Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Summer Health Tips: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இந்த பானங்களை அதிகம் குடிங்க போதும்...!
Summer Health Tips: கோடையில் அதிகப்படியான வெயில் காரணமாக நிறைய பேர் உடல் வறட்சி பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு. உடல் வறட்சியடையாமல் இருக்க வேண்டுமானால், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டால், அதன் காரணமாக அதிகப்படியான தாகத்தை அனுபவிக்கக்கூடும்.
உங்களுக்கும் அதிக தாகம் எடுக்கிறதா? உங்கள் உடல் இந்த கோடையில் வறட்சியடையாமல் இருக்க வேண்டுமா? அப்படியானால் கோடையில் நீரைத் தவிர, ஒருசில பானங்களை அதிகம் குடியுங்கள்.

இந்த பானங்கள் ஒருவரது தாகத்தை தணிப்பதோடு, உடல் வறட்சியடையாமல் தடுக்கும். இப்போது கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள குடிக்க வேண்டிய சில பானங்களைக் காண்போம்.
எலுமிச்சை ஜூஸ்
கோடையில் உங்களுக்கு அதிகம் தாகம் எடுத்தால், அப்போது நீருக்கு பதிலாக எலுமிச்சை ஜூஸை குடித்தால், அது சுவையாக இருப்பதோடு, தாகத்தை தணிக்கும் மற்றும் உடல் வறட்சியடைவதைத் தடுக்கும். முக்கியமாக எலுமிச்சை ஜூஸை கோடையில் அடிக்கடி குடித்து வந்தால், உடலுக்கு வைட்டமின் சி கிடைத்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்கும்.
இளநீர்
கோடைக்காலத்தில் சந்திக்கும் உடல் வறட்சி, உடல் சூடு, அதிகப்படியான தாகம் போன்ற அனைத்திற்கும் சிறந்த தீர்வை அளிக்கும் பானம் என்றால் அது இளநீர். இந்த இளநீரில் கலோரிகள் குறைவு மற்றும் பொட்டாசியம் அதிகம். அளவுக்கு அதிகமாக தாகத்தின் போது, வெறும் நீரை குடிப்பதற்கு பதிலாக, இளநீரைக் குடித்தால் தாகம் தணிவதோடு, உடலின் ஆற்றலும் உடனடியாக அதிகரிக்கும்.
மோர்
கோடைக்காலத்தில் தாகத்தைத் தணிக்கவும், உடல் வறட்சியடையாமல் இருக்கவும் உதவும் மற்றொரு அற்புதமான பானம் தான் மோர். அதுவும் அந்த மோரில் சீரகத் தூள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து குடித்து வந்தால், தாகம் தணிவதோடு, உடல் குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் இருக்கும். மேலும் மோர் செரிமானத்திற்கு நல்லது.
கற்றாழை ஜூஸ்
தற்போது மக்கள் கற்றாழை ஜூஸை அதிகம் உட்கொண்டு வருகிறார்கள். கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன மற்றும் இதில் சில சக்திவாய்ந்த மீளுருவாக்கம் பண்புகளும் உள்ளன. எனவே கற்றாழை ஜூஸில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து கோடையில் குடித்து வந்தால், அது தாகத்தைத் தணிப்பதோடு, உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ளும்.
சியா விதை நீர்
கோடையில் சந்திக்கும் உடல் சூடு மற்றும் உடல் வறட்சி பிரச்சனையைத் தடுக்க சியா விதைகள் உதவி புரியும். அதற்கு சியா விதைகளை நீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைக்கும் போது அந்த விதைகளானது சற்று பெரிதாகும். பின் அதில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடல் நீரேற்றத்துடனும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

