Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
சிஎஸ்கே-வின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் ஃபிட்னஸ் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க...
IPL 2023: இந்திய கிரிக்கெட் அணி கண்டெடுத்த ஒரு அற்புதமான ஆல்ரவுண்டர் தான் ரவீந்திர ஜடேஜா. இவர் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளையாடுவார். தற்போது ஐபிஎல் 2023 நடந்து கொண்டிருக்கிறது. இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளார். டோனிக்கு அடுத்தப்படியாக ரவீந்திர ஜடேஜாவுக்கு ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம்.
ரவீந்திர ஜடேஜா ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி, தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுபவர். ஃபிட்டாக இருந்தால் தான் விளையாட்டில் தனது பங்கை முழுமையாக கொடுக்க முடியும் என்பதை நம்புபவர். நீங்கள் ஜடேஜாவின் தீவிர ரசிகரா? உங்களுக்கு ஜடேஜாவின் ஃபிட்னஸ் ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே ஜடேஜா மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரவீந்திர ஜடேஜா மிகவும் ஒழுக்கமானவர் மற்றும் ஒரு விஷயத்தை தொடர்ந்து பின்பற்றுவதில் மிகவும் உறுதியாக இருப்பார். இதனால் தான் இவர் ஃபிட்டாக இருக்க வாரத்திற்கு 5-6 நாட்கள் உடற்பயிற்சியில் தவறாமல் ஈடுபடுகிறார். இவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளானது பல்வேறு உடற்பயிற்சிகளை உள்ளடக்கியது. அதில் புஷ் அப்ஸ், புல் அப்ஸ், வெயிட் ட்ரெயினிங் மற்றும் கார்டியோ பயிற்சிகள் மிகவும் முக்கியமானவை. இப்போது ஜடேஜா எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார் என்பதைக் காண்போம்.
ஜடேஜா புஷ் அப்ஸ், புல்-அப்ஸ், ஃப்ரீ ஸ்குவாட்ஸ் போன்றவற்றை அதிகம் செய்வாராம். ஏனெனில் இந்த வகையான பயிற்சிகள் உடலின் வலிமையை அதிகரிப்பதைத் தவிர, உடலை நன்கு ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுமாம். வழக்கமாக இந்த ஒவ்வொரு பயிற்சிகளையும் ஒரு செட்டில் 12-20 வரை என 3 செட் செய்வாராம்.
எடை பயிற்சி
ரவீந்திர ஜடேஜாவின் உடற்பயிற்சிகளில் அடங்கும் மற்றொரு வகையான பயிற்சி தான் வெயிட் ட்ரெயினிங் என்னும் எடை பயிற்சி. பெரும்பாலும் ஜடேஜா பார்பெல்ஸ் மற்றும் டம்ப்பெல்ஸ் பயன்படுத்தி தான் உடற்பயிற்சிகளை செய்வாராம். அந்த பயிற்சிகள் பின்வருமாறு:
* ஸ்நாட்ச் (Snatch)
* பார்பெல் ரோஸ்
* பார்பெல் ஸ்குவாட்
* டெட்லிப்ட்
* ஓவர்ஹெட் பிரஸ்
* அப்ரைட் ரோஸ்
* பார்பெட் ஹிப் த்ரஸ்ட்ஸ்
* பல்கேரியன் ஸ்பிலிட் ஸ்குவாட்
முக்கியமாக இந்த எடை பயிற்சிகளின் போது மிதமான எடையை தான் பயன்படுத்துவாராம். பளு தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், உடலின் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
கார்டியோ
விளையாட்டு வீரர்களின் உடற்பயிற்சி திட்டத்தில் கார்டியோ பயிற்சிகள் இல்லாமல் முழுமையடையாது. அப்படிதான் ஜடேஜாவின் உடற்பயிற்சி திட்டத்திலும் கார்டியோ பயிற்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பெரும்பாலும் ஜடேஜா ரன்னிங் தான் செய்வாராம். இது அவரது கார்டியோ சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதோடு, உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ரன்னிங் தவிர, ஸ்கிப்பிங், குத்துச்சண்டை போன்ற கார்டியோ பயிற்சிகளையும் ஜடேஜா மேற்கொள்வாராம்.
வார்ம் அப் பயிற்சிகள்
ஜடேஜா உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் தவறாமல் வார்ம் அப் பயிற்சிகளை செய்வாராம். வார்ம் அப் பயிற்சிகளானது உள்ளுறுப்புக்களை உடற்பயிற்சி செய்ய தயார்படுத்த செய்யப்படும் உடற்பயிற்சிகளாகும். அதேப் போல் உடற்பயிற்சிகளை செய்மு முடித்த பின்னர், ஜடேஜா தசைகளை ரிலாக்ஸ் செய்யும் வகையில் குறிப்பிட்ட சில ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை மேற்கொள்வாராம். இது அவரது ஒட்டுமொத்த நெகிழ்வுத்தன்மை மேம்படுத்துகிறது மற்றும் உடற்பயிற்சிகளால் ஏற்படும் காயங்களில் இருந்து தசைகளை பாதுகாக்கிறது.
மேலே கொடுக்கப்பட்டவை தான் சிஎஸ்கே-வின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் ஃபிட்னஸிற்கு காரணமான உடற்பயிற்சிகளாகும். நீங்களும் ஜடேஜா போன்று ஃபிட்டாக இருக்க விரும்பினால், உடற்பயிற்சியாளரின் உதவியுடன் இம்மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

