Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
தூங்குவதற்கு முன்பு நீங்க இத செஞ்சா போதுமாம்... உங்க இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்குமாம்!
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பல நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் சிறுநீரகம் மற்றும் இருதய நோய்கள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆரோக்கியமற்ற உணவுகள், உடல்செயல்பாடு இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பல காரணிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். இவற்றில் உங்களின் தூக்க நேர வழக்கமும் ஒன்று. நிம்மதியான தூக்கம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

படுக்கைக்குச் செல்வதற்கு முன் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அது உங்கள் நீரிழிவு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, சரியான உணவை உட்கொள்வது மற்றும் சரியான முறையைப் பின்பற்றுவது முக்கியம்.
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த தூக்கம் முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தூக்க நேர வழக்கம்
உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, மோசமான அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும். இந்த இரவு நேர படுக்கை நடைமுறைகள் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுவது மட்டுமல்லாமல், நல்ல இரவு தூக்கத்தையும் வழங்குகிறது.
கெமோமில் தேயிலை
நீரிழிவு நோயாளிகள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கப் கெமோமில் தேநீரை எடுத்துக் கொள்ளலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த தேநீரில் அழற்சி எதிர்ப்பு, துவர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுவதோடு, உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
ஊறவைத்த பாதாம்
நீங்கள் இரவில் ஏதாவது சாப்பிட ஆசைப்பட்டால், ஊறவைத்த ஏழு பாதாமை எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, இந்த நட்ஸ்களில் உள்ள மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு இரவு நேர பசி உணர்வையும் கட்டுப்படுத்தும். சில பாதாம் பருப்புகளை சாப்பிடுவதனால் உங்கள் இனிப்பு பசியையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
ஊறவைத்த வெந்தய விதைகள்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஊறவைத்த வெந்தய விதைகளையும் எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த விதைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. தூங்குவதற்கு முன் ஊறவைத்த வெந்தய விதைகளை ஒரு டீஸ்பூன் சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
வஜ்ராசன போஸ்
தூங்குவதற்கு முன் சரியான உணவுகளை உட்கொள்வதைத் தவிர, வஜ்ராசன யோகாவை சிறிது நேரம் செய்யுங்கள். தினமும் பதினைந்து நிமிடங்கள் பயிற்சி செய்வதால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்க முடியும். கூடுதலாக, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
நிர்வகிக்கப்படாத இரத்த சர்க்கரை அளவுகள்
அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், அதிகரித்த பசி மற்றும் உங்கள் அமைதியான வாழ்க்கையை பாதிக்கும் பல உடல்நலச் சிக்கல்களுக்கு நீரிழிவு நோய் வழிவகுக்கிறது. இதனால், சர்க்கரை நோயாளிகள் தங்கள் அன்றாட நடிவடிக்கைகள் மற்றும் உணவுகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


