Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால் 35 பேர் பலி... மெத்தனால் உடலில் சென்றால் இப்படி தான் உயிரைப் பறிக்குமா?
Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் சுமார் 107 பேர் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீதமுள்ளவர்கள் மோசமான நிலையில் மருத்துவமனையில் இருப்பதோடு, அவர்களுக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 30-க்கும் அதிகமானோர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

என்ன தான் சாராயம் விற்பதை தடை செய்யப்பட்டாலும், இன்னும் கள்ளச்சாராயம் ஆங்காங்கு விற்கப்பட்டு தான் வருகின்றன. கள்ளச்சாராயம் என்பது அரசு அனுமதியின்றி காய்ச்சி விற்பதாகும். கள்ளச்சாராயத்தை காய்ச்சும் போது அதில் போதைக்காக சில பொருட்கள் சேர்க்கப்படுவதுண்டு.
அதில் எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் அனைத்துவிதமான மது வகைகளிலும் போதைக்காக சேர்க்கக்கூடியது. இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. ஆனால் சாராயத்தை காய்ச்சும் போது மெத்தனாலை போதைக்காக கலக்கும் போது இது உயிரைப் பறிக்கும் அளவில் நஞ்சாகிவிடுகிறது.
இப்படிப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடிக்கும் போது தான் நிறைய உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் இப்படியான கள்ளச்சாராயத்தைக் குடித்து தான் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஏன், கள்ளக்குறிச்சியிலும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் தான் தற்போது இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மெத்தனால் எங்கு பயன்படுத்தக்கூடியது?
மெத்தனால் என்பது தொழிற்சாலைகளில் அரசு அனுமதியுடன் வேதிப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருளாகும். மெத்தனாலில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் போதை இருக்கும். இதை சரியாக நீர்த்து போகாமல் குடித்தால், கொடிய நஞ்சாகி உயிரையே பறித்துவிடும். பெரும்பாலும் இந்த மெத்தனாலை ஆல்கஹால் தயாரிப்பில் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் சாராயம் காய்ச்சுபவர்கள் குறைந்த செலவில் அதிக போதையைக் கொடுப்பதற்காக மெத்தனாலைப் பயன்படுத்துகிறார்கள்.
மெத்தனால் கலந்த மதுவைக் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?
மெத்தனால் கலந்த மதுவைக் குடிக்கும் போது, முதலில் உணவு மண்டலம் பாதிக்கப்படும். இதன் விளைவாக குமட்டல், வாந்தி, கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தெரியத் தொடங்கும். அதைத் தொடர்ந்து நரம்பு மண்டலம் சீர்குலைந்து போகும்.
இந்த நிலையில் தான் மெத்தனால் கலந்த மதுவைக் குடித்தவர்கள் போதை ஏறிய மகிழ்ச்சியை உணர்வார்கள். ஆனால் நரம்பு மண்டலம் சீர்குலையத் தொடங்கி மொத்தமாக பாழானதும், வாயில் இருந்து நுரை தள்ளத் தொடங்கும். அந்த நுரை அப்படியே நுரையீரலுக்குள் செல்ல ஆரம்பித்து, அதனால் மூச்சு அடைக்கத் தொடங்கும்.
நரம்பு மண்டலம் சேதமடையத் தொடங்கியதும், மூளையும் பாதிப்படையத் தொடங்கும். பின் மெதுவாக மூளையில் உள்ள செல்கள் அழியத் தொடங்கிவிடும். அதன் பின் கண் பார்வை மங்கி, காது கேட்காமல், அப்படியே மயக்கமடைய நேரிடும். இந்த அனைத்து செயல்களும் சில நிமிடங்களிலேயே நடக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications