Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Ramadan 2026: நீரிழப்பைத் தடுக்க இஃப்தார் நேரத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்!
Ramadan 2026: புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இஸ்லாமியர்கள் இந்த ரமலான் மாதத்தில் நாள் முழுவதும் உணவு, நீர், ஏன் எச்சில் கூட விழுங்காமல் கடுமையான நோன்பை மேற்கொள்வார்கள். அதுவும் இந்த ரமலான் நோன்பு மேற்கொள்ளும் காலத்தில் வெயில் அதிகம் கொளுத்துவதால், உடலில் நீரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே ரமலான் நோன்பு இருக்கும் போது உண்ணும் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். குறிப்பாக நீண்ட நேர நோன்பிற்கு பின் உட்கொள்ளும் இஃப்தார் நேரத்தில் உட்கொள்ளும் உணவை சரியாக தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் பானங்களை தேர்வு செய்வதாக இருந்தால், குறைந்த சர்க்கரை, அதிக எலக்ட்ரோலைட் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை பானங்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

இப்படியான பானங்களை குடிக்கும் போது, அது உடலின் ஆற்றலை மீட்டெடுத்து, நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும். இப்போது உடல் ஆரோக்கியத்திற்காக ரமலான் நோன்பு முடிக்கும் நேரத்தில் குடிக்க வேண்டிய பானங்கள் குறித்து காண்போம்.
1. பேரிச்சம் பழ பால்
ரமலான் நோன்பின் போது இஃப்தார் நேரத்தில் பேரீச்சம்பழம் பாரம்பரியமாக உட்கொள்ளப்படுகிறது. ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இயற்கையான சர்க்கரை, நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இதனை பாலுடன் கலந்து தயாரிக்கப்படும் பேரிச்சம் பழ பாலாகவோ அல்லது ஸ்மூத்தியாகவோ தயாரித்து குடித்தால், அது உடலின் ஆற்றலை விரைவாக மீட்டெடுக்கும் மற்றும் நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ளும்.
2. எலுமிச்சை புதினா நீர்
எலுமிச்சையும், புதினாவும் கலந்த நீர், வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஒரு சக்தி வாய்ந்த பானமாகும். ஏனெனில் இதில் உள்ள புதினா செரிமானத்தை சீராக்கி, வாய்வை குறைக்கும். அதுவும் குளிர்ந்த நீரில் எலுமிச்சை சாற்றுடன் புதினா இலைகளை சேர்த்து குடிக்கும் போது, அது உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை அளிக்கும்.
3. மோர்
மோர் மிகச்சிறந்த ஒரு புரோபயோடிக் பானமாகும். இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரியும். இப்படிப்பட்ட மோரை இஃப்தான் நேரத்தில் குடிக்கும் போது அது உடலைக் குளிர்வித்து, செரிமான செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், அமிலத்தன்மையையும் குறைக்கும். இந்த மோரின் சுவையை அதிகரிக்க, அத்துடன் சீரகத் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடிக்கலாம்.
4. தர்பூசணி ஜூஸ்
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதை அனைவரும் அறிவோம். இந்த தர்பூசணியை ஜூஸாக தயாரித்து குடிப்பதன் மூலம், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். ரமலான் நோன்பு இருப்பவர்கள் இந்த பானத்தை தங்களின் தினசரி இஃப்தார் உணவில் சேர்த்து வந்தால், நீரிழப்பு தடுக்கப்பட்டு, உடலின் எலக்ட்ரோலைட்டு அளவுகளும் சமநிலையில் இருக்கும்.
5. இளநீர்
இளநீரில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இவை உடலில் இழந்த திரவங்களை விரைவாக ஈடுசெய்யும். மேலும் நோன்பினால் ஏற்படும் சோர்வைக் குறைக்க உதவும். எனவே இஃப்தார் நேரத்தில் இளநீரை தவறாமல் குடியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications