உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கணுமா? அப்ப இதுல ஒன்ன தினமும் சாப்பிடுங்க போதும்..!

Summer Health Tips In Tamil: கோடைக்காலம் வந்தாலே அதிக வெயிலால் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். முக்கியமாக உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, நீரிழப்பு பிரச்சனையால் அதிகம் அவதிப்பட நேரிடும்.

உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால், அதன் விளைவாக மிகுந்த உடல் சோர்வை அனுபவிப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். முக்கியமாக உடல் போதுமான ஸ்டாமினா இல்லாமல் இருக்கும்.

Summer Health Tips: Foods To Eat During Summer To Increase Stamina In Tamil

அதற்கு கோடைக்காலத்தில் காரமான உணவுகளை உண்பதைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைப்பதோடு, உடலின் ஸ்டாமினாவும் மிகவும் சிறப்பான அளவில் இருக்கும்.

நீங்கள் இந்த கோடையில் உங்கள் உடலின் ஸ்டாமினாவை சிறப்பான அளவில் பராமரிக்க விரும்பினால், பின்வரும் உணவுகளை அதிகம் உட்கொண்டு வாருங்கள்.

தர்பூசணி

கோடைக்கால பழமான தர்பூசணி மிகவும் சுவையான பழம் மட்டுமின்றி, ஏராளமான சத்துக்கள் உள்ளடக்கிய ஆரோக்கியமான பழமும் கூட. தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதைத் தவிர, பொட்டாசியம், லைகோபைன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளன. இதுமட்டுமின்றி இதில் செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும் பிற சத்துக்களும் உள்ளன.

மோர்

கோடைக்காலத்தில் தாகத்தைத் தணிக்க உதவும் அற்புதமான பானம் தான் மோர். இந்த மோரில் பச்சை மிளகாய், சிறிது சீரகம், உப்பு மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து குடித்தால், மிகவும் சுவையாக இருப்பதோடு, உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். நீங்கள் வெளியே அதிகம் சுற்றுபவராயின் மோரை அடிக்கடி குடித்து வந்தால், அது உடலை நீரேற்றத்துடன் வைப்பதோடு, உடலின் ஸ்டாமினாவையும் அதிகரிக்கும்.

தயிர்

மோரைப் போன்றே தயிரும் கோடையில் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளன. கோடைக்காலத்தில் ஒருவர் தங்களின் தினசரி உணவில் தயிரை சேர்த்து வந்தால், உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு, உடலின் ஸ்டாமினாவும் அதிகரிக்கும். எனவே தயிரை தினமும் உணவில் சேர்க்க மறவாதீர்கள்.

தேங்காய் பால்

தேங்காய் பால் ஒரு சுவையான மற்றும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும் அற்புத பானம். மேலும் இதில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ளன. கோடைக்காலத்தில் தேங்காய் பாலைக் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கலோரிகள் குறைவு, பொட்டாசியம் அதிகம், இய்ற்கை சர்க்ககரை மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்றவையும் இருப்பதால், இவை உடலை கோடைக்காலத்திலும் புத்துணர்ச்சியுட ன் வைத்துக் கொள்ள உதவுகின்றன. மேலும் இதில் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு தேவையான கால்சியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் உள்ளன.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தை கோடைக்காலத்தில் அவசியம் வாங்கி சாப்பிட வேண்டும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் உடலுக்கு தேவையான சர்க்கரை நிறைந்துள்ளன. முக்கியமாக ஆரஞ்சு பழத்தை கோடைக்காலத்தில் உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும், உடலின் ஸ்டாமினாவும் அதிகரிக்கும். எனவே இந்த பழத்தை தினசரி உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.

கரும்பு ஜூஸ்

கோடையில் உடல் வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டுமானால், தெருவோரங்களில் விற்கப்படும் கரும்பு ஜூஸை வாங்கி குடியுங்கள். கரும்பு ஜூஸ் சூடான உடலை குளிர்ச்சியாக்க உதவுகிறது. இதில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளதால், இந்த ஜூஸில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், இந்த ஜூஸை தவிர்ப்பது நல்லது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, May 5, 2023, 17:40 [IST]
Desktop Bottom Promotion