Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
முருங்கைப்பூ தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
முருங்கைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
முருங்கையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த முருங்கையின் இலை, வேர், காய், பிசின், பூ என அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பொதுவாக இந்த முருங்கை இலை மற்றும் பூ கிருத்திகை அன்று முருகனுக்கு படைத்து வழிபடக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. இத்தகைய சிறப்பம்சங்கள் பொருந்திய இந்த முருங்கை பூவை தேநீராக பருகினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

முருங்கைப்பூ தேநீர் :
முருங்கைப்பூவை தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேநீர் நன்றாக கொதித்த உடன் இதில் கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை பாலில் இட்டு கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம். இந்த முருங்கைப்பூ தே

நோய் எதிர்ப்பு சக்தி
முருங்கைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இதனால் காய்ச்சல், சளி, உடலில் உண்டாகும் பூஞ்சை பாதிப்புகள் தடுக்கப்படுகின்றது.

சிறுநீர் கழித்தல்
சிலருக்கு இரவு நேரத்தில் நான்கு, ஐந்து தடவைகள் கூட சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்த முருங்கைப்பூ தேநீரை பருகலாம்.

வெள்ளைப்போக்கு
வெள்ளைப்போக்கு உடலுக்கு தேவையற்ற சுரப்பிகளால் ஏற்படுகிறது. வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்த இந்த முருங்கைப்பூ தேநீர் பயன்படுகிறது.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூ தேநீர் அறுமருந்தாக பயன்படுகிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

காய்ச்சல், சளி
இந்த முருங்கைப்பூ தேநீரை காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்தும் விடுபட முடிகிறது. உடலுக்கு இது நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.



Click it and Unblock the Notifications