Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
முகர்ந்தாலே பல நோய்களை குணப்படுத்தும் திருநீற்றுப் பச்சிலை... உங்க வீட்ல இல்லயா?
திருநீற்றுப் பச்சிலையின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மூலப்பொருள்கள் பற்றி விளக்கியுள்ளோம்.
ரொம்ப நாளா உங்க வீட்ல வெச்சிருக்கிற செடிகள் சரியா வளராம இருக்கா? இல்ல பூச்செடிகள் சரியா பூக்காம இருக்கா? அப்படி இருநடதா இந்த திருநீற்றுப் பச்சிலை செடியில் இருந்து நான்கே நான்கு இலைகளை மட்டும் பறித்துக் கொண்டு போய், அந்த செடிகளுக்கு அருகில் வைத்தால், அப்புறம் பாருங்கள் செடிகள் எப்படி வளர்கிறது, எப்படி பூக்கிறது என்று.

அவ்வளவு அற்புதங்கள் செய்யும் இந்த பச்சிலை பற்றி இன்னும் சில அற்புதங்களைப் பற்றி சொல்கிறோம். தெரிந்து கொள்ளுங்கள்.

திருநீற்றுப் பச்சிலை
திருநீற்றுப் பச்சிலை மிகவும் வாசனை மிகுந்த தாவரம். இதனுடைய பிறப்பிடமே தெற்கு ஆசியாவிலுள்ள இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தான். இந்த இலையைக் கசக்கி முகர்ந்ர் பார்த்தால், தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும். வாந்தியை நிறுத்துவதில் இது மிகச்சிறந்த மருந்து. குறிப்பாக, ரத்த வாந்தியைக் கூட கட்டப்படுத்தும்.

பேன் மற்றும் பொடுகு
தலையில் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இந்த இலையின் சாறை தனியாகவோ அல்லது எண்ணெயில் கலந்தோ தேய்த்து தலைக்குக் குளித்து வாருங்கள். பேன், பொடுகுத் தொல்லை போயே போயிடும்

முகப்பருக்கள்
பரு வயதுடையவர்களுக்கு முக்கிய பிரச்னையே இந்த பருக்கள் தான். குறிப்பாக, பெண்களுக்கு இதனால் உண்டாகும் தொல்லை மிக அதிகம். சிலர் பருவைப் போக்க ஏதாவது கெமிக்கல் நிறைந்த க்ரீம்களைப் போட்டு, முகத்தில் பரு இருந்த இடம் புண்ணாகிவிடுகிறது. கரும்புள்ளிகளும் வந்து விடுகின்றன. அத்தகைய பிரச்சினைகளுக்கு இந்த திருநீற்றுப் பச்சிலை மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த இலையை கைகளால் கசக்கி, அதனுடைய சாறினை முகத்தில் தடவினாலே போதும் பருக்கள் காணாமல் போய்விடும். அதன் தடமும் மறை்நது விடும்.

கண் பிரச்சினைகள்
சாதாரணப் பருக்கள் மட்டுமின்றி, புரையோடி சீழ்வைத்த பருக்களாக இருந்தால் கூட குணப்படுத்தும். அதோடு மட்டுமல்லாது, கண்கட்டி போன்ற சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதனுடைய சாறு மிகச்சிறந்த தீர்வைத் தரும்.

வயிற்றுப்பூச்சிகள்
திருநீற்றுப் பச்சிலையின் விதைகளைத் தான் சியா விதைகள் என்ற பெயரில் விறகப்படுகின்றன. இதைத் தான் ஜிகர்தண்டா போன்ற குளிர் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையது

சிறுநீர் பெருக்கி
சிறுநீர் பெருக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.

மூலப்பொருள்கள்
திருநீற்றுப் பச்சிலையில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட், பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இதில் மிகக்குறைந்த கலோரிகளைக் கொண்டது. பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாது, சிட்ரால், சிட்ரோனெலால், ஜெரானியால், மெத்தில் ஈகிய ஏராளமான மூலப்பொருள்கள் இதற்குள் இருக்கின்றன.



Click it and Unblock the Notifications
