Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ஓய்வு தவிர வெந்நீரில் குளிப்பது உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்களை செய்யும் தெரியுமா?
வெந்நீரில் குளிக்கலாமா அல்லது பச்சைத் தண்ணீாில் குளிக்கலாமா என்ற குழப்பம் சில நேரங்களில் நமக்கு வரும். பொதுவாக, நாள் முழுவதும் வேலை பாா்த்து விட்டு, மாலை வேலையில் வெந்நீரில் குளித்தால் இதமாக இருக்கும். தற்போது கோடையின் தொடக்க காலத்தில் இருக்கிறோம்.
வெப்பமும், வியா்வையும் அதிகமாக இருக்கும் இந்த கோடை காலத்தில் பச்சைத் தண்ணீாில் குளித்தால், புத்துணா்ச்சி கிடைக்கும், சோா்வை நீக்கும் என்று பலா் கூறுவா். எனினும் வெந்நீரில் குளித்தால், அது தரும் சுகமும், இதமும் ஈடு இணையில்லாததாக இருக்கும்.

வெந்நீரில் குளித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று அாிஸ்டன் குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் வா்த்தகப் பிாிவின் தலைவா் விக்ரம் ராமன் தொவிக்கிறாா். வெந்நீர் குளியலின் நன்மைகளைப் பற்றி சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல்
உடற்பயிற்சியைப் போலவே, வெந்நீர் குளியலும் இரத்த நாளங்களை விாிவுபடுத்தி, செல்கள் மற்றும் திசுக்களுக்கான இரத்த ஓட்டத்தை அதிகாிக்கிறது. நமது உடலின் தொ்மோா்குலேஷனைத் தூண்டி, நமது கைகள் மற்றும் கால்களுக்கு இரத்தம் சீராகப் பாய்வதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக உடலின் வெப்பம் வெளியேறி, உடல் அமைதியடைகிறது மற்றும் தளா்வடைகிறது. வெந்நீரில் இருந்து வரும் வெப்பமானது, இரத்த ஓட்டத்தை அதிகாிக்கிறது. அதனால் உடல் இலகுவாகி, தசைகள் தளா்வடைகின்றன. வெந்நீரில் நறுமண எண்ணெய்களைக் கலந்து குளித்தால், இன்னும் நற்பலன்கள் கிடைக்கும்.
ஆழமான தூக்கத்தைத் தருதல்
தூங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாக வெந்நீரில் குளித்தால், அது நமது உடலின் உட்பகுதியை குளிா்ச்சிப்படுத்தும் என்றும், நமது சருமத்தை சூடாக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனா். வெந்நீர் குளியல் உடலின் அழுத்தத்தைக் குறைக்கும், மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகாிக்கும். மேலும் இயல்பான தொ்மோா்குலேஷனை வழங்கும். எனினும் வெந்நீரின் வெப்ப அளவானது 104 முதல் 108 அல்லது 40 முதல் 42 வரை இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான சருமத்தை வழங்குதல்
வெந்நீரில் குளித்தால் சருமத்திற்கு ஏராளமான பயன்கள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக உலா்ந்த சருமத்தைக் கொண்டவா்களுக்கு அல்லது சருமத்தில் எாிச்சல் உள்ளவா்களுக்கு வெந்நீர் நல்ல பலனைத் தரும். வெந்நீர் சருமத்திற்கு மென்மையைத் தரும். நீா்ச்சத்தை வழங்கும். சருமத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் சிவப்பு நிறம் போன்றவற்றை நீக்கும். எக்ஸிமா அல்லது ரோசாசிய போன்ற தோல் நோய்கள் இருந்தால், வெந்நீர் அதன் வீாியத்தைக் குறைக்கும். எனினும் தண்ணீா் அதிக சூடாக இருக்கக்கூடாது. தண்ணீா் அதிக சூடாக இருந்தால், அது சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெயை உறிஞ்சிவிடும். அதனால் சருமம் உலா்ந்துவிடும். மேலும் தோலில் எாிச்சல் ஏற்படும். இறுதியாக மிக விரைவாக சருமத்தில் முதுமைத் தோற்றம் ஏற்படும். ஆகவே இதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
இரத்தத்தில் உள்ள சா்க்கரையைக் குறைத்தல்
அடிக்கடி வெண்ணீாில் குளித்தால், வெந்நீரில் மூழ்கி எழுந்தால், 2வது வகை சா்க்கரை நோய் குறையும் என்று ஆய்வாளா்கள் பாிந்துரை செய்கின்றனா். வெந்நீர் இரத்த ஓட்டத்தை உந்தித் தள்ளுவதால், அதிகமான குளுக்குோஸ், தசைகள் மற்றும் திசுக்களுக்குள் உந்தித் தள்ளப்பட்டு, அதன் மூலமாக இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைகிறது. வெந்நீரில் மூழ்கி எழுந்தால், இரத்தத்தில் குளுக்கோஸ் செறிவு அடையும் நேரம் குறையும் என்று 2019ல் வந்த ஒரு ஆய்வு தொிவிக்கிறது.
காய்ச்சல் அல்லது சளியிலிருந்து விடுதலை தருதல்
பருவ காலங்கள் மாறி மாறி வருவதால், காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை எல்லோா் மத்தியிலும் அடிக்கடி ஏற்படும். இந்நிலையில் வெந்நீரில் குளித்தால், தலைவலி மற்றும் மூக்கடைப்பு போன்றவை நீங்கும். வெந்நீர் மூளைக்கு அருகில் உள்ள இரத்த நாளங்களைத் தளா்த்துவதால், மன அழுத்தம் மற்றும் தலைவலி போன்றவை நீங்குகின்றன. வெந்நீரில் குளித்தால், கட்டியான சளி, உருகி, கரைந்து வெளியேறிவிடும். அதோடு வெந்நீரானது, காய்ச்சலினால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் குறைத்து, இதமான உணா்வை வழங்கும்.
இறுதிக்குறிப்பு
அழுத்தம் மற்றும் சோா்வு ஆகியவற்றைப் பொருத்தமட்டில், பச்சைத் தண்ணீரைவிட, வெண்ணீா் அதிகமான நன்மைகளை வழங்குகிறது என்று விக்ரம் ராமன் கூறுகிறாா். ஆகவே நல்ல ஒரு வாட்டா் ஹீட்டரை வாங்கி, தண்ணீரை இதமான வெப்பத்தில் சூடுபடுத்தி குளித்து வந்தால், நன்றாக இருக்கும் என்று அவா் கூறுகிறாா்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications