Latest Updates
-
வறுத்து அரைச்ச கோவக்காய் சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
1 வருடம் கழித்து வக்ரமடையும் சுக்கிரனால் பணத்தையும், புகழையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
இந்தியாவின் எத்தனை செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளது? எந்த நாட்டிடம் மிக அதிக செயற்கைகோள்கள் உள்ளது தெரியுமா? -
கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் நாளாக இருக்குமாம் -
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
ஆந்திரா முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
தங்க நகைகள் ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுக்கப்படுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க..
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க..
Blood Pressure In Tamil: தற்போது பிபி என்று அழைக்கப்படும் இரத்த அழுத்த பிரச்சனை ஒரு பொதுவான மற்றும் கவலைக்குரிய ஆரோக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்த இரத்த அழுத்தமானது அதிக மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது.

இந்த இரத்த அழுத்தத்தை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது இதய நோய், பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே ஒவ்வொருவரும் தங்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு மருந்து மாத்திரைகளின் மூலம் தான் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்லை. அதிர்ஷ்டவசமாக இரத்த அழுத்தத்தை உணவுகளின் உதவியுடனும் கட்டுப்படுத்தலாம்.
முக்கியமாக ஒருசில இயற்கை பானங்களில் உள்ள பொட்டாசியம், நைட்ரேட்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தை ஆதரிக்கக்கூடும். இந்த இயற்கை பானங்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இப்போது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் 5 இயற்கை பானங்கள் குறித்து காண்போம்.
1. மாதுளை ஜூஸ்
மாதுளை ஜூஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் இது அழற்சியைக் குறைக்கவும், தமனிகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. முக்கியமாக இதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்த அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. எனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், சர்க்கரை சேர்க்காத மாதுளம்பழ ஜூஸை குடித்து வர, நல்ல பலன் கிடைக்கும்.
2. இளநீர்
இளநீரில் பொட்டாசியம், மக்னீசியம், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை அதிகமாக உள்ளன. இந்த பொட்டாசியம் சோடியத்தின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவி புரிந்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், இளநீரை குடியுங்கள்.
3. பீட்ரூட் ஜூஸ்
இதய ஆரோக்கியத்திற்காக நன்கு அறியப்பட்ட மிகவும் பிரபலமான ஒரு ஜூஸ் தான் பீட்ரூட் ஜூஸ். ஏனெனில் இதில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தை உடலில் மேம்படுத்துகிறது. அதுவும் இந்த ஜூஸை தினசரி உணவில் சேர்த்து வந்தால், இரத்த அழுத்தம் குறைவதோடு, உடலின் ஸ்டாமினாவும் அதிகரிக்கும். முக்கியமாக ஒரு சிறிய டம்ளர் பீட்ரூட் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
4. க்ரீன் டீ
க்ரீன் டீயில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கேட்டசின்கள் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவுகிறது. முக்கியமாக இந்த க்ரீன் டீயை சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும்.
5. செம்பருத்தி டீ
நீங்கள் டீ பிரியர் என்றால், ஒருமுறை செம்பருத்தி டீயை தயாரித்து குடியுங்கள். இந்த டீ உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, இரத்த அழுத்தத்தை திறம்பட குறைக்கவும் உதவுகிறது. மேலும் இந்த டீ இரத்த நாளங்களை தளர்த்தவும், இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இயற்கை வழிகளில் பிபியை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் நினைத்தால், இந்த டீயை தேர்வு செய்து குடியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications