Latest Updates
-
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம்
இத்தாலியில் ஏசி மூலம் பரவும் புதிய கொடிய நோய்.. இதுவரை 4 பேர் பலி... இதன் அறிகுறிகள் என்ன?
Legionnaires' Disease Outbreak In Italy: இத்தாலியில் உள்ள மிலனில் கொடிய லெஜியோனேயர்ஸ் நோய் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 53 பேர் இத்தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஐரோப்பாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், இத்தாலிக்கு விடுமுறைக்கு வருபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் அல்லது ECDC இன் படி, லோம்பார்டி பகுதியில் உள்ள கோர்சிகோ மற்றும் புக்கினாஸ்கோவில் லெஜியோனேயர்ஸ் நோயின் பரவல் காரணமாக டஜன் கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்ப் பரவலைத் தடுக்க அதிகாரிகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நோய்த்தொற்று முக்கியமாக ஏர் கண்டிஷனர் மூலம் பரவுகிறது. இருப்பினும் ஆதாரம் இன்னும் முழுமையாக அறியப்படாததால், அப்பகுதி மக்கள் இன்னும் அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். EDC-ன் படி, 26 முதல் 94 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொற்றால் இறந்தவர்கள் என்றால் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கூடுதல் ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்களாவர். தற்போது இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 37 பேர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
லெஜியோனேயர்ஸ் நோய் என்றால் என்ன?
லெஜியோனேயர்ஸ் நோய் என்பது ஒரு வகை நிமோனியா அல்லது நுரையீரல் தொற்று ஆகும். இது லெஜியோனெல்லா என்னும் பாக்டீரியாவை சுவாசிப்பதன் மூலம் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியால் நுரையீரல், மூளை மற்றும் குடலை பாதிக்கலாம். இத்தொற்று காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தான் தெரியும். ஆனால் இது உயிரையே பறிக்கும் அளவில் ஆபத்தானது.
லெஜியோனேயர்ஸ் நோய் பொதுவாக லெஜியோனெல்லா பாக்டீரியா உள்ள நீராவியால் ஒருவரை பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்த பாக்டீரியா ஏர் கண்டிஷனர்கள் மூலம் பரவுகிறது மற்றும் இது 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டவர்களை கணிசமாக அச்சுறுத்துகிறது.
நுரையீரலை பாதிக்கும் லெஜியோனெல்லா பாக்டீரியாவில் 60 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இந்த பாக்டீரியா ஏரிகள், நீரோடைகள் மற்றும் மண்ணில் இயற்கையாகவே காணப்படுகிறது. இந்த பாக்டீரியா உள்ள நீரை சுவாசிக்கும் போது அது நுரையீரலில் நுழைந்து தொற்றை உண்டாக்கலாம்.
லெஜியோனேயர்ஸ் நோயின் அறிகுறிகள்
லெஜியோனேயர்ஸ் நோயின் அறிகுறிகளானது நிமோனியா போன்றே அறிகுறிகளைக் கொண்டிருக்கும். அதுவும் இந்த பாக்டீரியா உடலில் நுழைந்த 2 முதல் 14 நாட்களுக்கு பின், பின்வரும் அறிகுறிகளை வெளிக்காட்டும். அவையாவன:
* அதிக காய்ச்சல்
* மூச்சுத்திணறல்
* தொடர் இருமல்
* கடுமையான தலைவலி
* தசை வலி
* வயிற்றுப்போக்கு
* குழப்பம்
* குமட்டல்
* இருமல் கலந்த இரத்தம்
* கடுமையான வயிற்று வலி
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
