Latest Updates
-
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
சுகாதாரமான முறையில் ஆணின் பிறப்புறுப்பை சுத்தம் செய்வது எப்படி?
சுகாதாரமான முறையில் ஆணின் பிறப்புறுப்பை சுத்தம் செய்யும் முறை பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.
ஆண், பெண் இருவருக்குமே இந்தரங்கப் பகுதிகளில் சுகாதாரமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால், பூஞ்சைத் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அது இயல்பு தான் என்றாலும் அதனால் சில நோய்த் தொற்றுக்கள் எளிதில் பரவ ஆரம்பித்துவிடும். இது தேவையற்ற பிரச்சினைகளைக் கொடுக்கும்.

மனித உடலில் பூஞ்சை தொற்று வழக்கமான ஒரு பிரச்னைதான். ஆனால் பூஞ்சை தொற்று என்பது உடலில் எல்லா இடங்களிலும் ஏற்படுவதில்லை. பூஞ்சை தொற்று என்பது குறிப்பாக, நம்முடைய உடலில் நகங்கள், வாய்ப்பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதிகளில்தான் மிக அதிகமாக பூஞ்சை தொற்றுக்கள் உண்டாகின்றன.

ஈஸ்ட் தொற்று
ஈஸ்ட் தொற்றின் காரணமாக அந்தரங்க உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை உண்டாகும் என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு மிக அதிக அளவில் ஏற்படும் இந்த ஈஸ்ட் தொற்று பெண்ணுறுப்பில் அரிப்பு, அழற்சி போன்ற பல்வேறு பிரச்னைகளை உண்டாகின்றன. அதேபோல் தான் ஆண்களுக்கும் ஆணுறுப்புகளில் பூஞ்சை தொற்று ஏற்படும். அதனால் எப்போதும் ஈரப்பதமின்றி, சுகாதாரமாக வைத்துக் கொள்வது நல்லது.

காரணங்கள்
அந்தரங்கப் பகுதிகளில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. பொதுவாக உடலை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்தரங்கப் பகுதிகளைச் சுத்தம் செய்வது பற்றி யோசிப்பதே இல்லை. கழிவுகள் வெளியேறிய பின்னர் மட்டும் அந்த பகுதியை சுத்தம் செய்கிறோம். அதற்கு அடுத்து அங்கே நமக்கு வேலை இல்லை என்று நினைக்கிறோம். அதுதான் முற்றிலும் தவறான ஒரு பழக்கம்.
சுகாதாரம் குறைவான விஷயங்களால் ரத்த சர்க்கரை இருப்பவர்களுக்கும் பாலியல் உறவு மேற்கொள்பவர்க்கும் இந்த தொற்றுக்கள் வேகமாகப் பரவ ஆரம்பிக்கும். இந்த பூஞ்சைத் தொற்றுக்களை அப்படியே சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. இதற்கான சுகாதார முறைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்யது அவசியமான ஒன்று.

மருத்துவ ஆலோசனை
அந்தரங்கப் பகுதிகளில் உண்டாகும் ஈஸ்ட் தொற்றுக்குக் கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஈஸ்ட் தொற்று மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களை தானே சரி செய்கிறேன் என்று தேவையில்லாமல் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. முதலில் ஒரு நல்ல மருத்துவரை அணுகி, என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மறைக்காமல் தெளிவாகக் கூறி ஆலோசனை பெற்று, அவர்கள் கூறும் சிகிச்சையும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

உடலுறவு
பிறப்பு உறுப்புகளின் வழி மற்றவருக்கு எளிதில் தொற்றுக்கள் பரவ வாய்ப்புண்டு. அதனால் நிறைய பிரச்னைகளும் பாலியல் நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆகையால் உங்கள் துணையுடன் முன் விளையாட்டு, நெருக்கமாக இருப்பதெல்லாம் ஓகே தான். ஆனால் பூஞ்சைத் தொற்றுக்கள் இருந்தால் உங்களிடம் முழுமையாக குணமடையும் வரை உடலுறவில் மட்டும் ஈடுபடுவதை தவிர்த்து விடுவது இருவருக்குமே நல்லது..

காண்டம்
பாலியல் ஆசை அதிகமாக இருக்கிறது. என்னால் கட்டுப்பாடோடு இருக்க முடியவில்லை என்று நீங்கள் நினைத்தால், உடலுறவு கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ஆணுறையைப் பயன்படுத்துங்கள். பாதுகாப்பான உடலுறவின் மூலமாக நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும். அதேபோல் பெண்ணும் பெண்களுக்கான காண்டமைப் பயன்படுத்திக் கொள்வது மேலும் கூடுதல் பாதுகாப்பைத் தரும்.

சுத்தம் செய்தல்
பெரும்பாலானவர்களுக்கு சுய இன்பம் பழக்கம் கட்டாயம் வாழ்நாளில் ஒரு முறையாவது இருந்திருக்கும். அப்படி செய்வது போலவே நினைத்துக் கொண்டு, கைகளில் ஆணுறுப்பை பிடித்து, மேல் உள்ள தோலை முன்னும் பின்னாக மிக மென்மையாக நகர்த்தி இரண்டு மூன்று முறை செய்து, உள்ளே தேங்கியிருக்கும் கழிவுகள், அழுக்குகளை மேல்நோக்கி கொண்டு வர வேண்டும். பிறகு மென்மையான சோப்பு நீர் அல்லது ஷாம்பு கொண்டு ஆணுறுப்பு, விதைப்பை என முழுமையாக நன்கு சுத்தம் செய்யுங்கள்.
அதன்பின் மென்மையான துணி கொண்டு முழு உறுப்புப் பகுதியையும் விதைப்பை, அதன் இடுக்குகள் என அத்தனையையும் நன்கு ஈரமில்லாமல் துடைக்க வேண்டும்.
சோப்புக்கு பதிலாக, தற்போது அந்தரங்கப் பகுதிகளைச் சுத்தம் செய்வதற்காகவே சில லிக்விடுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் இன்னும் நல்லது.

பலபேர் உறவு
பலருடன் உறவு கொள்பவராக இருந்தால் கட்டாயம் அதை தவிர்க்க வேண்டும். இதுமாதிரியான சமயங்களில் மிக வேகமாக பூஞ்சை தொற்று பரவ ஆரம்பிக்கும்.



Click it and Unblock the Notifications
