Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்களுக்கு அல்சைமர் வியாதி வந்துள்ளதா என எப்படி கண்டுபிடிக்கலாம் எனத் தெரியுமா?
அல்சைமர் மற்றும் டெமென்டியா ஆகியவை பெரும்பாலும் வயதானவர்களுக்கு வரும் வியாதி. அல்சைமர் நோயால் அடிக்கடி நினைவு பிறழும்.
ஞாபக சக்தி மிகவும் குறைந்து போய்விடும். அவர்களின் பெயர் கூட சில சமயங்களில் சொல்ல தெரியாது. இது மூளையிலுள்ள செல் சுழற்சி குறைந்து போகும்போது நிகழும்.

டெமென்டியா என்பதும் ஏறக்குறைய அல்சீமர் போலவே. முன்னுக்கு பின் முரணாக பேசுவார்கள். கோர்வையாக விஷயத்தை சொல்லாமல் ஏதோ ஒன்றை பேசுவார்கள். இது ஒருவகையான மனவியாதி.
இந்த இரண்டுமே வந்த பின் குணப்படுத்துவது கடினம். இவை நரம்பு மண்டலம் சம்பந்தபட்ட வியாதிகள். இதனை வரவிடாமல் தடுக்க ஆராச்சியாளர்கள் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர்.
அதுதான் நுகர்தல். வயதானர்கள் மூக்கினால் நுகர்ந்து சரியாக வாசனையை கண்டுபிடிக்காவிட்டால் இது அல்சைமர் மற்றும், டெமென்டியா நோய்களில் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
இந்த சமயத்தில் தகுந்த சிகிச்சை அளித்தால், அவர்களை அந்த வியாதிகளிலிருந்து காப்பாற்றலாம். இந்த அல்சைமர் தொடர்பான ஆய்வு இரண்ட் விதமாக நியு யார்க் நகரத்தில் எடுக்கப்பட்டது.
முதல் ஆய்வை செய்த கொலம்பியா பல்க்லைக் கழகம், சுமார் 80 வயதிருக்கும் 187 வயதானர்களிடம் ஆராய்ச்சியை தொடர்ந்தது. இதில் 4 வருடங்களுக்கு பிறகு அவர்களில் 50 பேருக்கு அல்சைமர் மற்றும் டெமென்டியா நோயின் தாக்கம் தெரிந்தது. இதில் 20 சதவீதத்தினருக்கு ஞாபகத் திறன் குறைவாக இருந்தது.
இந்த ஆய்வில், அல்சைமர் தாக்கப்பட்டவர்களுக்கு நுகர்தல் திறன் மிகவும் குறைந்து , கடைசியில் அறியமுடியாமல் இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இன்னொரு பலக்லைக் கழகம் மூளையின் பாகங்கள் எவ்வாறு அல்சைமர் நோயில் செயல்புரிகின்றன என ஆராய்ந்தனர். மூளையில் சுரக்கும் அமைலாய்ட் என்ற புரதம் மிகவும் குறைந்து போயிருந்தது. நுகர்வு திறன் பாதிக்கப்பட்டதால் மூளையின் பாகங்களும் பாதிக்கப்பட்கின்றன.
இந்த ஆய்வில் தெரிய வந்தது என்ன வென்றால், அல்சீமர் நோய் தாக்கப்பட்டவர்களுக்கு வாசனை நுகர்தல் மற்றும் அமைலாய்டு சுரப்பு இரண்டுமே மிகவும் குறைந்திருக்கிறது. ஆகவே முன்கூட்டியே வாசனை நுகர்தல் குறைவாக இருக்கும்போதே இந்த நோயை குணப்படுத்துவது எளிது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



