Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உண்மையில் முட்டையின் மஞ்சள் கரு ஆபத்தானதா? டாக்டர் ஃபரூக் என்ன சொல்றாருன்னு பாருங்க...
Egg Yolk: நாம் உண்ணும் உணவுகளிலேயே உயர்தரமான புரோட்டீனைக் கொண்ட ஒரு உணவுப் பொருள் தான் முட்டை. தினமும் முட்டையை உட்கொண்டு வந்தாலே, உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களுள் பலவற்றைப் பெறலாம்.
ஆனால் நம் மக்களிடையே முட்டைக் குறித்து ஒரு தவறான கருத்து உள்ளது. அது முட்டையின் வெள்ளைக்கரு தான் நல்லது, அதன் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது. எனவே இதை சாப்பிட்டால் மாரடைப்பு சீக்கிரம் வந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதன் காரணமாக நிறைய பேர் முட்டையை சாப்பிடும் போது அதன் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுகிறார்கள். நீங்களும் இப்படி தான் முட்டையை சாப்பிடுகிறீர்களா? உண்மையிலேயே முட்டையின் மஞ்சள் கரு அவ்வளவு ஆபத்தானதா? பலரது மனதில் இருக்கும் இந்த கேள்விக்கு சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவரான டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா தனது சமூக வளைத்தள பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "முட்டையை சாப்பிடுங்கள் என்று சொன்னாலே பலருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் என்னவென்றால், அதில் இருக்கும் மஞ்சள் கருவை தூக்கிப் போட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடவா என்று கேட்கிறார்கள்.
உலகிலேயே நம் நாட்டைத் தவிர, வேறு எந்த நாடுகளிலும், ஏன் முட்டை குறித்து அதிக ஆராய்ச்சி செய்த நாடுகளில் கூட முட்டை என்று சொன்னாலே, அது முழு முட்டையை தான் சொல்வார்கள். மஞ்சள் கருவும், வெள்ளைக்கருவும் சேர்ந்தது தான் முட்டை.
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. சரி, மஞ்சள் கருவில் என்ன பிரச்சனை என்று கேட்டால் கொலஸ்ட்ரால் உள்ளது என்று சொல்கிறார்கள். கொலஸ்ட்ரால் என்பது மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று. இது மிருகங்கள் மூலமாகத் தான் நமக்கு கிடைக்கும். இந்த கொலஸ்ட்ரால் நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பது தெரிந்தால், அதை யாரும் பீதியுடன் பார்க்கமாட்டார்கள்." என்று கூறினார்.
கொலஸ்ட்ரால் நன்மைகள்
"நமது உடலில் இருக்கும் ட்ரில்லியன் கணக்கான செல்களில் உள்ள செல் சவ்வு கொலஸ்ட்ராலால் ஆனது. ஆணாகவும், பெண்ணாகவும் இருப்பதற்கு தேவையான ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்கள் சரியாக கிடைக்க வேண்டுமானால், அதற்கு இந்த கொலஸ்ட்ரால் தேவை. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி தோலை உற்பத்தி செய்ய கொலஸ்ட்ரால் தேவை.
இப்படி ஒவ்வொன்றிற்கும் கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. அதன் தான் நமது கல்லீரலே கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. நமது உடலுக்கு தேவையில்லாத விஷயத்தை நமது உடலே உற்பத்தி செய்ய காரணம் என்னவாக இருக்க முடியும்?
கொலஸ்ட்ரால் என்ற ஒரு காரணத்திற்காக முட்டையின் மஞ்சள் கருவை தூக்கிபோடுகிறீர்கள். அதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்று தெரியுமா? உடலுக்கு வேண்டிய நல்ல கொழுப்பு உள்ளது. மேலும் இதில் வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் பிற வைட்டமின்களும் உள்ளன. எனவே முட்டையை சாப்பிடும் போது முழுவதுமாக சாப்பிடுங்கள். அதில் உள்ள மஞ்சள் கருவை தூக்கி எறிய தேவையில்லை.
அதுவும் இதய நோயாளிகள் தினமும் ஒரு முழு முட்டையை சாப்பிடுவது பாதுகாப்பானது தான். அதன் மூலம் உடலுக்கு நல்ல புரோட்டீனும், நல்ல கொழுப்புச்சத்தும், கூடவே நிறைய வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் கிடைக்கும்.
எனவே முட்டை குறித்த இந்த மூட நம்பிக்கையை கைவிட்டு, முட்டை என்றால் முழு முட்டை மட்டுமே, வெள்ளைக்கரு மட்டும் அல்ல. இன்று முதல் அந்த மூடநம்பிக்கையை கைவிடுங்கள்" என்று டாக்டர் ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார். எனவே நண்பர்களே! இனிமேல் முட்டையை முழுவதுமாக சாப்பிட்டு பயன்பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications