முட்டையை 7 நாள் இப்படி சாப்பிட்டா தொப்பை வேகமா குறையுமாம்... ட்ரை பண்ணி பாருங்க...

சில எடை இழப்பு டயட்டுகள் மிகவும் கடுமையாக இருப்பதோடு, குறுகிய காலத்தில் எடையை குறைக்க உதவுகின்றன. அப்படிப்பட்ட ஒரு டயட் தான் 7 நாள் முட்டை டயட்.

Seven Day Egg Diet For Weight Loss: தற்போது இன்டர்நெட்டில் அதிகம் தேடப்படும் ஒரு சொல்லாக எடை இழப்பு உள்ளது. ஏனெனில் தற்போதைய உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் ஒழுங்கற்ற தூக்க பழக்கஙக்ள் போன்றவற்றால் ஒருவரது உடல் எடை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரித்து விட்டால் அதைக் குறைப்பது என்பதை அவ்வளவு சுலபமல்ல. சில சமயங்களில் உடல் எடையைக் குறைக்க முடியாமலும் போகலாம். ஆயினும், உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் தற்போது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றன.

Seven Day Egg Diet For Weight Loss In Tamil

உணவுகளும், சில பழக்கங்களும் தானே நமது எடையை அதிகரித்தன. அதே உணவுகள் மற்றும் பழக்கங்களின் மூலமே நமது எடையைக் குறைக்கலாம். அந்த வகையில் சில எடை இழப்பு டயட்டுகள் மிகவும் கடுமையாக இருப்பதோடு, குறுகிய காலத்தில் எடையை குறைக்க உதவுகின்றன. அப்படிப்பட்ட ஒரு டயட் தான் 7 நாள் முட்டை டயட். இந்த டயட்டில் முட்டை பல வடிவங்களில் உட்கொள்ளப்படுகிறது. இப்போது இந்த 7 நாள் முட்டை டயட் அல்லது ஒரு வார முட்டை டயட் பற்றி சற்று விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
7 நாள் முட்டை டயட் என்றால் என்ன?

7 நாள் முட்டை டயட் என்றால் என்ன?

அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள் தான் முட்டை. இவற்றில் புரோட்டின் அதிகம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் குறைவு. இந்த ஒரு வார முட்டை டயட்டில் முட்டையைத் தவிர, நீர், சர்க்கரை இல்லாத பானங்கள் மற்றும் பிற கார்போஹைட்ரேட் உணவுகளும் அடங்கும். இந்த டயட்டில் முட்டைகளை காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என மூன்று வேளையும் உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் வகையில் முட்டை உட்கொள்ளப்படுகின்றன.

7 நாள் முட்டை டயட் எப்படி வேலை செய்கிறது?

7 நாள் முட்டை டயட் எப்படி வேலை செய்கிறது?

பொதுவாக காலை உணவாக முட்டையை உட்கொள்வது ஒரு நாளை தொடங்க சிறந்த வழியாகும். ஆனால் இந்த முட்டையை மூன்று வேளையும், அதுவும் 7 நாட்கள் உட்கொள்ள வேண்டும் என்பது பலருக்கும் சரியானதான தோன்றாது. ஆனால் உண்மையில் முட்டையை ஒரு வாரம் தொடர்ந்து 3 வேளையும் உட்கொண்டு, அத்துடன் சில விதிமுறைகளைப் பின்பற்றி வந்தால், உடலினுள் பல அற்புதங்கள் நிகழும்.

குறிப்பாக இந்த டயட்டில் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்கப்படுவதால், உடலானது ஆற்றலுக்காக உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை பயன்படுத்த தொடங்குகின்றன. இதன் விளைவாக உடலில் உள்ள கொழுப்பு செல்கள் கரைந்து, உடல் எடை குறைய தொடங்குகிறது.

7 நாள் முட்டை டயட்டின் நன்மைகள்

7 நாள் முட்டை டயட்டின் நன்மைகள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் 7 நாள் முட்டை டயட் பின்பற்றினால், பின்வரும் நன்மைகளைப் பெறலாம். அவை:

* முட்டை உடலுக்கு வைட்டமின் டி-யை வழங்குவதால், இது உடல் பருமனுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ள PCOS அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

* முட்டையில் பயோடின் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்துகிறது மற்றும் செரிமானம் ஒழுங்காக நடக்க உதவுகிறது.

* முட்டையில் உள்ள வைட்டமின் ஈ உள்ளது. இது அனைத்து வயதினருக்கும் தேவையான மிகவும் இன்றியமையாத சத்தாகும்.

* முட்டையை தினமும் உட்கொண்டு வந்தால், அது இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதாக கூறுப்படுகிறது.

* முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது தசைகளை வலுவாக்கவும், நல்ல கட்டமைப்புடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

7 நாள் முட்டை டயட்டை மேற்கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்:

7 நாள் முட்டை டயட்டை மேற்கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்:

7 நாள் முட்டை டயட்டானது குறுகிய காலத்தில் அதிக எடையை வேகமாக குறைக்கிறது. ஆனால் இந்த டயட்டை 2 வாரத்திற்கு மேல் பின்பற்றக்கூடாது. இது தவிர ஒருசில விஷயங்களையும் நினைவில் கொண்டு, அவற்றை பின்பற்ற வேண்டும். இதனால் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். அவை பின்வருமாறு:

* உப்பைத் தவிர்க்க வேண்டும்.

* தினமும் 8 டம்ளர் நீரை தவறாமல் குடிக்க வேணடும்.

* க்ரீம் அல்லது சர்க்கரை நிறைந்த எந்த உணவுப் பொருட்களையும் உட்கொள்ளக்கூடாது.

* காய்கறி சாலட் சாப்பிடுவதாக இருந்தால், தக்காளி, லெட்யூஸ், செலரி அல்லது வெள்ளரிக்காயை கொண்டு தான் தயாரித்து சாப்பிட வேண்டும்.

* காய்கறிகளை வேக வைத்து, அவற்றின் மேல் எலுமிச்சை சாற்றினை பிழிந்தும் சாப்பிடலாம்.

* தோல் நீக்கப்பட்ட சிக்கன் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்ற வகை இறைச்சிகளை உண்ணக்கூடாது.

* அடிக்கடி சாப்பிடக்கூடாது. அதாவது ஸ்நாக்ஸ் எதையும் சாப்பிடக்கூடாது. ஒவ்வொரு உணவு வேளைக்கும் குறிப்பிட்ட இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

* மூன்று வேளையும் தவறாமல் சாப்பிட வேண்டும்.

* இந்த டயட்டில் இருக்கும் போது மது அருந்தக்கூடாது.

* தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

7 நாட்களும் எந்த மாதிரி சாப்பிட வேண்டும்?

7 நாட்களும் எந்த மாதிரி சாப்பிட வேண்டும்?

7 நாள் முட்டை டயட்டின் போது, 7 நாட்களிலும் ஒவ்வொரு வேளையும் எப்படி சாப்பிட வேண்டும் என்ற கேள்வி நிச்சயம் எழும். அத்தகையவர்களுக்கு உதாரணமாக 7 நாள் மெனு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாள் 1

* காலை உணவு - க்ரில்டு தக்காளி முட்டை சாண்விட்ச்.

* மதிய உணவு - நீர்ச்சத்து நிறைந்த பழங்களால் ஆன சாலட்

* இரவு உணவு - 2 முட்டை, ஒரு பௌல் சாலட் மற்றும் 1 கிரேப்ஃபுரூட்.

நாள் 2

நாள் 2

* காலை உணவு - சர்க்கரை சேர்க்காத ஒரு டம்ளர் கிரேப்ஃபுரூட் ஜூஸ் மற்றும் 1 வேக வைத்த முட்டை

* மதிய உணவு - தந்தூரி சிக்கன் (எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம்) மற்றும் தக்காளி.

* இரவு உணவு - க்ரில்டு சிக்கன் ஸ்டீக் மற்றும் ஒரு பௌல் சாலட். (க்ரில் செய்ய எண்ணெயை மிகவும் குறைவாக பயன்படுத்த வேண்டும். முடிந்த வரை ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது நல்லது.)

நாள் 3

நாள் 3

* காலை உணவு - சர்க்கரை சேர்க்காத ஒரு டம்ளர் கிரேப்ஃபுரூட் ஜூஸ் மற்றும் 1 வேக வைத்த முட்டை

* மதிய உணவு - 2 வேக வைத்த முட்டை மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்த சாலட்

* இரவு உணவு - க்ரில்டு சிக்கன் ஸ்டீக் மற்றும் சாலட். (க்ரில் செய்ய எண்ணெயை மிகவும் குறைவாக பயன்படுத்த வேண்டும். முடிந்த வரை ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது நல்லது.)

நாள் 4

நாள் 4

* காலை உணவு - டோஸ்ட் செய்யப்பட்ட 2 கோதுமை பிரட் மற்றும் 2 முட்டை.

* மதிய உணவு - பழங்கள் (எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம்)

* இரவு உணவு - க்ரில்டு சிக்கன் ஸ்டீக் மற்றும் சாலட்

நாள் 5

நாள் 5

* காலை உணவு - டோஸ்ட் செய்யப்பட்ட 2 கோதுமை பிரட் மற்றும் 2 முட்டை

* மதிய உணவு - 2 முட்டையுடன் தக்காளி

* இரவு உணவு - க்ரில் செய்யப்பட்ட மீன் மற்றும் சாலட்

நாள் 6

நாள் 6

* காலை உணவு - 1 வேக வைத்த முட்டை மற்றும் ஒரு டம்ளர் கிரேப்ஃபுரூட் ஜூஸ்

* மதிய உணவு - பழங்கள் (எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம்)

* இரவு உணவு - ரோஸ்டட் சிக்கன் மற்றும் வேக வைத்த கேரட் மற்றும் பீன்ஸ்.

நாள் 7

நாள் 7

* காலை உணவு - தக்காளி சேர்க்கப்பட்ட 2 முட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட பொரியல்.

* மதிய உணவு - 2 முட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட பசலைக்கீரை ஆம்லெட்

* இரவு உணவு - மூலிகைகள் தூவப்பட்ட க்ரில்டு சிக்கன்

7 நாள் முட்டை டயட்டின் பக்கவிளைவுகள்

7 நாள் முட்டை டயட்டின் பக்கவிளைவுகள்

எந்த ஒரு டயட்டிலும் பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்காது. அந்த வகையில் இந்த 7 நாள் முட்டை டயட்டிலும் சில பக்கவிளைவுகளை ஆரம்ப நாட்களில் சந்திக்க நேரிடும். அந்த பக்கவிளைவுகளாவன:

* குமட்டல்

* வயிற்று உப்புசம்

* வாயு தொல்லை

* வாய் துர்நாற்றம்

* கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் உடல் சோர்வு

* குறைவான நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கல்

குறிப்பு

குறிப்பு

7 நாள் முட்டை டயட் பற்றி இதுவரை பார்த்தோம். ஆனால் உடல் எடையைக் குறைக்க எந்த ஒரு டயட்டை மேற்கொள்வதற்கு முன்பும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion