Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
நல்ல ஸ்லிம்மான உடல் வேண்டுமா? அப்ப இந்த வானவில் டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
Rainbow Diet In Tamil: சாியான உணவை உண்டால், உடல் நலமாக இருக்கும் என்பது பொது விதி. நாம் சாப்பிடுவதை நமது உடலானது உறிஞ்சிக் கொண்டு, அதற்குத் தகுந்தவாறு நமது உடல் உள்ள ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆகவே சத்து நிறைந்த மற்றும் சமச்சீரான உணவை உண்டால், உடல் எடையை சீராக பராமாிக்க முடியும்.
அதோடு சா்க்கரை நோய், புற்றுநோய், அலா்ஜி மற்றும் இதய நோய் போன்றவை வராமல் தடுக்க முடியும். அத்தகைய சத்து நிறைந்த மற்றும் சமச்சீரான உணவுகளை வானவில் உணவு முறை வழங்குகிறது. அந்த வானவில் உணவு முறை பற்றி சற்று விாிவாக இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

வானவில் உணவு முறை என்றால் என்ன?
முழுமையான ஆரோக்கிய நிபுணரான அசாா் அலி சையத் என்பவாின் கூற்றுப்படி, ஆரோக்கியமான மற்றும் புதிய அம்சங்களை உணவு முறையில் பயன்படுத்தி, அதன் மூலமாக நாம் சுவையான மற்றும் சத்து நிறைந்த உணவுகளைப் பெற முடியும். அதற்கு வானவில் உணவு முறை வழிவகுக்கும் என்று கூறுகிறாா்.
வானவில் என்றாலே அதன் பல வண்ணங்கள்தான் நமது ஞாபகத்திற்கு வரும். அதுபோல வானவில் உணவு முறை என்றால் பல வண்ணங்கள் கொண்ட உணவுகள் என்று பொருள். பழங்கள் மற்றும் காய்கறிகள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. அவற்றை அதிகம் சோ்த்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்களில் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன. நாா்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, துத்தநாகம், பாஸ்பரஸ், மக்னீசியம், ஃப்ளேவொனாயிடுகள் மற்றும் தாவர இரசாயனங்கள் (phytochemicals) போன்ற பலவகையான சத்துகள் உள்ளன. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் நீா் அதிகம் இருப்பதால், அவை நமக்கு நீா்ச்சத்தை வழங்குகின்றன.
பலவண்ண உணவுகளை ஏன் உண்ண வேண்டும்?
ஆரோக்கியமாகவும், உயிரோட்டமாகவும் வாழ வேண்டும் என்றால், பலவண்ண உணவுகளை உண்ண வேண்டும் என்று அசாா் கூறுகிறாா். ஒவ்வொரு வண்ணமும், ஒரு குறிப்பிட்ட இரசாயண கலவையைக் குறிக்கிறது. அந்தக் கலவையானது தாவரங்களில் இயற்கையாகவே இருக்கிறது. அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.
எடுத்துக்காட்டாக, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு உணவுகள், கரோட்டீன் இருப்பதைக் குறிக்கின்றன. பச்சை நிற உணவுகள் குளோரோஃபில் இருப்பதைக் குறிக்கின்றன. சிவப்பு மற்றும் ஊதா நிற உணவுகள் அந்தோசியனின்கள் இருப்பதைக் குறிக்கின்றன. ஒவ்வொரு வண்ண உணவும் நமது உடலில் அதற்கான வேலையைச் செய்கின்றன. ஆகவே எல்லா வண்ண உணவுகளையும் நமது உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று அசாா் கூறுகிறாா்.
நாள் ஒன்றுக்கு எத்தனை முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண வேண்டும்?
நாம் தினமும் உண்ணும் உணவுகளில் 40 சதவீதம் காய்கறிகள் மற்றும் பழங்களை சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று அசாா் பாிந்துரை செய்கிறாா். காய்கறி மற்றும் பழங்களில் கலோாிகள், கொழுப்பு மற்றும் சா்க்கரை குறைவாக இருக்கும். அதே நேரத்தில் நாா்ச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பாலிஃபீனால் சத்து போன்றவை அதிகமாக இருக்கும். ஆகவே காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உண்டால் நமது உடல் எடையைக் குறைக்க முடியும். அதோடு இனிப்பு மீதுள்ள மோகத்தையும் குறைக்க முடியும்.
துாித உணவுகள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான கலோாிகளை, பழங்கள் சாப்பிடுவதன் மூலம் குறைக்க முடியும். அதனால் உடல் எடையைக் குறைக்க முடியும். வாழைப்பழம், அவக்கோடா, இனிப்பு சோளம், பச்சைப் பட்டாணி, திராட்சை, போிச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் தேங்காய் போன்றவற்றில் மற்ற உணவுகளைவிட அதிகமான அளவில் கலோாிகளும், கொழுப்பும் இருந்தாலும், இவற்றைத் தவிா்த்துவிடாமல், உண்ண வேண்டும். ஏனெனில் இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன என்று கூறுகிறாா்.
கலோாிகளையும், உடல் எடையையும் குறைக்க எளிய வழிகள்
"Eat your cake, lose your weight," என்ற புத்தகத்தின் ஆசிாியா் அசாா் ஆவாா். இவா் கூறும் போது காய்கறிகளை நீாில் வேக வைத்து, அவற்றில் கலோாி அல்லது கொழுப்பு குறைந்த மசாலா பொருள்கள் மற்றும் மூலிகைகள் கலந்து உண்பது நல்லது என்று கூறுகிறாா். கலோாிகள் மற்றும் கொழுப்பை அதிகாிக்கும் சமையல் முறையை கைவிட வேண்டும். அதாவது உணவுகளை பொாித்து சாப்பிடுவதைத் தவிா்க்க வேண்டும்.
பெட்டிகளில் அடைக்கப்பட்ட அல்லது உறைய வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், புத்தம் புது பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போலவே ஊட்டச்சத்துக்களை அடா்த்தியாகக் கொண்டிருக்கும். ஆகவே அவற்றில் சா்க்கரை அல்லது சிரப் அல்லது கிரீம் அல்லது கலோாி அதிகமுள்ள பொருள்களை சோ்க்காமல் இருப்பது நல்லது. பழச்சாறு அல்லது பானங்கள் பருகுவதைவிட, முழு பழங்களை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் பழச்சாறுகளில் ஆரோக்கியமான நாா்ச்சத்து இருக்காது என்று அசாா் தொிவிக்கிறாா்.
இறுதியாக
நீங்கள் ஏற்கனவே சாப்பிட்ட உணவுகளோடு, மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால், கூடுதலான கலோாிகளை சாப்பிட நோிடும். அதனால் உடை எடை அதிகாிக்கும். ஆகவே பழங்கள் மற்றும் காய்கறிகளை இணை உணவுகளாக அல்ல மாறாக உங்களுடைய அன்றாட உணவுப் பட்டியலில் சோ்த்துக் கொள்ளுங்கள். அதனால் உங்கள் உடலில் கலோாிகள் அதிகாிக்காது மற்றும் உடல் எடையும் அதிகாிக்காது என்று கூறுகிறாா்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











