Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
தேங்காயில் பூ விழுந்தா அதை சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன நடக்கும்?
பூ விழுந்த தேங்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்களும் நன்மைகளும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
கோவிலில் தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக நாம் கருதுவுதுண்டு. நம்பிக்கையெல்லாம் தாண்டி, அறிவிய பூர்வமாக பார்த்தால் தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும்.

தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது. இள நீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும்.
அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும். அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி :
தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.

எனர்ஜியை தரும் :
மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ரை பண்ணிப் பாருங்களேன்.

ஜீரண சக்திக்கு :
உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது.

சர்க்கரை வியாதிக்கு :
தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

இதயம் :
இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

தைராய்டு :
நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

புற்று நோய் :
ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.

உடல் எடை :
உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உட்ல எடை குறையும்.

சிறு நீரகம் :
சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.

முதுமை :
தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.



Click it and Unblock the Notifications