Latest Updates
-
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் நீங்க உங்க உடலுக்கு தேவையான அளவை விட கம்மியா சாப்பிடுறீங்களாம்...!
அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி நாம் நன்கு அறிவோம். ஆனால் குறைவாக சாப்பிடுவதாலும் சில ஆபத்துகள் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் நம்பாவிட்டாலும் குறைந்த பசியின்மை அல்லது உணவு கட்டுப்பாடு காரணமாக குறைவாக சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
குறைவாக சாப்பிடுவது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகளின் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இது உங்கள் எடை குறைப்பு முயற்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் போதுமான அளவு சாப்பிடவில்லை மற்றும் உங்கள் உடலுக்கு அதிக உணவு தேவை என்பதை உங்கள் உடல் சில அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்தலாம்.

எனர்ஜி இல்லாமல் இருப்பது
மிகக் குறைந்த கலோரிகளை உட்கொள்வது, அடிப்படை செயல்பாடுகளுக்கு அப்பால் உடற்பயிற்சி செய்வதற்கு அல்லது இதர வேலைகளை செய்வதற்கு போதுமான ஆற்றல் இல்லாததால் சோர்வுக்கு வழிவகுக்கும்.
முடி உதிர்தல்
முடி உதிர்தல் நாம் அனைவரும் சந்திக்கும் மோசமான பிரச்சினையாக இருக்கலாம். முடி அதிகமாக உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கலோரிகள், புரதம் மற்றும் சில நுண்ணூட்டச்சத்துக்கள் போதுமான அளவு உட்கொள்ளாததாலும் முடி உதிர்தல் ஏற்படலாம்.
தொடர்ச்சியான பசி
நீங்கள் குறைவாக சாப்பிடும்போது போதுமான அளவு கலோரி மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளலை ஈடுசெய்வதற்காக பசியை அதிகரிக்கும் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இதனால் அதிக பசியுணர்வு ஏற்படும்.
தூக்க பிரச்சினைகள்
குறைவாக சாப்பிடுவது மோசமான தரமான தூக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வது மற்றும் ஆழ்ந்த தூக்கத்தில் குறைந்த நேரத்தை செலவிடுவது ஆகியவை இதில் அடங்கும்.
எரிச்சல்
தொடர்ச்சியான குறைந்த கலோரி உட்கொள்ளல் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறைகள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறைவாக சாப்பிடுவது எரிச்சல் மற்றும் மோசமான மனநிலையை ஏற்படுத்தும்.
எப்போதும் குளிராக உணர்வது
மிகக் குறைந்த கலோரிகளை உட்கொள்வது உடல் வெப்பநிலை குறைவதற்கு வழிவகுக்கும், இதனால் எப்போதும் குளிராக உணர்வார்கள். இது T3 தைராய்டு ஹார்மோனின் குறைந்த அளவு காரணமாக இருக்கலாம்.
மலச்சிக்கல்
கடுமையான டயட் மற்றும் குறைவான உணவை உட்கொள்வது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும், குறைந்த கழிவுப் பொருட்கள் மலம் மற்றும் செரிமான பாதை வழியாக உணவு மெதுவாக நகர்கிறது.
மோசமான அறிவாற்றல் மற்றும் உற்பத்தித்திறன்
குறைவாக சாப்பிடும் போது பி-வைட்டமின்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றல் திறன் குறையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


