Latest Updates
-
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
மது அருந்திவிட்டு சாப்பிடுவது நல்லதா? மது அருந்தும் முன் சாப்பிடுவது நல்லதா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன?
மது அருந்துவது என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் வேகமாக பெருகிவரும் பழக்கமாக இருக்கிறது. மது அருந்துவது தற்காலிக இன்பத்தை அளித்தாலும் அது நிச்சயமாக ஒரு மோசமான பழக்கம் என்பதை மறந்து விடக்கூடாது.
மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க அதனை சரியாக அருந்த வேண்டும். மது அருந்தும் போது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அதனை மது அருந்துவதற்கு முன் செய்ய வேண்டுமா அல்லது மது அருந்திய பின் சாப்பிட வேண்டுமா என்பது பலருக்கும் ஒரு தீர்க்க முடியாத குழப்பமாகும்.

ஆல்கஹால் வயிறு மற்றும் சிறுகுடல் வழியாக உங்கள் இரத்த ஓட்டத்தில் நுழைகிறது. உங்கள் வயிறு காலியாக இருந்தால், ஆல்கஹால் உங்கள் இரத்த ஓட்டத்தில் வேகமாக நுழையும். இது உங்களை விரைவாக சோர்வடையச் செய்யும், உங்கள் குடிப்பழக்கத்தை நிர்வகிப்பது கடினமாக்கும். எனவே மது அருந்துவதற்கு முன் ஏன் சாப்பிடலாமா? கூடாதா? என்பதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
மது அருந்தும் முன் சாப்பிடலாமா?
மது அருந்துவதற்கு முன் சாப்பிடுவது நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. மது அருந்தும் முன் உணவு உண்பதால் பல நன்மைகள் உள்ளன. முதலில், உங்கள் வயிற்றில் உள்ள உணவின் நீர் உள்ளடக்கம் மதுவை நீர்த்துப்போகச் செய்கிறது.
இரண்டாவதாக, வயிற்றில் ஏற்கனவே இருக்கும் உணவில் உள்ள புரதங்கள், கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஆல்கஹால் உறிஞ்சப்படுவதை மெதுவாக்கும். இறுதியாக, ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை வழங்குகிறது, இது ஆல்கஹாலால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.
மது அருந்தும் போது சாப்பிடலாமா?
நீங்கள் மது அருந்தும் போது சாப்பிட விரும்பினால், உப்பு நிறைந்த தின்பண்டங்களை தவிர்க்கவும். இவை உங்களுக்கு தாகத்தை உண்டாக்கும், எனவே நீங்கள் அதிகமாக குடிக்கலாம். மதுவால் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க மதுபானம் அருந்துவதற்கு முன்னும் பின்னும் தண்ணீரைக் குடிப்பதும் முக்கியம்.
மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள்
மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகளில் அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும். நீங்கள் வெள்ளரி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் முள்ளங்கி ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
மது அருந்தும் முன் நீங்கள் பழம் சாப்பிட விரும்பினால், வாழைப்பழம் அதற்கான சிறந்த தேர்வாக இருக்கும். இதில் நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மது அருந்துவதற்கு எவ்வளவு நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்?
நீங்கள் மது அருந்துவதற்கு முன் சிறிது சாப்பிடுவது முக்கியம். நீங்கள் மது அருந்தும் போது சாப்பிட்டால், ஆல்கஹால் உடனடியாக வயிற்றில் உறிஞ்சப்படும். ஆல்கஹால் உறிஞ்சும் விகிதத்தை குறைக்க, உங்கள் மதுபானத்தின் முதல் சிப்பை எடுத்துக்கொள்வதற்கு குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன் சாப்பிட வேண்டும்.
மது அருந்திவிட்டு சாப்பிடலாமா?
அதிகப்படியான குடிப்பழக்கத்திற்குப் பிறகு நேரடியாக தண்ணீர் குடிப்பது அல்லது உணவை உட்கொள்வது ஹேங்கொவரைத் தவிர்க்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், 2015 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஐரோப்பிய நியூரோஃபார்மகாலஜி (ECNP) மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி, அடுத்த நாள் காலையில் உங்கள் தலை ஹேங்கொவர் வலியிலிருந்து விடுபடும் என்பதற்கு இந்த உத்தி உத்தரவாதம் அளிக்காது என்று கூறுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

