Latest Updates
-
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நைட் டைம்-ல இந்த அறிகுறிகளை சந்திக்குறீங்களா? அப்ப மூளையில் அடைப்பு இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்
Nighttime Stroke: மூளையில் உள்ள இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை செரிப்ரோவாஸ்குலர் நோய் என்று அழைப்பர். இந்நிலையானது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும். இது இரவுநேர பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.
இந்த நிலையானது நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கொலஸ்ட்ரால், கொழுப்பு படிவுகள் மற்றும் பிற பொருட்கள் தமனிகள்/இரத்தக்குழாய்களில் அப்படியே தேங்கி, மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கும் போது ஏற்படுகிறது.

இப்படி தமனிகள்/இரத்தக்குழாய்களில் தேங்கும் படிவுகள் பெருந்தமனி தடிப்பு என்று அழைக்கப்படும். இது பக்கவாதம், மினி பக்கவாதம் மற்றும் பிற மூளை தொடர்பான பிரச்சனைகளை வரவழைக்கும். இந்த நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உயிரிழப்பைத் தடுக்கலாம்.
மூளைக்கு செல்லும் தமனிகளில் அடைப்பு இருந்தால், அது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், பக்கவாதத்தை ஏற்படுத்தலாம். இந்த அடைப்புக்கு உடனடி சிகிச்சையை எடுக்காமல் விட்டுவிட்டால், பின் அது மூளையை கடுமையாக சேதப்படுத்திவிடும்.
சரி, இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். மூளையில் உள்ள இரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால், இரவு நேரத்தில் ஒருசில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
இரவு நேரத்தில் அதிகப்படியான வியர்வை
ஒருவருக்கு வியர்ப்பது என்பது சாதாரணம் தான். ஆனால் அந்த வியர்வை இரவு நேரத்தில் அதுவும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று இதயம் நமக்கு வெளிப்படுத்துகிறது என்பதற்கான அறிகுறியாகும். இப்படி அடிக்கடி இரவு நேரத்தில் அதிகமாக வியர்ப்பது, அதிகப்படியான இதயத் துடிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதயத்தின் வெப்பநிலை கட்டுப்பாட்டில் பிரச்சனை உள்ளது என்பதையும் உணர்த்துகிறது.
நெஞ்சு வலி அல்லது அசௌகரியம்
நெஞ்சு பகுதியில் வலிப்பது என்பது இதய பிரச்சனையின் ஒரு முக்கியமான அறிகுறியாக இருந்தாலும், இரவு நேரத்தில் இப்படி நெஞ்சு பகுதியில் அசௌகரியம் அல்லது விவரிக்க முடியாத வலியை உணர்ந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இரவு தூங்கும் நேரத்தில் இப்படி நெஞ்சு வலி அல்லது அழுத்தத்தை சந்தித்தால், இதயம் பெரிய ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்.
சீரற்ற இதயத் துடிப்பு
இரவு நேரத்தில் உங்கள் இதயத் துடிப்பு சீரற்று உள்ளதா? அப்படியானால் அது அரித்மியா அல்லது பிற இதய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே இதயத் துடிப்பைக் கண்காணித்து இதய ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மூச்சுத்திணறல்
இரவு நேரத்தில் மூச்சு விட முடியாமல் திணறுவது இதய செயலிழப்பு அல்லது பிற இதய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். எனவே திடீரென்று இரவு நேரத்தில் மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமத்தை சந்தித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மிகுந்த உடல் சோர்வு
காலையில் எழுந்ததும் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், இதயம் சரியாக ஓய்வெடுக்கவில்லை என்று அர்த்தம். இப்படியே தினமும் காலையில் சோர்வை சந்தித்தால், இதயம் வேலை செய்ய கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது மற்றும் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று அர்த்தம்.
கால் அல்லது பாதங்களில் வீக்கம்
கால்களின் கீழ் பகுதியில் வீக்கம் அல்லது திரவ தேக்கத்தை இரவு நேரத்தில் சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது இதய செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் இந்த கால் வீக்கமானது இரவு நேரத்தில் தீவிரமாக இருந்தால், அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரிடம் சென்று தெரிவித்து பரிசோதனை செய்யுங்கள்.
தலைச்சுற்றல்
இரவு நேரத்தில் எழும் போது தலைச்சுற்றலை சந்திக்கிறீர்களா? அப்படியானால் இதய பிரச்சனையால் மூளைக்கு போதுமான இரத்தம் கிடைப்பதில்லை என்று அர்த்தம். இப்படியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
