Latest Updates
-
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தலைவலி முதல் கடுமையான இருமல் வரை பல பிரச்சனைகள் இருக்கா? அப்ப இத சாப்பிடுங்க...உடனே சரியாகிடுமாம்!
கோடை காலம் மனித உடலுக்கு பல சவால்களை அளிக்கிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அதிகரிப்பு நீர்ப்போக்கு, வெப்ப சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். கோடை காலத்தில் மக்களுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுகிறது. இது சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் குறைக்கும்.
இந்த பிரச்சனைகளை எதிர்த்துப் போராட, நீரேற்றமாக இருப்பது, பாதுகாப்பு ஆடைகளை அணிவது மற்றும் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். இது கோடை வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாக்கும்.

பொதுவாக கோடை காலகட்டத்தில் மக்கள் செரிமானம், தோல், பருவகால காய்ச்சல் மற்றும் தொற்று பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். இருப்பினும், உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இந்த எளிய பிரச்சனைகளை மிக எளிதாக கையாள உதவும் வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
அசிடிட்டிக்கு கிராம்பு
அசிடிட்டி பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தி, உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடலாம். இனி கவலையை விடுங்க! உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை ஏற்படும் போதெல்லாம், ஒரு கிராம்பு துண்டுகளை எடுத்து வாயில் போட்டு மெல்லுங்கள். கிராம்பில் உள்ள இயற்கை எண்ணெய் அமிலத்தன்மையை குறைக்க உதவும். இதனால், அசிடிட்டி பிரச்சனை உடனே தீரும்.
இருமலுக்கு பேரிச்சம்பழம் பால்
நீங்கள் நீண்ட காலமாக வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டு இருக்கீங்களா? உங்களுக்கு எந்த வைத்தியமும் உதவவில்லையா? அப்படியென்றால் இந்த தீர்வை முயற்சி செய்யுங்கள். 6 பேரீச்சம்பழங்களை எடுத்து 1/2 லிட்டர் பாலில் சேர்த்து, சுமார் 25 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் கொதிக்க வைக்கவும்.
பால் அதன் அளவு 1/4 ஆகக் குறையும் வரை, கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும். சிறிது நேரம் குளிரவிட்டு, இந்த கலவையை குடியுங்கள். ஒரு நாளைக்கு மூன்று முறை வரை குடிக்கலமாம்.
ஒற்றைத் தலைவலிக்கு ஆப்பிள்
நீங்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், ஒற்றை தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் ஆப்பிளை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது வலியைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஒற்றைத் தலைவலி ஏற்படுவதையும் குறைக்க உதவுகிறது.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு வெள்ளரிக்காய்
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் வெள்ளரிக்காயும் ஒன்று. தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள வெள்ளரிக்காய், உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. அதேபோல துருவிய தேங்காயை முகம், கழுத்து மற்றும் இமைகளின் மேல் தடவும் வைத்தியம் பற்றி பலருக்குத் தெரியாது. இது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவும்.
கடுமையான இருமலுக்கு துளசி சாறு
கடுமையான இருமல் உள்ளவர்களுக்கு, துளசியைக் கொண்டு தயாரிக்கப்படும் வீட்டு வைத்தியம் ஒரு சிறந்த தீர்வாகும். பூண்டு சாறு மற்றும் தேனுடன் சம அளவு துளசி சாறு கலந்து குடிக்க வேண்டும். இந்தக் கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால், உங்கள் இருமல் பிரச்சனை சரியாகும்.
அமிலத்தன்மை மற்றும் புண்களுக்கு துளசி இலைகள்
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட துளிசி, வீட்டு வைத்தியங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசியில் ஆன்டாக்சிட் தன்மை உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. துளசி இலைகளை அப்படியேவும் சாப்பிடலாம், இலைகளை அரைத்து சாறாகவும் சாபபிடலாம். துளசி இலைகள் ரிஃப்ளக்ஸ் மற்றும் புண்கள் உருவாவதைத் தடுக்கும் அதே வேளையில் உணவை எளிதில் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.
தலைவலிக்கு தர்பூசணி
கோடையில் தாங்க முடியாத தலைவலி இருந்தால், ஒரு கிளாஸ் தர்பூசணி சாறு சாப்பிடுங்கள். கோடை வெப்பம் உங்களுக்கு கடுமையான தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தர்பூசணி சாறு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்கும் போது உடலை ஹைட்ரேட் செய்ய உதவும். மேலும், இது உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

