Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
உங்க வயிறு பலூன் மாதிரி வீங்கி இருக்கா? அப்ப உங்க குடலில் 'இந்த' பிரச்சனை இருக்க வாய்பிருக்காம்...ஜாக்கிரதை!
உங்க வயிறு பானை மாதிரி வீங்கி இருக்கா? முன்னாடி தொந்தி மாதிரி தொங்கும் உங்க வயிற்று வீக்கம் உங்களை அசெளகரியமாக உணர வைக்கிறதா? உங்கள் தோற்றத்தை தொந்தியும் தொப்பையுமா அசிங்கமா காட்டுதா? கவலைப்படாதீங்க!
ஏறக்குறைய எல்லா மக்களும் வீக்கத்தை அனுபவிக்கிறார்கள். அவ்வப்போது, சிலர் வீக்க பிரச்சனையை சந்திக்கலாம். பொதுவாக, சில உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வதன் மூலமும், நீங்கள் சாப்பிடும்போது காற்றை விழுங்குவதன் மூலமும் வீக்கம் ஏற்படுகிறது.

இது தவிர, மலச்சிக்கல், உணவு சகிப்புத்தன்மை மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற தீவிர காரணங்களாலும் வீக்கம் ஏற்படலாம். சில பெண்கள் மாதவிடாய் காலங்களில் வீங்கியதாக உணர்கிறார்கள். குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்துவதன் மூலம் வீக்கத்தை சரிசெய்ய உதவும் சக்திவாய்ந்த இயற்கை வைத்தியத்தை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
வீக்கம் மற்றும் குடல் சமநிலையின்மை
பல சந்தர்ப்பங்களில், வீக்கம் குடல் சமநிலை பிரச்சனையின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. நம் குடலுக்கு நார்ச்சத்தை ஜீரணிக்க உதவும் சில பாக்டீரியாக்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில் அதனால் தானாகவே ஜீரணிக்க முடியாது.
இருப்பினும், உங்கள் குடலில் சரியான பாக்டீரியாக்கள் இல்லை அல்லது போதுமான அளவு இல்லை என்றால், சில வகையான நார்ச்சத்துக்கள் குடலிலேயே புளிக்க வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு புளிப்பு ஏப்பம் மற்றும் வாயு வெளியேற்றத்துக்கு வழிவகுக்கும். இதனால், வயிற்றில் வீக்கம் ஏற்படலாம்.
உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், அடிக்கடி ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் இயற்கை வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
புளித்த உணவுகள்
பொதுவாக புளித்த உணவுகள் நொதித்தல் செயல்முறையால் நிகழ்கிறது. நொதித்தல் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இது புளித்த உணவுகள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் மற்றும் நல்ல செரிமானத்தையும் ஊக்குவிக்கவும் உதவுகிறது.
சில புளித்த உணவுகளில் ஈஸ்ட்கள் அதிகமாக உள்ளன. அவை பாக்டீரியாவுடன் இணைந்து செயல்படுகின்றன. நீங்கள் கிம்ச்சி, நேரடி தயிர், டெம்பே மற்றும் கொம்புச்சா ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவை சுவையாக இருப்பதோடு, உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
பெர்ரி
அவுரிநெல்லிகள் மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் பாலிபினால்கள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. பாலிபினால்கள் குடல் சுவர் மற்றும் குடல் நுண்ணுயிரியின் கலவையில் நன்மை பயக்கும். பெர்ரிகளை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமான செரிமான சிற்றுண்டியாக இருக்கும். மேலும், இது உங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
ஆக்டிவேட்டட் சார்கோல்
ஆக்டிவேட்டட் சார்கோல் என்பது கார்பனின் பதப்படுத்தப்பட்ட வடிவம். இதை நீங்கள் உணவுடன் எடுத்துக்கொள்வது வீக்கத்தைக் குறைக்க உதவும். ஆக்டிவேட்டட் சார்கோல் அதிகப்படியான வாயுவை உறிஞ்சும் சிறிய காற்றுப் பைகளைக் கொண்டுள்ளது. இது வாயு உருவாவதைத் தடுக்க உதவும்.
இருப்பினும், ஆக்டிவேட்டட் சார்கோலை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக நீங்கள் ஏதேனும் மருந்துகளை உட்கொண்டால், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
வீக்கத்தை சமாளிக்க கூடுதல் குறிப்புகள்
நடைபயிற்சி மேற்கொள்வது, சரியான நீரேற்றம் கொள்வது மற்றும் சிறிய அளவு உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது ஆகியவை வீக்கத்திற்கு உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சாப்பிடும்போது, காற்றை விழுங்குவதைத் தவிர்க்க வாயை மூடிக்கொண்டு மெல்லவும் பரிந்துரைக்கிறது.
வீக்கம் பெரும்பாலும் கவலைக்கு காரணமாக இல்லை என்றாலும், நீங்கள் மூன்று வாரங்கள் அல்லது அதற்கும் மேலாக வீங்கியதாக உணர்ந்தால், உங்கள் உணவை மாற்ற முயற்சிக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு தொடர்ந்து வீக்கம் இருந்தாலோ, உங்கள் வயிற்றில் வீக்கம் அல்லது கட்டி இருந்தாலோ உங்கள் மருத்துவரைப் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் வயிறு பானைபோல வீங்கியிருப்பதால் நடப்பது அல்லது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கலாம். உடல்நிலை சரியில்லாமல் இருப்பது, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், எடை இழப்பு அல்லது மலத்தில் இரத்தம் வெளியேறுவது ஆகிய பிரச்சனைகளுடன் உங்களுக்கு வீக்கம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
