Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சீனர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் வெங்காயத்தாள்! எந்த மாதிரி கைவைத்தியங்களுக்கு பயன்படுத்தலாம் ?
ஆரோக்கியமாக வாழ உதவும் வெங்காயத் தாளின் நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.
வெங்காயத்தாள் சுவைக்காக நாம் பயன்படுத்துகிறோம். சூப் மற்றும் சாலட்டுகளில் பெரும்பாலும் இதனை பயன்படுத்துகிறோம், சுவையும் மணமும் தருவதைத் தவிர பெரிதாக நாம் வெங்காயத்தாளை பயன்படுத்துவதில்லை.வெங்காயத்தாளும் கீரை வகைதான்.
இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பெரும்பாலும் சீன உணவுகளில் வெங்காயத்தாள் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.

நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. சீனர்கள் வெங்காயத்தாளை பயன்படுத்தாமல் உணவுகள் சமைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் வெங்காயத்தாளை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் இதுதான் காரணம். வெங்காயத்தாளில் சல்ஃபர் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது. இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன.

சத்துக்கள் :
மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2, விட்டமின் ஏ, கே மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
இது தவிர, இவைகளில் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக உள்ளன. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாள் க்யூயர்சிடின் போன்ற பிளேவோனாய்டுகளுக்கு ஒரு வலுவான ஆதாரமாக இருக்கின்றது.

தாங்க முடியாத பல்வலிக்கு :
பல்வலியால் அவதிப்படுபவர்கள் சம அளவு வெங்காயம் மற்றும் வெங்காயப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.

கண் நோய்க்கு :
கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வந்தால், மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.

வயிற்று வலி :
ஒரு கைப்பிடியளவு வெங்காயப்பூ எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.

பசியைத் தூண்ட:
வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இது பசியை தூண்டும்.

மூலவியாதி ;
வெங்காயப்பூக்களையும் வெங்காயத்தையும், பொடியாக நறுக்கி தயிரில் ஊறப்போட்டு சாப்பிட மூலம் தொடர்புடைய எரிச்சல், குத்தல் குணமடையும்.

நோய் எதிர்ப்பு சக்தி :
வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.இந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது.

சர்க்கரை நோயை தடுக்கும் :
வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் குளுக்கோஸ் ஏற்புத்தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

பெருங்குடல் புற்று நோயை தடுக்க :
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

கொழுப்பை குறைக்கும்
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது. இந்த காய்கறிகளில் உள்ள சல்பர் சேர்மங்கள், இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

எலும்பை பலமாக்குகிறது :
வெங்காயத்தாளில்விட்டமின் சி மற்றும் கே அதிகம் இருக்கிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு இரண்டுமே முக்கியம். விட்டமின் சி கோலாஜன் உருவாவதற்கு உதவுவதால் அது எலும்பை பாதுகாக்க உதவுகிறது.

இதயத்தை பாதுகாக்கிறது :
வெங்காயத்தாளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் டி.என் ஏ பாதிப்படையாமல் இருக்க உதவுகிறது. புதிய செல்வளர்ச்சியை தூண்டுகிறது. ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் குறைப்பதால் இதய நோய்கள் வராமல் காத்திட முடியும்.

ரத்தத்தை சுத்தகரிப்பு செய்யும் :
ரத்த அடர்த்தியை நடு நிலை செய்கிறது. இதனால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் வருவது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களையும் அகற்றுவதால் ரத்தம் சுத்தமாகிறது, ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்கின்றது.

சுவாச நோய்களை தடுக்கும் :
நோய் தடுப்பானாகவே வெங்காயத்தாள் பயன்படுகிறது. சாதரணமாக பருவ காலங்களில் உருவாகும் நோய்களை வராமல் பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. குறிப்பாக நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்கிறது.

அதனை எப்படி பயன்படுத்தலாம் :
நிறைய பேருக்கு அதனை எப்படி எதில் சேர்ப்பதென்று தெரியாததால் அதனை வாங்குவதில்லை. வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயத்தாளையும் பயன்படுத்தலாம். சுவை அதுபோலவே இருக்கும். வெங்காயத்தாள் சாம்பார் வைக்கலாம். பொரியல் செய்யும்போது வெங்காயத்தாளையும் கலந்து செய்தால் சுவையும் கூடும்.

சாண்ட்விச் :
பிரட்டுகளில் சாண்ட்விச் தயாரிக்கும் போது அதில் சேர்க்கலாம். சூப்களில் பொடியாக நறுக்கி போடலாம். புலாவ் செய்யும் போது அதில் அலகரிக்க சேர்க்கலாம்.

மூட்டு வலிக்கு :
க்யூயர்சிடின் அதிகம் இருக்கும் இந்த வெங்காய தாளை பயன்படுத்த மூட்டு வலியால் பாதிக்க பட்டவர்கள் தினம் எடுத்து கொள்ளுங்கள்.

தரமானதா என எப்படி சோதிப்பது :
அடிப்பாகத்தில் இருக்கும் வெங்காயம் போன்ற வடிவில் இருக்கும் பகுதி பளபளப்பாக இருந்தால் அது புதிதானதாக இருக்கும். அதன் குச்சி போன்ற தலைப் பகுதி நல்ல அடர்ந்த நிறத்தில் ஊசி போல் இருக்க வேண்டும். இப்படி இருப்பதை வாங்கினால் நல்ல தரமானதாக இருக்கும்.

ஸ்டோர் செய்யும் முறை :
வெங்காயம் சாதரண அறை வெப்பத்திப் வைக்கப்படுவது போன்று இதனை வைக்கக் கூடாது. இதனை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதுதான் நல்லது. அதன் சத்துக்கள் அழியா வண்ணம் இருக்கும்.



Click it and Unblock the Notifications











