Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
பெண்களின் இடது மார்பகம் எப்போதும் வலது மார்பகத்தை விட பெரியதாக இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா?
இந்த உலகம் பெண்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. பெண்களின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியும் தந்திரம் இன்றுவரை கண்டறியப்படாவில்லை, அதனால்தான் பெண்கள் உயிருள்ள அதிசயம் என்று எப்போதும் அழைக்கப்படுகிறார்கள்.
சராசரியாக, பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பது பொதுவாக அறியப்படுகிறது. இதற்கான காரணமாக பல விஷயங்கள் கூறப்பட்டாலும் சரியான காரணம் இன்றுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் ஒரு உறுதியான காரணம் என்னவெனில், பெண்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளது.

பெண்கள் மனது மட்டுமல்ல அவர்களின் உடலே ஒரு அதிசயம்தான். பெண்களின் உடலைப் பற்றி அவர்களுக்கு தெரியாத பல விஷயங்கள் உள்ளது. அவற்றில் சில சுவராஸ்யமான உண்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி ஆண்களை விட வலிமையானது
இதற்கான காரணம் பெண்களுக்கான மரபணுக்களில் உள்ளது. பெல்ஜியத்தில் உள்ள கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த பாலின-குறிப்பிட்ட சுகாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு மைக்ரோஆர்என்ஏக்கள் எனப்படும் மரபணுப் பொருள் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
பெண்களின் எக்ஸ் குரோமோசோமில் அமைந்துள்ள மைக்ரோஆர்என்ஏக்கள் ஆண்களை விட பெண்களுக்கு நோயெதிர்ப்பு மண்டல நன்மையை அளிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த ஆய்வில் ஆண்களை விட பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிக வலி தாங்கும் சக்தி உள்ளது
நிச்சயமாக வலி என்பது நபருக்கு நபர் மாறுபடும் என்றாலும், பொதுவாக பெண்களால் வலியின் அசௌகரியத்தை சிறப்பாகக் கையாள முடியும் என்று ஆய்வு நிரூபித்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தொடர்ச்சியான சோதனைகளின் போது பெண்களை விட ஆண்கள் தங்கள் வலியை அதிகமாக மதிப்பிட்டுள்ளனர். ஆண்கள் அதிக வலியை உணரும் போது எளிதில் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
ஆண்களை விட பெண்கள் வாசனையை நன்கு உணர்கின்றனர்
உடல் நாற்றம் குறித்த பெண்களின் விழிப்புணர்வு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். ஆண்கள் ஒப்பீட்டளவில் குறைவான வாசனை உணர்திறனைக் கொண்டுள்ளனர்.
பெண்களால் அதிக வண்ணங்களை பார்க்க முடியும்
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களால் அதிக வண்ணங்களை பார்க்க முடியும். ஆண்களை விட பெண்கள் நுட்பமான தரங்களை வேறுபடுத்துவதில் சிறந்தவர்கள் என்று முடிவுகள் காட்டுகின்றன.
இந்த உணர்திறன் வண்ண நிறமாலையின் நடுவில் மிகவும் தெளிவாக இருந்தது. ஆண்களுக்கு ஒரே மாதிரியாக தெரியும் நிறங்களுக்கு இடையே உள்ள சிறிய வேறுபாடுகளை பெண்களால் சிறப்பாகப் பிரித்தறிய முடிந்தது. பெண்கள் ஏன் ஆடைகளை தேர்ந்தெடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா?
பெண்கள் சிறந்த நினைவாற்றலைக் கொண்டுள்ளனர்
பெண்களின் நினைவாற்றல் என்பது ஆண்களை விட பலமடங்கு சக்திவாய்ந்தது. அதனால்தான் பெண்களால் பல ஆண்டுகளுக்கு நடந்த சம்பவத்தைக் கூட நினைவில் வைத்து சண்டை போட முடிகிறது. இது மக்களின் முகங்களை நினைவில் கொள்வது உட்பட பல விஷயங்களை உள்ளடக்குகிறது. ஆண்களை விட பெண்கள் முகங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாகக் கூறுகிறது, பெரும்பாலும் பெண்கள் மற்றவர்களின் முக அம்சங்களை ஆழ்மனதில் படிப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
பெண்களின் கழுத்து மிகவும் நெகிழ்வானது
ஆண்கள் திரும்பும்போது அவர்கள் முழு உடலையும் திருப்புகிறார்கள், ஆனால் பெண்கள் தலையை மட்டும் திருப்புவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? பெண்களின் கழுத்து ஆண்களை விட நெகிழ்வானது என்பதே இதற்குக் காரணம். பெண்களுக்கு பொதுவாக மிகவும் மீள் தசை அமைப்பு உள்ளது.
பெண்கள் தூங்கும் போது கூட செவித்திறன் கொண்டவர்கள்
பரிணாம வளர்ச்சிதான் இதற்கு முக்கிய காரணம். பெண்கள் தூக்கத்தின் போது ஒலிகளுக்கு அதிக உணர்திறன் கொண்டவர்கள், இதனால்தான் புதிதாக குழந்தை பெற்ற பெண்கள் அழும் குழந்தைகளைக் உடனடியாக கவனிக்க முடிகிறது. குறிப்பாக அதிக சத்தங்களுக்கு பெண்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள். துரதிர்ஷ்டவசமாக இதனால் பெண்கள் தூக்கக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பெண்களின் மார்பகத்தில் ஒன்றை விட மற்றொன்று பெரிதாக இருக்கும்
மார்பக சமச்சீரற்ற தன்மை மிகவும் பொதுவானது மற்றும் அனைத்து பெண்களுக்கும் இந்த நிலை உள்ளது. பொதுவாக இதயத்தின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, எனவே அதன் வழியாக அதிக இரத்தம் பாய்கிறது.
ஆனால் உண்மையான காரணம் மரபியல்ரீதியான காரணங்கள்தான். இந்த அளவு வேறுபாட்டிற்கான காரணம் தெளிவாக இல்லை. பெண்களுக்கு ஒரு பக்கத்தில் அதிக மார்பக திசு செல்கள் இருப்பதால் இருக்கலாம் அல்லது மார்பக திசு செல்கள் வளர காரணமான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் விளைவுகளுக்கு செல்கள் அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கலாம்.
பெண்களின் உடல் 20 வயதிற்குள் மாறிக்கொண்டே இருக்கும்
இளமைப் பருவம் என்பது பெண்களின் உடல் மாற்றங்களின் முடிவைக் குறிக்காது. முகப்பரு, மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் உச்சம் அனைத்தும் பெண்களின் 20 களில் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் உடல் வளைந்திருக்கும் மற்றும் செல்லுலைட் உருவாக ஆரம்பிக்கும். 20 வயதுகள் ஒரு இடைவிடாத உணர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கான காலகட்டமாக இருக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

