Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நாக்கை தெரியாம கடிச்சிட்டீங்களா? வலி தாங்க முடியலையா? இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
Tongue Bites In Tamil: நாம் எப்போதாவது தெரியாமல் நாக்கை கடித்து விடுவது உண்டு. குறிப்பாக சாப்பிடும் போது இந்த பிரச்சினை அடிக்கடி ஏற்படும். இப்படி நாக்கை கடிப்பதால் அந்த இடத்தில் சிலருக்கு வலி அல்லது புண்கள் உண்டாவது உண்டு. சில சமயங்களில் கடுமையான வலி கூட ஏற்படும். அதன் பிறகு நம்மால் ஒழுங்காக உணவு சாப்பிட இயலாது.
கடுமையான வலி மற்றும் அசெளகரியத்தை உணர நேரிடும். சிறிய அளவில் நாக்கை கடித்தால் கூட சிலருக்கு இரத்தமே வந்து விடும். நாமும் இந்த வலியை குறைக்க நிறைய முயற்சிகளை செய்து இருப்போம். ஆனால் வலி என்னவோ குறைந்தபாடாக இருக்காது. இப்படி நீங்கள் தெரியாமல் நாக்கை கடித்து விட்டால் அந்த வலியை போக்க சில எளிய டிப்ஸ்களை நீங்கள் வீட்டில் இருந்தே முயற்சி செய்யலாம்.

நாக்கை எப்போது கடிக்க நேரிடும்?
* உணவை உண்ணும் போது கடிக்க நேரிடலாம்
* தூங்கும் போது கடிக்க நேரிடலாம்
* மன அழுத்தம் அல்லது பதட்டம் உள்ள சமயங்களில் கடிக்க நேரிடலாம்
* வலிப்பு வரும் சமயங்களில் கடிக்க நேரிடலாம்
* விளையாடும் போது கடிக்க நேரிடலாம்.
தெரியாமல் நாக்கை கடித்து விட்டால் அதற்கான சில வீட்டு வைத்திய முறைகள்:
உப்பு தண்ணீரில் கொப்பளியுங்கள்
ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறுதளவு உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளியுங்கள். இது தொற்று நோயை தடுக்க உதவுகிறது. நாக்கை கடித்த இடத்தில் எதாவது பாக்டீரியா வளர்ச்சி இருந்தால் அதை தடுக்க உதவுகிறது. உப்பில் உள்ள ஆன்டி செப்டிக் பண்புகள் அழற்சியை போக்க உதவுகிறது. இந்த உப்பு நீரை நீங்கள் மவுத்வாஷாகவும் பயன்படுத்தலாம்.
ஐஸ் ஒத்தடம்
ஐஸ் ஒத்தடம் எப்பொழுதும் உங்கள் வலியை குறைக்க உதவுகிறது. ஐஸ் ஒத்தடம் கொடுக்கும் போது அது நரம்புகளை மரத்துப் போகச் செய்கிறது. இது இரத்த நாளங்களை சுருக்குகிறது. உங்களுக்கு வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். எனவே நீங்கள் நாக்கை கடித்து விட்டால் உடனடியாக ஐஸ் ஒத்தடம் கொடுங்கள். ஒரு சில ஐஸ் கட்டிகளை ஒரு மெல்லிய துணியில் கட்டி 10-15 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.
தேன் பயன்படுத்துதல்
தேனில் பல இயற்கையான பண்புகள் உள்ளன. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. நாக்கை கடித்து இடத்தில் சிறுதளவு தேனை தடவி வாருங்கள். இது வலியை குறைக்கிறது. தொற்று நோயை போக்குகிறது. தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
கெமோமில் டீ ஒத்தடம்
கெமோமில் டீ ஒத்தடம் கொடுப்பதன் மூலம் நாக்கு கடியை சரி செய்ய முடியும். கெமோமில் டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகள் காணப்படுகிறது. ஒரு கப் கெமோமில் டீயை சூடுபடுத்தி ஒரு பஞ்சை எடுத்து நனைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வாருங்கள். வலி அப்படியே குறைந்து விடும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் குணப்படுத்தும் பண்புகள் நிறையவே காணப்படுகிறது. நாக்கை கடித்த இடத்தில் சிறுதளவு கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வரலாம். இந்த ஜெல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
மஞ்சள் பேஸ்ட்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. மஞ்சளை குழைத்து பேஸ்ட்டாக்கி அதை நாக்கை கடித்த இடத்தில் அப்ளை செய்யுங்கள். இது பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வலியை போக்க உதவுகிறது.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
* நாக்கை கடித்த உடன் நிறைய இரத்தம் வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
* மறுபடியும் மறுபடியும் இரத்தக் கசிவு இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
* எதாவது அழற்சி ஏற்பட்டு இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
* வலி அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
* உங்களுக்கு காய்ச்சல் அடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications