Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
உங்கள் குழந்தைகளை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடியதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நோயெதிர்க்கும் திறனை பொறுத்தது.
இன்று ஒட்டுமொத்த உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் ஒரு விஷயம் கொரோனா வைரஸ் ஆகும். சீனாவில் தோன்றிய இது இன்று பலநாடுகளுக்கும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுவிட்டது. கடந்த சில தினங்களாக இந்தியாவிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடியதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நோயெதிர்க்கும் திறனை பொறுத்தது. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எளிதில் இந்த வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நோயெதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பவர்கள் குழந்தைகள்தான். இந்த பதிவில் குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி பாதுகாக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

நல்ல கை சுகாதாரத்தை உறுதி செய்யவேண்டும்
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். கண்கள், வாய், மூக்கு போன்றவற்றை உங்களின் சுத்தம் செய்யப்படாத கைகளுடன் தொடக்கூடாது. இதனை குழந்தைகள் செய்வதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன், சாப்பிடும் முன், விளையாடிய பிறகு என அனைத்து செயல்களுக்குப் பிறகும் கை கழுவு செய்யுங்கள்.

குழந்தைகளும் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும்
கை குலுக்குவதன் மூலம்தான் கொரோனா வைரஸ் பெருமளவில் பரவுகிறது. எனவே எந்த காரணத்திற்காகவும் கை குலுக்க வேண்டாமென்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கை குலுக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு இதனை அடிக்கடி சொல்லிக்கொடுப்பது அவசியமாகும்.

டயப்பர் மற்றும் மருந்துகளை சேமிக்கவும்
ஒரு மதத்திற்குத் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமிக்கவும். குழந்தைகளுக்குத் தேவையான டயப்பர்கள், அடிப்படை மருந்துகள், பெரியவர்களுக்குத் தேவையான மருந்துகள், இன்ஹேலர்கள் போன்றவற்றை வாங்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டகாலம் கெடாமல் இருக்கக்கூடிய உணவுப்பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

ஷூக்கள் வாசலில்தான் இருக்க வேண்டும்
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் குழந்தைகளின் ஷூக்கள் வீட்டு வாசலில்தான் இருக்க வேண்டும், குறிப்பாக இந்த காலகட்டங்களில். ஏனெனில் இவை பாக்டீரியாக்களை வெளியில் இருந்து உங்கள் வீட்டிற்குள் அழைத்து வரும். தரையை தொடக்கூடிய எந்தவொரு பொருளையும் வீட்டு வாசலில்தான் வைக்க வேண்டும்.

உடைகளை மாற்ற வேண்டும்
குழந்தைகளின் உடைகள் கிருமிகளை குறைவாகத்தான் பரப்பும் என்றாலும் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பி வந்தவுடன் அவர்களின் உடைகளை மாற்ற வைப்பது நல்லது. எப்பொழுதும் குழந்தைகளை சுத்தமான உடைகளை அணிய ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் வந்தவுடன் எவ்வளவு விரைவில் உடைகளை மாற்றிக்கொள்கிறார்களோ அவர்களுக்கு அவ்வளவு நல்லது.

அதிக மக்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது
நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையின் படி கொரோனா வைரஸானது பாதிக்கப்பட்டவர்களின் பேச்சு, தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் பரவும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூட்டம் இருக்குமிடங்களில் இது வேகமாகவும், எளிதாகவும் பரவும். எனவே பெற்றோர்கள் குழந்தைகள் அதிக மக்கள் நடமாட்டம் இருக்குமிடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்ப்பது நல்லது.

வீட்டை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்
உங்கள் வீட்டில் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். குளிர்சாதனப்பெட்டி, மாடி கைப்பிடி, போன், பொம்மைகள் போன்ற இடங்களை அவ்வப்போது சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டும்
குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அனைத்து வழிகளிலும் அதிகரிக்க முயல வேண்டும். போதிய உடற்பயிற்சிகள், விளையாட்டு குறிப்பாக உணவு போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதுபோன்ற ஆபத்தான காலக்கட்டங்களில் உடல்நிலையை பாதிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications