Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Mouth Breathing: நீங்க வாயை திறந்து தூங்குவீங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க.. ஷாக் ஆயிடுவீங்க...
Mouth Breathing: நாம் சுவாசிக்கும் செயல்முறையானது மூக்கின் வழியாகத் தான் நடக்கும். ஆனால் சில சமயங்களில், அதாவது சளி அல்லது ஜலதோஷம் பிடித்திருக்கும் தருணங்களில் நம்மால் மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாது. அப்போது நம்மை அறியாமலேயே நாம் வாயின் வழியாக சுவாசிப்போம்.
ஆனால் இப்படி சளி, ஜலதோஷத்தின் போது வாயின் வழியாக சுவாசித்தால் பிரச்சனை இல்லை. மாறாக காரணம் ஏதும் இல்லாமலேயே வாயின் வழியாக சுவாசித்தால், அது உடலினுள் ஏதோ மோசமான பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் சுவாசிக்கும் போது உடலுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் கிடைப்பதோடு, உடலில் இருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

வாயின் வழியாக சுவாசிப்பது
எப்போது நம்மால் மூக்கின் வழியாக சுவாசிக்க முடியவில்லையோ, அப்போது நாம் வாயின் வழியாகத் தான் சுவாசிக்க வேண்டியிருக்கும். அதோடு வாயின் வழியாக சுவாசிக்கும் போது தசைகளுக்கு வேகமாக ஆக்ஸிஜன் கிடைக்கும். ஆனால் ஒருவர் தூங்கும் போது இப்படி வாயின் வழியாக சுவாசித்தால், மிகுந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வாயின் வழியாக சுவாசிக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்
என்ன தான் வாயின் வழியே சுவாசித்தாலும், நிறைய பேருக்கு நாம் மூக்கின் வழியாகவே சுவாசிப்பது போன்று இருக்கும். ஆனால் வாயின் வழியே சுவாசித்தால் பின்வரும் அறிகுறிகளை சந்திக்க நேரிடும். அவை:
* குறட்டை
* வாய் வறட்சி
* வாய் துர்நாற்றம்
* மிகுந்த சோர்வுடன் எழுவது
* மந்தமான மனநிலையில் இருப்பது
* கண்களைச் சுற்றி கருவளையங்கள் காணப்படும்.
வாயின் வழியாக சுவாசிக்க எதெல்லாம் காரணமாக உள்ளது?
நாம் சுவாசிக்கும் காற்றானது மென்மையான மூச்சுக்குழாயின் வழியாக பயணிக்கிறது. இப்படிப்பட்ட மூச்சுக்குழாயில் தடை ஏற்படும் போது, ஒருவர் வாயின் வழியாக சுவாசிக்க நேரிடுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவர் வாயின் வழியாக சுவாசிக்க பல காரணங்கள் உள்ளன. அதில் மூக்கடைப்பு, வீங்கிய டான்சில்கள், அடினாய்டுகள், மன அழுத்தம் மற்றும் பதட்டம், நாசி பாலிப்கள், விரிவாக்கப்பட்ட டர்பைனேட்டுகள் அல்லது சிறு கட்டிகள் போன்றவை அடங்கும்.
வாயால் சுவாசிக்கும் போது எம்மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்?
மருத்துவர்களின் கூற்றுப்படி, வாயால் சுவாசிக்கும் போது வாய் அதிகமாக வறண்டு போவதைத் தவிர, வாயில் பாக்டீரியாக்கள் வேகமாக பெருக்கமடைந்து பின்வரும் பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். அவை:
* வாய் துர்நாற்றம்
* ஈறு நோய்கள், பல் சொத்தை
* தொண்டை மற்றும் காதுகளில் தொற்று
வாயால் சுவாசிக்கும் போது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் செறிவு குறைவாக இருக்கும். இதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய செயலிழப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளன. ஆய்வுகளில் வாய் வழியாக சுவாசிப்பது, நுரையீரல் செயல்பாட்டை மோசமாக பாதிப்பதோடு, ஆஸ்துமா உள்ளவர்களின் நிலைமையை இன்னும் மோசமாக்குவது தெரிய வந்துள்ளது. அதுவும் குழந்தைகள் அதிகமாக வாயால் சுவாசித்தால், அது அவர்களின் தோரணையை மோசமாக்குவதோடு, அறிவாற்றல் சவால்களையும் ஏற்படுத்தக்கூடும்.
வாயால் சுவாசிப்பது தடுப்பது எப்படி?
வாயால் சுவாசிப்பதைத் தடுக்கும் சில வழிகள் பின்வருமாறு:
* உப்பு நீரால் வாயை அடிக்கடி கொப்பளிக்க வேண்டும்.
* தலையை உயரமான வைத்து முதுகு தரையில் படும்படி நேராக படுக்க வேண்டும். இப்படி தூங்குவதன் மூலம் சுவாசப்பாதை விரிவடைந்து, சுவாசிக்கும் செயல்முறை எளிதாக நடக்கும்.
* சளி, ஜலதோஷம் எதுவும் பிடிக்காமல் இருக்க, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* வீட்டில் தூசிகள், அழற்சியை ஏற்படும் துகள்கள் இல்லாமல் இருக்க வீட்டில் காற்று வடிகட்டிகளை நிறுவலாம்.
* முக்கியமாக தினமும் சுவாசப் பயிற்சிகள் மற்றும் யோகாவில் ஈடுபட வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications