Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சம்மரில் இந்த பானங்களை குடிச்சா... உங்க இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம்... உடனே குடிங்க!
Summer Drinks For Diabetes In Tamil: கடுமையான கோடை வெப்பம் நீரிழப்பு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள பானங்கள் மற்றும் குளிர்பானங்களை நீங்கள் குடிக்கத் தொடங்கலாம். இது கோடை வெயிலை சமாளிக்கவும் உடல் வெப்பத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது பாதுகாப்பானதா?
இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பல உணவுகள் மற்றும் பானங்கள் உள்ளன. ஆனால், கோடைகால பானங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா? ஏனெனில், சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், கலோரி அல்லது இனிப்பு நிறைந்த பானங்களை குடிக்கத் தவிர்க்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும்.

இருப்பினும், சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் புத்துணர்ச்சியூட்டும் பானங்களைத் தவிர்ப்பது என்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். இந்த பானங்களில் பெரும்பாலானவை சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கூறுகள். இது இரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்க வழிவகுக்கும்.
எனவே, வெப்பத்தைத் தணிக்க, நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இக்கட்டுரையில், நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைகால பானங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
தண்ணீர்
கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரின் மூலம் அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்றி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். எனவே, அதிகபட்ச நீரேற்றத்திற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமலும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
சர்க்கரை சேர்க்காமல் எலுமிச்சை சாறு
கோடையில் எலுமிச்சை சாற்றை குடிக்க விரும்பாத மக்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு எல்லா மக்களும் விரும்பி சாப்பிடும் பானம் எலுமிச்சை ஜூஸ். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இந்த பானத்தில் சர்க்கரை சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வேறுசில ஆரோக்கியமான பொருட்களைச் சேர்த்து அருந்தலாம். எலுமிச்சை நீரிழிவு நோய்க்கு ஏற்றது மற்றும் இரத்த சர்க்கரையை எதிர்மறையாக பாதிக்காது.
காய்கறி சாறு
பழச்சாறுகளில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே, காய்கறி சாற்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த காய்கறிகளை ஒன்றாக சேர்த்து, காய்கறி கலவையை நீங்களே தயார் செய்யலாம். அதேநேரம் உங்கள் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். காய்கறி சாற்றின் சுவையை அதிகரிக்க சில அளவு பழங்களை நீங்கள் சேர்க்கிறீர்கள் என்றால், அதன் அளவைக் கவனியுங்கள்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீர் உங்களை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம் மிகக் குறைவாக உள்ளது. தேங்காய் நீரில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் தேங்காய்த் தண்ணீரைக் குடிக்கலாம். ஆனால் அவர்களின் உணவில் பாதுகாப்பாக சேர்க்கக்கூடிய சரியான அளவை தெரிந்துகொள்ள ஒரு சுகாதார நிபுணரை அணுகலாம்.
மோர்
அனைத்து மக்களாலும் மிகவும் விரும்பி குடிக்கப்படும் பானம் மோர். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் சிறந்த புரோபயாடிக் ஆகும். மோர் குடிப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறையும். குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ், குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் குறைவான கலோரிகளைக் கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த பானமாகும்.
நீரிழிவு நோயாளிகள் ஆற்றல் பானங்கள், பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள், சோடாக்கள், மதுபானங்கள் மற்றும் பிற பேக் செய்யப்பட்ட பானங்களை குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத, உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பானங்களை குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













