Latest Updates
-
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்.. -
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் வீட்டில் பணமும் ஆரோக்கியமும் குறையாமல் இருக்கணுமா? இந்த 5 வாஸ்து ரகசியங்களை உடனே பின்பற்றுங்க! -
முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளும்.. அவற்றை தடுக்கும் உணவுகளும்.. -
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. -
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
ஒரு பைசா செலவில்லாம நான்கு நாளில் சிறுநீரக்கல் கரைக்க சித்தர்கள் கூறும் அற்புத மூலிகை
சிறுநீரகக் கல்லை கரைப்பதற்காக இங்கே ஒரு மூலிகையை அறிமுகப்படுத்துகிறோம். இதை வெறும் 4 நாட்கள் பயன்படுத்தினாலே அற்புதமான பலனைப் பெறலாம்.
பைசா செலவில்லாம நான்கே நாட்களில் சிறுநீரகக்கல்லை வெளியேற்ற சித்தர்கள் கூறும் மருத்துவம் இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.கட்டாயம் இருக்கிறது. அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

கல்தோன்றி, மண்தோன்றி மனிதன் தோன்றிய சமயத்தில் கடவுளும் சித்தர்களும் ஞானிகளும் மனிதர்களுக்கு உண்டாகக் கூடிய மருத்துவ முறைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். இன்றைய நாட்களில் சிறுநீரகக் கல் பிரச்னை பொதுவாக நிறைய பேருக்கு வருகிறது. இது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே இருந்த பிரச்சினை போய் இப்போது பெண்களுக்குமே வருகிறது.

சிறுநீரகக் கல்
மனிதர்களுடைய வியர்வை, சாப்பிடும் உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு ஆகியவை மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் சென்று படிந்து விட்டால் தான் அதை நாம் சிறுநீரகக் கல் என்று குறிப்பிடுகிறோம். அந்த கல்லை கண்ட மருந்துகளையெல்லாம் சாப்பிடக் கூடாது. சித்தர்கள் சொல்லும் அற்புத இயற்கை மூலிகைகள் மூலம் கரைக்க முயற்சி செய்ய வேண்டும. அதுதான் நமக்கு நிரந்தரப் பயன் கிடைக்கும்.

மூலிகை மருந்து
பொதுவாக சிறுநீரகக் கல்லை கரைப்பதற்கு நமக்குத் தெரிந்த பிரபலமான மருந்து வாழைத்தண்டு சாறு. ஆனால் வாழைச்சாறு அதிகமாகக் குடித்தால், உடலில் உள்ள நீரை முழுக்க முழுக்க உறிஞ்சி எடுத்துவிடும். அதைவிட எளிமையான மருத்துவ மூலிகை ஒன்று உண்டு. இந்த மூலிகை மூலமாக ஒரு பைசா செலவு இல்லாமல் சிறுநீரகக் கல்லை அடியோடு கரைத்துவிட முடியும்.

யானை நெருஞ்சி
எத்தகைய கல்லையும் கரைத்துவிடும் அற்புத மூலிகையான சித்தர்கள் சொல்வது இந்த யானை நெருஞ்சி செடி தான்.
இது எப்பேர்ப்பட்ட கல்லடைப்பையும் கரைக்கும். இந்த செடிக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று தெரியுமா? யானையின் கால் மிகவும் தடிமனனானது. முள்ளெல்லாம் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இந்த முள்ளானது யானையின் காலில் பட்டுவிட்டால், யானையால் எழுந்திருக்க முடியாமல் படுத்துக் கொள்ளும். மற்றொரு விளக்கமும் உண்டு. அதேபோல ஆனானப்பட்ட நோய்களையும் தீர்க்கும் மூலிகை என்றும் பெயர்.

எப்படி சாப்பிட வேண்டும்?
முதல் நாள் சமைத்த அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து நீராகாரம் சாப்பிடுவது நம் முன்னோர்களின் காலை உணவு. ஆனால் இன்றோ நமக்கு அது கீழ்தரமான உணவாக கருதி விட்டுவிட்டோம். இதில் உள்ள அற்புதமே வேறு. இனியாவது அதை உணருங்கள்.

தேவையான பொருள்கள்
ஆனை நெருஞ்சி செடி - 1
பழைய சாத நீராகாரம் - 1 கப்
செய்முறை
ஒரு கப் பழைய சாதத்துக்கு நீராகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஆனை நெருஞ்சி செடியை வேரை வெட்டி விட்டு, தண்டோடு வெட்டி வைத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து, அந்த நீராகாரத்தில் விட்டு நன்கு அலசி விட வேண்டும்.
நன்கு இந்த செடியை அலச அலச நீராகாரம் கொஞ்சம் திக்காகிக் கொண்டே வரும். ஓரளவுக்கு திக்கானதும் அப்படியே 20 நிமிடங்கள் வரையிலும் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்து பின் குடிக்க குடிக்க வேண்டும்.
இரவிலேயும் இந்த இலையை நீராகாரத்தில் போட்டு வைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும் செய்யலாம்.

அறிகுறி
நான்கு நாட்கள் குடித்து வந்தால் போதும். சிறுநீரகக் கல் வெளியேறிவிடும். இதை எப்படி நாம் தெரிந்து கொள்வது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் கடுப்பு உண்டாகும். அப்போது கல் கெரைந்து வெளியேறுகிறது என்று அர்த்தம். நான்கு நாட்களில் கிட்டதட்ட 18 mm அளவுள்ள கல் வரையிலும் கரைந்து விடுமாம்.



Click it and Unblock the Notifications