தினமும் காலையில் துளசியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

துளசி இலை இந்திய துணைக்கண்டத்தில் ஒரு புனிதமான இலையாக பார்க்கப்படுகிறது. துளசியில் பல்வேறு ஆரோக்கிய பலன்கள் உள்ளன. அந்த காலத்தில் வீடுகளில் துளசி மாடம் என்று ஒன்று வைக்கபட்டு, அதில் ஒரு துளசி செடியை வைத்து வழிபடுவது வழக்கம். காலையில் எழுந்தவுடன், பெண்கள் அந்த மாடத்தின் முன் கோலமிட்டு, விளக்கேற்றி அந்த துளசி மாடத்தை சுற்றி வருவர்.

ஆண்கள், அந்த துளசி செடியில் உள்ள இலைகளை எடுத்து மென்று சாப்பிட்டு வந்தனர். இது அவர்கள் உடலை ஆரோகியடுடன் வைக்க உதவியது. ஆனால் இந்த அகாலத்தில் துளசி மாடத்தை நாம் பார்க்க முடிவதில்லை. கோயில்களிலும், சந்தைகளிலும் மட்டுமே இன்று துளசியை பார்க்க முடிகிறது.

10 Health Benefits Of Consuming Tulsi Leaves Early In The Morning

துளசி இலையை எடுத்து கொள்வதற்கு சிறந்த வழி, சில இலைகளை எடுத்து, நன்றாக கழுவி அப்படியே அதனை மென்று தின்பது தான். மற்றொரு வழி, ஒரு கட்டு துளசி இலையை எடுத்து ஒரு இரவு முழுதும் 2 லிட்டர் நேரில் ஊற வைக்கவும். பின்பு, அந்த நீரை, காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது துளசி இலையின் சிறந்த பணியாகும். துளசி இலையை தினசரி சாப்பிட்டு வருவதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி, கிருமிகளை அழிக்கிறது.

மேலும், சளி, இருமல் மற்றும் இதர தொற்றுக்கள் வராமல் பாதுகாக்கிறது. துளசியில் உள்ள அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மை உடலில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை விரட்டி, செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. இதன்மூலம் பல்வேறு நோய்கள் உடலுக்கு வராமல் தடுக்கப் படுகிறது. இங்கே துளசி இலைகளால் உண்டாகும் பல்வேறு நன்மைகளை பற்றி விளக்கப் பட்டிருக்கிறது. மேலும் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

துளசி இலைக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் இதனால் அதிகரிக்கிறது. துளசி இலைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அந்த அந்நீரில் ஒரு கிளாஸ் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

 சளியை குணப்படுத்துகிறது:

சளியை குணப்படுத்துகிறது:

துளசியில் இருக்கும் கிருமிகளை எதிர்க்கும் தன்மை, சளியை குணப்படுத்துகிறது. துளசியை ஒரு கைப்பிடி எடுத்து, நன்றாக கழவி, நீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த நீரை தொடர்ந்து அருந்துவதும், அல்லது கொப்பளிப்பதும், சளி மற்றும் கபம் குறைய நல்ல தீர்வாகும்.

இதயத்திற்கு நல்லது :

இதயத்திற்கு நல்லது :

துளசி இலை இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று அறியப்படுகிறது. துளசிக்கு அழற்சியை குறைக்கும் தன்மை உண்டு. இதன் அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மை மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மை , உடலின் சீரான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, மற்றும் இதயம் தொடர்பான வலிகளை தடுக்கிறது.

கல்லீரலுக்கு நல்லது:

கல்லீரலுக்கு நல்லது:

துளசியில் இருக்கும் அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மையால், கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி , கொழுப்பு சேருவதைக் குறைக்கிறது. இதனால் கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகள் குறைகிறது. தொடர்ந்து துளசியை உட்கொள்வதன்மூலம் கல்லீரலில் நச்சுகள் வெளியேறி பாதுகாக்கப்படுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது :

செரிமானத்தை அதிகரிக்கிறது :

காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரை பருகுவது, செரிமானத்தை மேம்படுத்த சிறந்த வழியாகும். உடலின் pH அளவை பராமரிக்க உதவுகிறது மற்றும் உடலின் அமில தன்மையை சமச்சீராக வைக்க உதவுகிறது.

நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது:

நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது:

நீரிழிவை தடுப்பதற்கு ஒரு சிறந்த மூலிகையாக துளசி இருக்கிறது. துளசி எண்ணெய்யில், யுஜினால், மெத்தில் யுஜினால், கார்யோப்ய்ளேன் போன்றவை உள்ளன. இந்த கூறுகள், கணையத்தின் பீடா செல்களின் செயலாற்றலை ஊக்குவிக்கிறது. இந்த செயல்பாடு, இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்க உதவுகிறது, இதனால், இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.

 புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது :

புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது :

தொடர்ந்து துளசி இலையை உட்கொள்வதாலும், துளசி இலை ஊறிய நீரை பருகிவதாலும், புற்று நோயின் அபாயம் குறைகிறது. துளசியில் இருக்கும் அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மை, புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகிறது. ஒரு நாளில் 2 முறை, துளசி இலைகளை மெல்லுவது நல்ல பலனை தரும்.

மன அழுத்தத்தை போக்குகிறது :

மன அழுத்தத்தை போக்குகிறது :

மன அழுத்தத்தை போக்கும் அடப்டோஜென் என்னும் ஏஜென்ட், மன அழுத்தத்தை போக்க சிறப்பாக செயல்படுகிறது. இந்த தன்மையால், துளசி, நரம்பு மண்டலத்திற்கு ஒரு இதமான உணர்வை தருகிறது, மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உடலுக்கு தீங்கு இழைக்கும் கூறுகளை பாதிக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை துளசியை எடுத்துக் கொள்வது நல்லது.

 சிறுநீரக கற்களை வெளியேற்றுகிறது :

சிறுநீரக கற்களை வெளியேற்றுகிறது :

உடலில் இருக்கும் கால்சியம் ஆக்ஸ்சலேட் மற்றும் யூரிக் அமிலத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது துளசி இலை . இந்த ரசாயனங்கள் தான் சிறுநீரக கற்கள் உண்டாக முக்கிய காரணிகள் ஆகும். இது மட்டும் இல்லாமல், துளசி இலைகளை உட்கொள்வதால், அல்லது துளசி நீரை பருகிவதால், சிறுநீரக கற்கள் உண்டானதால் ஏற்படும் வலியும் குறைகிறது.

துர்நாற்றத்தை குறைக்கிறது :

துர்நாற்றத்தை குறைக்கிறது :

துளசியில் கிருமிகளை எதிர்க்கும் தன்மை உண்டு. துளசி இலைகளை வெறும் வாயில் மெல்லுவதால், வாயில் வீசும் துர் நாற்றம் குறைகிறது. காய்ந்த துளசியை பொடி செய்து தயாரிக்கப்படும் துளசி பவுடரை சிறிது கடுகு எண்ணெயுடன் சேர்த்து பற்களின் ஈறுகளில் தடவுவதால் வாய் துர்நாற்றம் தடுக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Health Benefits Of Consuming Tulsi Leaves Early In The Morning

10 Health Benefits Of Consuming Tulsi Leaves Early In The Morning
Story first published: Tuesday, January 2, 2018, 18:00 [IST]