Latest Updates
-
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
சொன்னா நம்பமாட்டீங்க... இந்த ஒரு இரத்த பரிசோதனையில் 18 வகையான புற்றுநோய்களை கண்டறிய முடியுமாம்!
Cancer In Tamil: இதய நோய்க்கு அடுத்தப்படியான உலகளவில் அதிக மக்கள் இறக்கும் மற்றொரு கொடிய நோய் என்றால் அது புற்றுநோய் தான். என்ன தான் புற்றுநோயை குணமாக்க பல்வேறு சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், வந்து முற்றிய பின் சிகிச்சை அளிப்பதை விட, ஆரம்ப கட்டத்திலேயே அந்த புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், இன்னும் வேகமாக குணமடையலாம் அல்லவா? அந்த நோக்கத்தில் உலகின் பல பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்க பயோடெக் நிறுவனமான நோவெல்னா ஆராய்ச்சியாளர்கள், இங்கிலாந்தில் உள்ள NHS இல் தற்போது சோதனை செய்து வரும் Galleri சோதனையை விட, தங்களின் 'நியூ ஜெனரேஷன்' தொழில்நுட்பமானது அதிக உணர்திறன் கொண்டது என்று கூறுகின்றனர். ஏனெனில் இந்த தொழில்நுட்பத்தில் ஆரம்ப கட்ட புற்றுநோயானது ஆண்களில் 93 சதவீதமும், பெண்களில் 84 சதவீதமும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுக்குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் டாக்டர் போக்டன் புட்னிக் கூறுகையில், "புரோட்டீன் அடிப்படையிலான இந்த இரத்த பிளாஸ்மா சோதனையானது புற்றுநோயை கண்டறிய ஏற்ற சிறந்த ஒன்றாக இருக்கும். இந்த சோதனையில் அறிகுறியற்ற நோயாளிகளின் உடலில் உள்ள ஆரம்ப கட்ட புற்றுநோய் கட்டிகளை கண்டறியவும் முடியும். அதாவது, புற்றுநோய் அறிகுறிகள் தெரிவதற்கு முன்னரே இந்த சோதனையில் தெரிந்து கொள்ள முடியும்" என்றார்.
ஏற்கனவே உலகளவில் ஒவ்வொரு நாளும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்குள் 5.3 மில்லியனுக்கும் அதிகமாக புற்றுநோயாளிகள் இருக்கக்கூடும் என நிபுணர்கள் கணித்து கூறியுள்ளனர்.
புற்றுநோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே அந்த நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளிப்பது சற்று எளிதாக இருக்கும். இருப்பினும், தற்போது வரை இப்படி கண்டறிய எந்த ஒரு கேன்சர் ஸ்கிரீனிங் சோதனையும் இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இரத்தத்தில் உள்ள புரதங்களை பகுப்பாய்வு செய்யும் ஒரு சோதனையை வடிவமைத்துள்ளனர். இந்த சோதனையில் மனித உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளையும் பாதிக்கும் 18 வகையான ஆரம்ப நிலை புற்றுநோய்களை கண்டறிய முடியும்.
முக்கியமாக இந்த சோதனையானது குறைந்த செலவில், மிக துல்லியமாக, பல புற்றுநோய்களை கண்டறிய உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முக்கியமாக இது எதிர்காலத்தில் ஒரு கேம்சேஞ்சராக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications