிர விரல் நீளமாக இருந்தால், அந்நபருக்கு வழுக்கை வருவதற்கான வாய்ப்பு 6 மடங்கு அதிகமாக உள்ளதாக டாக்டர் கூறுகிறார்.

மேலும் சீன ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில், ஆண்களின் விரல்களின் நீளம், அவர்களின் வழுக்கையின் தீவிரத்தை மதிப்பீடு செய்ததையும் டாக்டர் குறிப்பிட்டார். இந்த ஆய்வில், பங்கேற்பாளர்களில் வலது கையின் 2D:4D விகிதம் குறைவாக இருந்தவர்களுக்கு, மோதிர விரல் ஆள்காட்டி விரலை விட நீளமாக இருந்துள்ளது. இதனால் இவர்களுக்கு ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே குறைவான 2D:4D விகிதம் கொண்டவர்களுக்கு, அந்த விகிதம் அதிகம் கொண்டவர்களை விட 6 மடங்கு அதிகமாக தலைமுடி உதிர்வை சந்திப்பார்கள் என்றும் டாக்டர் கூறியுள்ளார். மேலும் ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால், பிறப்பதற்கு முன்பே டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருந்திருக்கும் என்றும் டாக்டர் கூறியுள்ளார்.

எனவே உங்களுக்கு ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்து,, தலைமுடி உதிர்வை அதிகமாக சந்தித்தால், தலைமுடி உதிர்வை தடுக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம், தலை வழுக்கையாவதை ஒரளவு தடுக்கலாம்.

முடி உதிர்வை தடுக்கும் வழிகள்

ஒருவருக்கு தலைமுடி உதிர்வது என்பது சாதாரணம் தான். ஆனால் சில சமயங்களில் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்காக எடுக்கும் சில மருந்துகள் தலைமுடி உதிர்வை அதிகரிக்கலாம். இந்நிலையில் இதுக்குறித்து மருத்துவரிடம் தெரிவித்தால், சில மாதங்களுக்கு அதை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தலாம். ஆனால் இது எப்படி நல்ல தீர்வைத் தரும். ஆனால் சில சிகிச்சைகள் இதற்கு நல்ல தீர்வை வழங்கலாம்.

மினாக்ஸிடில்

இந்த மேற்பூச்சு சிகிச்சை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் தலைமுடி மேலும் மெலிந்து போவதைத் தடுக்கும். சிறப்பான பலனைப் பெற இதை 4-6 மாதங்களை வரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

ஃபின்ஆஸ்ட்ரைடு

இந்த சிகிச்சை உடலில் உள்ள டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) அளவைக் குறைக்கும். இது மயிர்கால்களை சுருக்கி, வழுக்கைப் புள்ளிகளை உண்டாக்கும். எனவே வழுக்கை ஏற்படாமல் இருக்க நினைத்தால், இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

முடி மாற்று அறுவை சிகிச்சை

இந்த சிகிச்சை ஒரு நிரந்தர தீர்வாக தீர்வாக இருக்கும். இந்த அறுவை சிகிச்சை நடுத்தர முதல் கடுமையான முடி உதிர்தலுக்கு ஒரு நல்ல தீர்வை அளிக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion