Latest Updates
-
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் பரவும் புதிய கொடிய வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது?
HMPV Virus: சீனாவில் தோன்றி உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்த ஒரு கொடிய வைரஸ் தான் கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கி, உலகம் முழுவதும் பரவி பல நாடுகளில் மோசமான பேரழிவை ஏற்படுத்தியது.
அந்த மோசமான கொரோனாவின் பிடியில் இருந்து மீள 2 ஆண்டுகள் ஆகி, மீண்டுடெழுந்து வந்துள்ள நிலையில், தற்போது சீனாவில் மற்றுமொரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த வைரஸ் தான் HMPV அல்லது மனித மெட்டாப்நியூமோவைரஸ் (Human Metapneumovirus).

இந்த வைரஸ் தற்போது சீனாவில் வேகமாக பரவி கடுமையான சுவாச பிரச்சனைகளையும், இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவுகளை திடீரென்று குறைத்தும் வருகிறது. இப்படியொரு வைரஸ் சீனாவில் பரவுவதை பார்க்கும் போது, எங்கு இது உலகின் பிற நாடுகளுக்கும் பரவி கொரோனாவைப் போன்று பேரழிவை உண்டாக்கிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. சொல்லப்போனால் புதிய அச்சுறுத்தல்களை உலகம் முழுவதும் அனுப்பியுள்ளது.
சீனாவின் பெய்ஜிங்கில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் எவ்வளவு வேகமாக பரவி வருகிறது என்பது குறித்த பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. மேலும் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் நிரம்பி வழிகின்றனர். இதைப் பார்க்கும் போது, கொரோனாவைப் போன்று இந்த HMPV வைரஸ் பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதை உணர முடிகிறது. இப்போது இந்த HMPV வைரஸ் என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்ன, இது எப்படி பரவுகிறது மற்றும் இதன் பரவலைத் தடுப்பது எப்படி என்பது குறித்து காண்போம்.
HMPV வைரஸ் என்றால் என்ன?
HMPV அல்லது மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்பது ஒரு சுவாச மண்டலத்தை பாதிக்கும் வைரஸ் ஆகும். இது முதன்முதலாக 2001 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தட்டம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி போன்ற வைரஸ்களை உள்ளடக்கிய Paramyxoviridae குடும்பத்தைச் சேர்ந்தது.
இந்த வைரஸ் மனிதர்களின் உடலில் நுழைந்ததும் முதலில் சுவாச மண்டலத்தை தான் பாதிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் தான் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் சுவாச பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மேலும் இந்த வைரஸ் குழந்தைகள், முதியவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டவர்களை விரைவில் தாக்கும்.
HMPV வைரஸ் எப்படி பரவுகிறது?
நிபுணர்களின் கூற்றுப்படி, HMPV வைரஸ் சுவாசத் துளிகள் வழியாக பரவுகிறது. அதாவது இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியின் இருமல் அல்லது தும்மலின் போது வெளிவரும் நீர்த்துளிகள் காற்று வழியாக மற்றவரின் மூக்கு, வாய் அல்லது கண்களை அடைந்து, தொற்றினை உண்டாக்கலாம்.
மேலும் இந்த வைரஸ் அசுத்தமான மேற்பரப்புகளிலும் இருப்பதால், அந்த இடங்களில் நேரடி தொடர்பு கொள்ளும் போது, அது ஒருவரை தொற்றலாம். இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது மற்றும் குளிர்காலத்தில் பரவும் காய்ச்சல்களைப் போலவே, இந்த வைரஸ் குளிர்காலத்தின் பிற்பகுதியிலும், வசந்த காலத்தின் துவக்கத்திலும் பெரும்பாலும் உச்சத்தை அடையலாம்.
HMPV வைரஸ் கோவிட்-19 போன்று பெருந்தொற்றை உண்டாக்குமா?
இந்த HMPV வைரஸ் கோவிட்-19 போன்று விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த HMPV வைரஸ் பல தசாப்தங்களாக உள்ளது. இருப்பினும் தற்போது மக்களிடையே பரவி வரும் HMPV வைரஸ் வேகமாக பரவும் திறனைக் கொண்டுள்ளதால் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கையை எழுப்பியுள்ளன. முக்கியமாக இதன் அறிகுறிகள் கோவிட்-19 அறிகுறிகளைப் போன்றே கொண்டுள்ளன. இருந்தாலும், இது கோவிட்-19 போன்று பேரழிவை ஏற்படுத்துமா என்பதை அறிய சிறிது காலம் எடுக்கும்.
HMPV வைரஸ் அறிகுறிகள்
HMPV வைரஸின் அறிகுறிகள் ஒருவரது வயது, ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றைப் பொறுத்து லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். ஆனால் இந்த வைரஸ் உடலில் நுழைந்ததும் முதலில் சுவாச அமைப்பைத் தான் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் பின் அது காய்ச்சல், ஜலதோஷம் போன்ற பிற சுவாச நோய் அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
* காய்ச்சல்
* இருமல்
* தொண்டை வலி
* மூக்கு ஒழுகல்
* உடல் சோர்வு மற்றும் உடல் வலிகள்
தீவிர நிலையில்...
* மூச்சுக்குழாய் அழற்சி
* மூச்சுத்திணறல்
* நிமோனியா
* ஹைபோக்ஸியா போன்ற அறிகுறிகள் தெரியும். ஆனால் கோவிட்-19 போன்று இந்த வைரஸ் சுவை அல்லது வாசனை இழப்பை ஏற்படுத்தாது.
HMPV வைரஸ் பரவலைத் தடுக்க பின்பற்றுவது எப்படி?
சீனாவில் HMPV வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதால், வைரஸ் தொற்றுவதில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஒருசில நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்யது அவசியம். அவை பின்வருமாறு:
* வைரஸ் தொற்றாமல் இருக்க அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். தேவையில்லாமல் கைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
* சளி, இருமல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
* இருமல், தும்மலின் மூலம் வைரஸ் மற்றவர்களுக்கு பரவக்கூடியது என்பதால், கூட்டமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வெளியே செல்லும் போது மாஸ்க்குகளை அணிந்து கொள்ள வேண்டும்.
தற்போது இந்த HMPV வைரஸிற்கு தடுப்பூசி எதுவும் இல்லை என்பதால், முடிந்தவரை நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











