Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
Summer Constipation: கோடையில் மலச்சிக்கலை சந்திப்பீங்களா? அப்ப இந்த பழங்களை அதிகமா சாப்பிடுங்க...
Summer Constipation: கோடைக்காலத்தில் பெரும்பாலானோர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு. இதனால் கோடைக்காலம் வந்துவிட்டாலே மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க பல முயற்சிகளை எடுப்பார்கள். மலச்சிக்கல் என்பது உடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்ற முடியாத நிலை ஆகும். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படுவதுண்டு.
மலச்சிக்கல் ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். அதில் மோசமான உணவுப் பழக்கம், நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்பது, எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பது, போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, அதிகப்படியான மன அழுத்தம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

அதுவும் கோடையில் அதிகப்படியான வெயிலால் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வையின் வழியே வெளியேறி, உடல் வறட்சியடையும். இப்படி உடலில் போதுமான நீர் இல்லாத போது, ஒருவரால் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் கழிவுகள் இறுக்கமடைந்து, மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட நேரிடும்.
கோடைக்காலத்தில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனையைத் தவிர்க்க ஒருசில கோடைக்கால பழங்கள் உதவி புரியும். அந்த பழங்களை கோடைக்காலத்தில் அதிகமாக உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். இப்போது அந்த பழங்கள் எவையென்பதைக் காண்போம்.
ஆப்பிள்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆப்பிள் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் ஆப்பிளில் பெக்டின் என்னும் ஒரு வகையான நார்ச்சத்து உள்ளன. இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகின்றன. மேலும் ஆப்பிளை தினமும் உட்கொண்டு வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழம் மலச்சிக்கலைத் தடுப்பதில் சிறந்தது. புளிப்பு, இனிப்பு கலந்த சுவையைக் கொண்ட ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. கூடுதலாக, ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி வளமான அளவில் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
பப்பாளி
மற்றொரு கோடைக்கால பழம் தான் பப்பாளி. முக்கியமாக இந்த பப்பாளியானது அனைத்து பருவங்களிலும் கிடைக்கக்கூடியது. பப்பாளியை தினமும் காலை அல்லது மதிய வேளையில் உட்கொண்டு வந்தால், குடலியக்கம் சீராக நடைபெறும். இதற்கு அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதி தான் காரணம். இந்த நொதி பொருள் செரிமான மண்டலத்தில் உள்ள உணவுகளை உடைதெறிய உதவுவதோடு, குடலில் உணவுகள் எளிதில் நகர்ந்து செல்ல உதவுகிறது. எனவே கோடையில் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க வேண்டுமானால், பப்பாளியை அடிக்கடி சாப்பிடுங்கள்.
மாம்பழம்
பழங்களின் ராஜாவான மாம்பழத்தின் சீசனே கோடைக்காலம் தான். இந்த மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது மற்றும் நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. மாம்பழத்தில் உள்ள நொதிகள் உணவுகளை உடைத்தெறியவும், புரோட்டீன்களை நொதிக்கவும் உதவுகின்றன.
வாழைப்பழம்
வாழைப்பழம் கோடைக்காலத்தில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் கிடைக்கும் விலை குறைவான பழம். இந்த வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. எனவே மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதுவும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.
முலாம் பழம்
கோடைக்கால பழமான முலாம் பழத்தில் நீர்ச்சத்து மட்டுமின்றி நார்ச்சத்தும் அதிகளவில் உள்ளன. இந்த இரண்டு சத்துக்களும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுவதோடு, செரிமான செயல்பாட்டை சீராக்கி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கோடையில் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் முலாம் பழத்தை சாப்பிட, இப்பிரச்சனையைத் தடுக்கலாம்.
கருப்பு உலர் திராட்சை
மலச்சிக்கல் பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், கருப்பு உலர் திராட்சையை தினசரி உணவில் சேர்க்க நல்ல பலன் கிடைக்கும். அதுவும் அந்த கருப்பு உலர் திராட்சையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் உலர் திராட்சையை உட்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் மலச்சிக்கல் பிரச்சனையே ஏற்படாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications















