Latest Updates
-
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
இந்த 6 அறிகுறி இருந்தா.. உங்க தைராய்டு சுரப்பியில் பிரச்சனை தீவிரமா இருக்குன்னு அர்த்தம்... உஷார்...
Symptoms Of Hypo Thyroid In Tamil: இன்றைய அவசரமான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், தினந்தோறும் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இப்படி சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நிறைய பேர் தாங்களாகவே ஏதாவது ஒரு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் பின் நிலைமை மோசமான பிறகு மருத்துவரை அணுகுகின்றனர். ஆனால் இப்படி ஒரு ஆரோக்கிய பிரச்சனைக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி, அதற்கான சரியான காரணத்தை அறிந்து சிகிச்சை பெற்று வந்தால், அப்பிரச்சனையில் இருந்து விரைவில் குணமாக முடியும்.

சொல்லப்போனால், நமது உடலுறுப்புக்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தான் அது ஒருசில பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க வைக்கும். அப்படி நமது உடலில் மிகவும் முக்கியமான ஒரு சுரப்பி தான் தைராய்டு. இது நமது கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்துள்ளது. இந்த சுரப்பியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் இதயம், மூளை, தசைகள் மற்றும் பிற முக்கிய உறுப்புக்களின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது.
இப்படிப்பட்ட சுரப்பில் இருவிதமான பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. அதில் ஒன்று தான் ஹைப்போ தைராய்டு என்று அழைக்கப்படும் ஹைப்பர் தைராய்டிசம். இந்த நிலையில் தைராய்டு சுரப்பியில் போதுமான அளவு ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும். இந்நிலையில் உடலில் பலவிதமான அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.
இந்த அறிகுறிகளை கவனித்து உடனே அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் போனால், நிலைமை பின் கைமீறி போய்விடும். கீழே ஹைப்போ தைராய்டு பிரச்சனை இருந்தால், எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. எடையில் ஏற்ற இறக்கங்கள்
உங்கள் உடல் எடையில் திடீரென்று மாற்றங்கள் தெரிகிறதா? அதுவும் உங்கள் உடல் எடை காரணமின்றி அதிகரிக்கிறது என்றால் உங்களுக்கு ஹைப்போ தைராய்டு இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ஹைப்போ தைராய்டின் போது, உடலில் போதுமான தைராய்ஸின் உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கும். இதன் விளைவாக உடலின் மெட்டபாலிசம் குறைந்து, உடல் எடை அதிகரிக்கிறது.
2. தோற்றத்தில் மாற்றம்
உடல் எடையில் மாற்றங்களைத் தவிர, உங்களின் தோற்றத்திலும் மாற்றங்கள் தெரிகிறதா? அதுவும் தலைமுடி பலவீனமாக, அதிகம் வறண்டு, எளிதில் உடையக்கூடியதாக இருந்தாலோ, சருமத்தில் அரிப்பு, எரிச்சல், தடிப்புகள் ஏற்பட்டாலோ, மூட்டுகளில் வீக்கம், முகம் மற்றும் கழுத்துப் பகுதி வீக்கமடைந்தோ காணப்படுகிறதா? இப்படியான மாற்றங்களை ஒருவர் சந்தித்தால், தைராய்டு பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.
3. மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள்
உங்கள் வெளித் தோற்றத்தைத் தவிர, உங்கள் மனநிலையிலும் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகிறதா? அப்படியானால் ஹைப்போ தைராய்டிசம் இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் அடிக்கடி பதட்டமடைவது, மனக் கவலை அதிகரிப்பது, எரிச்சலுணர்வு மற்றும் மன அழுத்தத்துடன் இருப்பது போன்றவற்றை சந்திக்க நேரிட்டால் உஷாராகிக் கொண்டு, மருத்துவரை உடனே அணுகுங்கள்.
4. மிகுந்த உடல் சோர்வு
வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உடல் சோர்வை, களைப்பை, உடல் பலவீனத்தை அனுபவிக்கறீர்களா? அப்படியானால் தைராய்டு பிரச்சனை இருக்க நிறைய வாய்ப்புள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் போதுமான தைராக்ஸின் ஹார்மோன்கள் சுரக்காமல் இருந்தால், அப்போது தசை பலவீனமடைந்து, மிகுந்த உடல் சோர்வை ஏற்படுத்தும். எனவே காரணமின்றி சந்திக்கும் உடல் சோர்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
5. அதிக குளிர் அல்லது வெப்பம்
தைராய்டு சுரப்பியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதன் விளைவாக ஒருவர் மிகுந்த குளிர் அல்லது வெப்பத்தை சந்திக்க நேரிடும். ஆகவே நீங்கள் இம்மாதிரியான உணர்வை அடிக்கடி சந்தித்தால், அதை புறக்கணிக்காமல், மருத்துவரிடம் சென்று உடலை பரிசோதனை செய்து, என்னவென்று சரியான காரணத்தை அறிந்து, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
6. மாதவிடாய் தவறுவது
பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால், அது அப்பெண்ணின் மாதவிடாய் சுழற்சி மற்றும் கருவளத்தை பாதிக்கும். மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் போதுமான தைராக்ஸின் சுரக்காத போது, ஓவுலேசன் காலத்தில் கருமுட்டை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு, பெண்களின் கருவளம் பாதிக்கப்படுகிறது. ஹைப்போ தைராய்டிசம் உள்ள பெண்கள் கருத்தரித்தால், அவர்கள் கருச்சிதைவு மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா போன்ற பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால் என்ன நடக்கும்?
ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனைக்கு ஒருவர் போதிய சிகிச்சை எடுக்காமல் இருந்தால் அதன் விளைவாக மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அவை பின்வருமாறு:
* மனநல பிரச்சனைகளை உருவாக்குவது
* மூச்சு விடுவதில் சிரமம்
* இதய பிரச்சனைகள்
* உடல் வெப்பநிலையை பராமரிக்க முடியாமை
* கோமாவிற்கு கூட செல்லும் அபாயம் உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











