Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் டாப் 10 பெரிய மாவட்டங்கள் - முதலிடத்தில் எந்த மாவட்டம் இருக்கு தெரியுமா? இந்த மாவட்டம்தானா? -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா?
எச்சரிக்கை! பால் டீ போடும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க....
Over Boiling Milk Tea Side Effects In Tamil: இந்தியர்களின் மிகவும் விருப்பமான பானம் தான் டீ. இந்தியாவில் எந்த வீடுகளுக்கு சென்றாலும், ஒரு டம்ளர் டீ போட்டு கொடுக்கும் வழக்கம் இருக்கும். அந்த அளவில் டீ இந்தியர்களின் ஒரு பாரம்பரிய பானமாக திகழ்கிறது. டீயில் பல வெரைட்டிகள் இருந்தாலும், பால் கொண்டு போடப்படும் டீயையே நிறைய பேர் விரும்புவார்கள்.
ஏனெனில் அந்த அளவில் பால் டீ மிகவும் ருசியாக இருக்கும். சொல்லப்போனால் காலையில் ஒரு டம்ளர் டீ குடித்து தான் நிறைய பேர் தங்களின் நாளை தொடங்குவார்கள். ஏனென்றால் டீ தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்து விடுவிப்பதோடு, புத்துணர்ச்சி அளிக்கும் மற்றும் ஆற்றலை வழங்கும்.

அப்படிப்பட்ட டீயை தயாரிக்கும் போது செய்யும் ஒரு தவறு அந்த டீயில் உள்ள சத்துக்களை அழிப்பதுடன், பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும் என்பது தெரியுமா? அது என்னவெனில் டீயை அதிக நேரம் கொதிக்க வைப்பது தான். இப்போது பால் டீயை அதிகமாக கொதிக்க வைப்பதால் எந்த மாதிரியான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
1. ஊட்டச்சத்து இழப்பு
பால் டீயை அதிகமாக கொதிக்க வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக அழிந்துவிடும். பாலில் கால்சியம், புரோட்டீன், வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. ஆனால் அந்த பாலை அதிகமாக கொதிக்க வைக்கும் போது, இந்த சத்துக்கள் அனைத்தும் உடைத்தெறியப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். உதாரணமாக, பால் டீயை அதிகமாக கொதிக்க வைக்கும் போது, பாலில் உள்ள வைட்டமின் பி12 கணிசமான அளவில் குறைந்துவிடும். பின் இந்த வைட்டமின் பி12 உடலுக்கு கிடைக்காமல், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
2. சுவை மாறும்
பால் டீயை அதிகமாக கொதிக்க வைப்பதால் சந்திக்கும் மற்றொரு பக்கவிளைவு சுவை மாறும். பால் கொண்டு தயாரிக்கப்படும் டீயை அளவுக்கு அதிகமாக நீண்ட நேரம் கொதிக்க வைக்கும் போது, டீத் தூள் அதிகம் இறங்கி, டீ கசப்புச்சுவையுடன் இருக்கும். இப்படி கசப்புச்சுவையுடனான டீயைக் குடித்தால், பின் டீ குடிக்கும் ஆசையே போய்விடும்.
3. அமைப்பு மாறும்
பாலை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைக்கும் போது, அது அதன் தன்மையை மாற்றி, அதில் உள்ள புரோட்டீனை உறைய வைத்துவிடும். இதன் விளைவாகவே அதிகமாக கொதிக்க வைத்த டீ சற்று திரிந்து போன பாலின் தோற்றத்தைப் பெறுகிறது. எனவே நீங்கள் குடிக்கும் டீ நல்ல தோற்றத்துடனும், சுவையுடனும் இருக்க வேண்டுமானால், அளவாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடியுங்கள்.
4. ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் குறையும்
பால் டீயை அதிகமாக கொதிக்க வைக்கும் போது, பாலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அழித்து, அதன் விளைவாக உடலுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளும் குறையும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான கேட்டசின்கள் மற்றும் தியாப்ளேவின்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடுவதோடு, ஒட்டுதொத்த ஆரோக்கியத்திற்கும் ஆதரவளிக்கிறது. எனவே டீ குடிப்பதன் மூலம் நன்மைகளைப் பெற நினைத்தால், அதிகமாக கொதிக்க வைக்காதீர்கள்.
5. செரிமான பிரச்சனைகள்
நன்கு கொதிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படும் பால் டீயானது பல்வேறு செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் பாலை அதிகமாக கொதிக்க வைக்கும் போது, அது ஜீரணிப்பதற்கு கடினமாகிவிடும். மேலும் இதன் புரோட்டீன் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, அதன் விளைவாக வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்று அசௌகரியம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். கூடுதலாக டீயில் உள்ள டானின்களின் அடர்த்தி அதிகரித்து, ஜீரணிப்பதற்கு கடினமாகி, பல்வேறு செரிமான பிரச்சனைகளை வரத்தூண்டிவிடும்.
எனவே இனிமேல் பால் டீ தயாரித்தால், அதன் உண்மையான சுவையை அனுபவிக்க வேண்டுமானால், அதிகமாக கொதிக்க வைக்காமல் அளவாக கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் மூடி வைத்து, பின் வடிகட்டி குடியுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
