Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க..
அடிக்கடி 'Meftal' மாத்திரையை எடுப்பீங்களா? அப்ப உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்..
Painkiller Meftal Side Effects: நீங்கள் தலைவலி, மாதவிடாய் கால வலி மற்றும் பிற வலிகளுக்கு வலி நிவாரண மாத்திரைகளை எடுக்கும் பழக்கத்தைக் கொண்டவரா? அதுவும் பாராசிட்டமால், மெஃப்டால் போன்ற வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரையின்றி அடிக்கடி எடுப்பீர்களா? அப்படியானால் இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்.
ஏனெனில் இந்திய மருந்தியல் ஆணையம் அனைத்து மருத்துவர்களுக்கும் மெஃப்டால் மாத்திரையின் பக்கவிளைவுகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது மெஃப்டால் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதன் பக்க விளைவாக டிரெஸ் சிண்ட்ரோம் (DRESS Syndrome) என்னும் ஒவ்வாமை ஏற்படுவதாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுவும் இந்த வலி நிவாரணி மாத்திரையை அதிகம் எடுக்கும் போது, அது இரத்தத்தில் அதிகமான அளவில் வெள்ளையணுக்களை உருவாக்க வாய்ப்புள்ளது. அதோடு, இந்த மாத்திரையை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் சரும எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்ற வாய்ப்புள்ளது. எனவே மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மாத்திரையை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மெஃப்டால் மாத்திரை எப்போது பரிந்துரைக்கப்படுகிறது?
மெஃப்டால் வலி நிவாரணி மாத்திரையில் மெஃபெனாமிக் அமிலம் உள்ளது. இது முடக்கு வாதம், கீல்வாதம், டிஸ்மெனோரியா, லேசானது முதல் மிதமான வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நிலைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
டிரெஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?
டிரெஸ் சிண்ட்ரோம் என்பது ஒரு ஒவ்வாமை எதிர்வினையாகும். இது சருமத்தில் தடிப்புகளை ஏற்படுத்துவதோடு, கடுமையான அரிப்புக்களையும் ஏற்படுத்துகிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால், அது மரணத்தையே ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டது. ஏனெனில் இது உடலினுள் அல்லது உள்ளுறுப்புகளுக்கு தீங்கை விளைவிக்கும்.
மருந்தாகவே இருந்தாலும், அளவுக்கு அதிகமானால், அது தீங்கை தான் உண்டாக்கும். அதுவும் வலி நிவாரண மாத்திரைகள், வலியில் இருந்து உடனடி நிவாரணத்தை அளித்தாலும், அவற்றை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது, நிச்சயம் அது கடுமையான பக்க விளைவை ஏற்படுத்து.
எனவே எப்போதும் எந்த ஒரு மாத்திரையை எடுப்பதாக இருந்தாலும், அதன் பக்கவிளைவுகளை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அதுவும் இந்த வகையான மருந்துகளை அழற்சிகளை ஏற்படுத்துவதோடு, செரிமான மண்டலம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புக்களை பாதிக்கலாம்.
மெஃப்டால், பாராசிட்டமால், இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரண மாத்திரைகளின் பக்கவிளைவுகள்:
வயிற்று உப்புசம்
மெஃப்டால், பாராசிட்டமால், இப்யூபுரூஃபன் போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளான (NSAIDs) வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதால் சந்திக்கும் ஒரு பொதுவான பக்க விளைவு தான் வயிற்று உப்புசம். ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுக்கும் போது, அவை வயிற்று சுவற்றை எரிச்சலடையச் செய்து, அஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் போன்றவற்றையும் உண்டாக்க வாய்ப்புள்ளது.
சிறுநீரக பிரச்சனைகள்
நீண்ட காலமாக ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுக்கும் போது, அது சிறுநீரகங்களுக்கு அதிகப்படியான வேலையைக் கொடுத்து, விரைவில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மோசமாக்கி பல பிரச்சனைகளை கொண்டு வரும். சில சமயங்களில் இது சிறுநீரகங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். தீவிரமான நிலையில் இது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
கல்லீரல் சேதம்
அசெட்டமினோஃபென் என்னும் பொருள் பாராசிட்டமால் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளில் காணப்படுகிறது. இந்த வலி நிவாரணி மாத்திரையை அதிகமாக எடுக்கும் போது, அது கல்லீரலை மோசமாக சேதப்படுத்தும். அத்துடல் ஆல்கஹாலை அருந்தும் போது, கல்லீரல் இன்னும் தீவிரமாக பாதிக்கப்படும்.
மயக்கம் மற்றும் தலைச்சுற்றல்
ஓபியாய்டுகள் மற்றும் சில ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் நிறைந்த வலி நிவாரணி மருந்துகளை அதிகம் எடுக்கும் போது, அது மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மற்றும் அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பிற அறிகுறிகள்
* மலச்சிக்கல்
* குமட்டல் மற்றும் வாந்தி
* தலைவலி
* சரும அரிப்பு
* உயர் இரத்த அழுத்தம்
* சுவாசிப்பதில் சிரமம்
வலி நிவாரணி மாத்திரைகளால் சந்திக்கும் பக்கவிளைவுகளானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இருப்பினும் எந்த ஒரு வலி நிவாரண மாத்திரைகளை எடுப்பதாக இருந்தாலும், மருத்துவரின் அறிவுரையின் பேரில் மட்டுமே எடுக்க வேண்டும். இப்படி எடுத்தால், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications