Latest Updates
-
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்..
செக்ஸில் உங்களுக்கு ஆர்வம் குறையுதா? அப்ப உங்க உடலில் இந்த பிரச்சனைகள் இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
Low Libido In Tamil: இன்றைய நாளில் பெரும்பலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை குறைந்த லிபிடோ. லிபிடோ என்பது பாலியல் ஆர்வம். உங்கள் செக்ஸ் வாழ்க்கை உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு தொடர்புடையது என்பது உங்களுக்குத் தெரியுமா?
உடலுறவில் ஆர்வம் இழப்பது அல்லது குறைந்த பாலியல் ஆசையை கொண்டிருப்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. இது அகநிலை மற்றும் புறநிலை காரணங்களால் பாதிக்கப்படலாம். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாது என்றாலும், குறைந்த பாலியல் ஆர்வம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய கூறுகிறது.

பாலியல் செயல்பாடுகளை பாதிக்கும் காரணிகள் மனம் மற்றும் உடல் இரண்டையும் உள்ளடக்கியது. இக்கட்டுரையில், குறைந்த பாலியல் ஆர்வம் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பிறப்புறுப்பு பகுதிக்கு போதுமான இரத்தம் மற்றும் நரம்பு இயக்கம் செல்வதைத் தவிர, டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற பாலியல் ஹார்மோன்களின் இருப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் பாலியல் ஆசை இரண்டிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. பாலியலில் ஆர்வம் இழப்பது தம்பதிகள் இருவருக்கும் கவலையை ஏற்படுத்தும்.
ஒருவர் குறைந்த லிபிடோவை பிரச்சனையை சந்திக்குபோது, அது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் உள்ள கவலைகளை குறிக்கலாம். உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருப்பது உங்கள் பாலியல் வாழ்க்கையையே பாதிக்கும். மேலும், அது மற்ற உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
ஆரோக்கியத்தைப் பற்றி குறைந்த லிபிடோ என்ன சொல்கிறது?
- குறைந்த பாலியல் ஆசை அல்லது குறைந்த லிபிடோவிற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.
- கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநல நிலைமைகள்
- மூட்டுவலி மற்றும் நீரிழிவு நோய் போன்ற சுகாதார நிலைகள்
- செயல்திறன் கவலை மற்றும் விறைப்புத்தன்மை
- ஆண்களுக்கு முன்கூட்டியே விந்து வெளியேறுதல்
- பெண்களுக்கு வலிமிகுந்த உடலுறவு போன்ற பாலியல் செயலிழப்புகள்
- குறைந்த டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் சமநிலையின்மை மற்றும்
- நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகள்
பொதுவான காரணம்
பெண்களுக்கு வயதாகும்போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. மேலும் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறையும் போது (பொதுவாக 40கள் மற்றும் 50களில்), அவர்களுக்கு மெனோபாஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. ஈஸ்ட்ரோஜனின் குறைந்த அளவு பாலியல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, இது குறைந்த லிபிடோ, யோனி வறட்சி அல்லது உயவு இல்லாமைக்கு வழிவகுக்கும். மேலும், இது வலிமிகுந்த உடலுறவுக்கு வழிவகுக்கும் மற்றும் மனநிலை மற்றும் தூக்க முறைகளை சீர்குலைக்கும்.
ஒரு ஆண் இளமைப் பருவத்தை அடையும் போது, அவனது டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், அவருக்கு வயதாகும்போது, டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையத் தொடங்குகிறது. குறிப்பாக 40 அல்லது 45 வயதிற்குப் பிறகு ஆண்களுக்கு பாலியல் ஆர்வம் குறைய ஆரம்பிக்கும்.
அதற்கு எப்படி சிகிச்சை அளிக்கலாம்?
முழுமையான சிகிச்சை மூலம், குறைந்த பாலியல் ஆசை மற்றும் உடல்நல அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். முதலில் உங்கள் குறைந்த பாலியல் ஆசைக்கு பின்னால் உள்ள காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர், சிகிச்சையை மேற்கொண்டு லிபிடோவை அதிகரிக்க உதவும் மனதையும் உடலையும் தயார் செய்கிறார்கள்.
ஹார்மோன் மாற்று சிகிச்சை
- மன ஆரோக்கியம் அல்லது பாலியல் சுகாதார நிலைமைகள் மாறுதல்
- பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகள்
- மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது
- தம்பதிகள் சிகிச்சை
- லிபிடோ ஒரு ஆன் மற்றும் ஆஃப் சுவிட்ச் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்; அது அகநிலை. அதாவது, ஒருவரின் வயது மற்றும் பெண்களுடன், அவர்களின் மாதவிடாய் சுழற்சி போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபாடுகள் உள்ளன.
இறுதிக்குறிப்பு
சில பிரச்சனைகள் ஒரு நபரின் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை பாதிக்கும். சிகிச்சை மேற்கொள்வதற்கு முன், குறைந்த பாலியல் ஆர்வத்துக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை கவனிக்கப்பட வேண்டும். பாலியல் செயலிழப்புகள் அல்லது கவலைகள் பொதுவானவை மற்றும் சிகிச்சையளிக்கக்கூடியவை. எனவே, உங்கள் பாலியல் வாழ்க்கையும் உடல் நல ஆரோக்கிய வாழ்க்கையையும் சரியாக கவனித்து கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

