Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
மாணவர்களின் தற்கொலை எண்ணங்களை தடுப்பதற்கான உத்திகளை பகிர்ந்து கொள்ளும் மனநல மருத்துவர் ரம்யா சம்பத்!
Rising Students Suicide Rate In India: இந்தியாவில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருவதாக ஐசி3 மாநாட்டின் புதிய அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில், கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த சம்பவங்களின் விகிதம் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின் அடிப்படையில், "மாணவர்களின் தற்கொலைகள்: ஒரு தொற்றுநோய் பரவும் இந்தியா" என்ற சமீபத்திய அறிக்கை வருடாந்திர ஐசி3 மாநாடு மற்றும் எக்ஸ்போ 2024 இல் வெளியிடப்பட்டது.

இதில் ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 சதவீதம் அதிகரித்தாலும், மாணவர்களின் தற்கொலை வழக்குகள் 4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதுவும் மாணவர்களின் தற்கொலைகள் 6,654 இலிருந்து 13,044 ஆக உயர்ந்துள்ளதாக கூறுகின்றன.
அதுவும் 2022 ஆம் ஆண்டில், மொத்த மாணவர் தற்கொலைகளில் 53 சதவீதம் ஆண் மாணவர்கள் இருந்தனர். 2021 மற்றும் 2022 க்கு இடையில், ஆண் மாணவர்களின் தற்கொலைகள் 6 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் பெண் மாணவர்களின் தற்கொலைகள் 7 சதவீதம் அதிகரித்துள்ளன என்று ஐசி3 குறிப்பிட்டுள்ளது.
இப்படி மாணவர்களிடையே தற்கொலை எண்ணங்கள் அதிகரிப்பதற்கான உண்மையான காரணங்களைப் பற்றியும், அதைத் தடுப்பதற்கான சில உத்திகளையும் மனநல மருத்துவர் டாக்டர். ரம்யா சம்பத் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார்.
காரணங்கள்
1. கல்வி அழுத்தம்: கடுமையான போட்டி மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அழுத்தம் ஆகியவை பெரும் மன அழுத்தங்களாக மாணவர்களிடையே இருக்கின்றன. இதனால் பல மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
2. மனநலப் பிரச்சினைகள்: மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை மாணவர்களிடையே பொதுவானவை. ஆனால் அவை பெரும்பாலும் களங்கம் மற்றும் மனநல ஆதாரங்களின் பற்றாக்குறையால் மோசமடைகின்றன.
3. குறைவான ஆதரவு சேவைகள்: இந்தியாவின் மனநல நிபுணர்களின் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளில் போதிய ஆலோசனை சேவைகள் இல்லாமை போன்றவை இந்த சிக்கலை அதிகரிக்கின்றன.
4. தொற்றுநோய் தாக்கம்: கோவிட்-19 தொற்றுநோய் மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மேலும் பாதித்து, அதிக கவலை மற்றும் மனச்சோர்வுக்கு பங்களிக்கிறது.
தடுப்பு உத்திகள்
1. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு மனநலம் பற்றிக் கற்பிப்பதோடு, களங்கத்தைக் குறைக்கவும், உதவி தேடுவதை ஊக்குவிக்கவும் வேண்டும்.
2. மனநல நிபுணர்களுக்கான அணுகலை மேம்படுத்த வேண்டும் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆதரவு சேவைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
3. கல்வி அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். பள்ளிகள் அதிகப் பரீட்சைகளின் அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். மாணவர்கள் மீது அதிக அழுத்தத்தைக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
4. பியர் புரோகிராம்கள் மற்றும் திறந்த தொடர்பு சேனல்கள் மூலம் மாணவர்களுக்கு ஒரு ஆதரவான சூழல்களை உருவாக்க வேண்டும்.
5. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் மனநல ஆதாரங்களையும் ஆதரவையும் வழங்க டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் தற்கொலை விகிதம் அழுத்தமான மனநல நெருக்கடியின் தெளிவான அறிகுறியாகும். இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு மனநல ஆதரவை மேம்படுத்துவதற்கும், கல்வி அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மாணவர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இந்தியாவின் இளைஞர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி செல்ல உதவ முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











