Latest Updates
-
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
பாக்கெட் பால் தீங்கு விளைவிக்குமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க...
Packet Milk In Tamil: உடல் ஆரோக்கியத்திற்காக நாம் தினமும் உட்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பானம் தான் பால். இந்த பாலில் உடலுக்கு வேண்டிய பல இன்றியமையாத சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் கால்சியம், புரோட்டீன், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளன.
இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும், தசைகளின் வளர்ச்சிக்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் இதில் உள்ள சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றன. எனவே ஆரோக்கியமாக இருக்க தினமும் பாலை குடிக்க வேண்டியது அவசியம்.

தற்போது மாட்டு பாலை விட, பாக்கெட் பால் அதிகம் விற்கப்பட்டு வருகிறது, குறிப்பாக நகர்புறங்களில். மேலும் இந்த பாக்கெட் பால் குறித்து பல வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதைப் பார்க்கும் போது பலரது மனதிலும் பாக்கெட் பால் நல்லதா, கெட்டதா என்ற ஒரு கேள்வி எழுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலும், டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கெட் பால் தீங்கை விளைவிக்குமா என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "பாலிதீன் கவரை ஒழித்தவர்கள், பாக்கெட் பாலை மட்டும் ஏன் ஒழிக்கவில்லை. பாக்கெட் பாலுக்கு பயன்படுத்தும் கவரும் பிளாஸ்டிக் தானே என்று பலரும் கேட்கலாம். ஆனால் பிளாஸ்டிக்கில் உணவு தர மற்றும் உணவு தரமற்ற பிளாஸ்டிக்குகள் என இரண்டு வகைகள் உள்ளன. அதில் பால் பாக்கெட்டில் இருப்பது LDPE (Low Density Poly Ethylene). நாம் குடிக்கும் தண்ணீர் பாட்டிலில் இருப்பது HDPE (High Density Poly Ethylene). PET பாட்டில்கள் எல்லாம் உணவு தர பிளாஸ்டிக்கில் வந்துவிடும்.
ஆனால் பிவிசி, பாலிகார்பனேட் போன்றவை எல்லாம் உணவு தரமற்ற பிளாஸ்டிக்குகள். இவற்றையெல்லாம் பயன்படுத்தக்கூடாது. பாலிதீன் கவரில் இருப்பது எல்லாம் அனைத்தும் கலந்தவை என்பதால் இந்த பாலிதீன் கவரைப் பயன்படுத்த அரசு தடை செய்தது." என்று டாக்டர் கூறினார்.
மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை தவிர்ப்பது எப்படி?
"பால் பாக்கெட்டில் பயன்படுத்துவது LDPE. இது மிகவும் பாதுகாப்பானது. இதில் பாலை ஊற்றினாலும் எந்த ஒரு வேதியியல் எதிர்வினைகளும் ஏற்படாது, நச்சுக்களை வெளியிடாது மற்றும் இதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென்கள் எதுவும் கிடையாது.
மைக்ரோ பிளாஸ்டிக் என்று கூறுவார்களே, அது இருக்காதா என்று கேட்கலாம். வாய்ப்புள்ளது, ஆனால் அது பால் பாக்கெட்டை அப்படியே சூடுபடுத்தினால், அது உருகி மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறலாம். மேலும் சூடான பாலை பாக்கெட்டில் ஊற்றினால், அப்போது மைக்ரோ பிளாஸ்டிக் ஆவதற்கு வாய்ப்புள்ளது.
இருப்பினும் பாக்கெட் பாலில் இருப்பது பாஸ்சுரைஸ்டு பால். அதாவது வேகமாக பாலை சூடேற்றி, வேகமாக குளிர வைக்கும் செயல்முறை பயன்படுத்தி பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. இதனால் இது கெட்டுப்போக வாய்ப்பில்லை.
ஒருவேளை பால் பாக்கெட்டை வெயிலில் நேரடியாக வைத்தால், அது உருக வாய்ப்புள்ளது. இந்த தவறுகளை தவிர்த்தாலே மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை." என்று டாக்டர் கூறினார்.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாமா? கூடாதா?
"ஏற்கனவே ஒரு குழுவினர் பால் நல்லதல்ல, குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்துங்கள் என்று தவறான கருத்தை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்டு பல பெற்றோர்களும் பால் கொடுப்பதை நிறுத்தி வருகிறார்கள். ஆனால் பாலில் லாக்டோஃபெர்ரின் உள்ளது. இது வைரஸ்களை எதிர்த்து போராடக்கூடியது.
பாலுக்கு அழற்சி உள்ள குழந்தைகளுக்கு மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்களுக்கு மட்டும் தான் பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலை குடித்து எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால், அந்த குழந்தைகளுக்கு பாலை தினமும் தவறாமல் கொடுங்கள். வளரும் குழந்தைகளுக்கு பால், முட்டை, வாழைப்பழம் ஆகிய மூன்றுமே மிகவும் முக்கியமானது. எனவே இவற்றைக் கொடுப்பதைத் தவிர்க்காதீர்கள் என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! இதுவரை உங்களுக்கு பாக்கெட் பால் குறித்து சந்தேகம் இருந்திருந்தால், இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆகவே இனி பாக்கெட் பால் குடிப்பது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
