அல்லி மலரின் அற்புத மருத்துவ குணங்கள்!!

By: Gnaana
Subscribe to Boldsky

தாமரை மலர்களில் கலைமகளும், மலைமகளும் வாசம் செய்கின்றனர் என்றால், அல்லி மலரில் பிரம்மாவே வாசம் புரிகிறாராம். தாமரை மலர் போலவே அரிய பல நற்பலன்கள் கொண்டது அல்லி மலர்.

அல்லி மடல்களை உலர்த்தி, நீரிலிட்டு காய்ச்சி, தினமும் பருகிவர, அதிக தாகம், உடல் உள் காய்ச்சல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீற்றுப்புண் பாதிப்புகள் நீங்கும்.

Different medicinal properties of Water Lilly

அல்லி மடல்களை நீரிலிட்டு சுண்டக்காய்ச்சி அத்துடன் பனை வெல்லம் சேர்த்து பாகுபதத்தில், பத்திரப்படுத்தி, தினமும் சாப்பிட்டுவர, மூளைச்சூடு குணமாகும்.

இதயப்படபடப்பு நீங்கி, உடல் மற்றும் கண்கள் குளிர்ச்சியாகும்.

சிலர் பணியிடம் காரணமாக எப்போதும் உடல் சூட்டுடனே இருப்பர் சிலர், சாப்பிடும் துரித உணவே அதிக சூட்டை உருவாக்கிவிடும். அதிக உடல் சூட்டினால், உடலில் பல

வியாதிகள் தொற்ற வாய்ப்புகள் ஏற்படும், கண்கள் பார்வைத் திறன் மங்கும்,

உடலின் ஈரல் உள்ளிட்ட உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அதனால் உடல் இரத்த ஓட்டம் பாதித்து, தோல் பாதிப்புகள் மற்றும் மலச்சிக்கல் தொல்லை ஏற்படும். சமயங்களில்சர்க்கரை பாதிப்புகளும் உண்டாகலாம்.

Different medicinal properties of Water Lilly

அந்த சமயங்களில், உலர்த்திய அல்லி மடல் தூளை நீரிலிட்டு சூடாக்கி, தினமும் பருகிவர, உடற்சூட்டினால் உண்டான வியாதிகள் யாவும் விரைவில் விலகிவிடும், மேலும், சர்க்கரைப் பாதிப்புகளும் நீங்கி, உடல் புத்தெழிழ் அடையும்.

அல்லி மடல்களுடன் செம்பருத்தி மலரின் மடல்களை சேர்த்து நீரிலிட்டு சுண்டக்காய்ச்சி பருகிவர, இதயம் தொடர்பான, படபடப்பு, வலி போன்றவை தீர்ந்து, உடலில் இரத்தம் அதிகரிக்கும்.

Different medicinal properties of Water Lilly

அல்லி மலரின் மடல்களுடன் ஆவாரம்பூவையும் சேர்த்து அத்துடன் பனை வெல்லம் கொண்ட நீரில் காய்ச்சி, லேகிய பதத்தில் வந்ததும் சேகரித்து, தினமும் பாலில் கலந்து பருகிவர, சிறுநீர் தொடர்பான வியாதிகள் தீரும்.

கோடை உஷ்ணநேரங்களில், குழந்தைகளுக்கு உடலில் உண்டாகும் சூட்டுக் கட்டிகள் குணமாக, அல்லி இலைகள் மற்றும் அவுரி இலைகள் அவுரி இலைகள் இல்லையெனில் ஆவாரை இலைகளை சேர்த்து அரைத்து கட்டிகளில் பூசிவர, அக்கி உள்ளிட்ட கட்டிகள் உடலில் இருந்து உடைந்துவிடும்.

அல்லி மலரைப்போல அல்லி இலைகளும் மருத்துவ குணமிக்கவை. அவற்றின் கிருமிநாசினி தன்மையாலும், வயிற்றுப்பிரச்னைகளை சரிசெய்வதாலும் அல்லி இலைகளில் சாப்பிடுவது அக்காலங்களில் வழக்கமாக இருந்தது.

அல்லி இலைகளிட்ட நீரைக் காய்ச்சி, அதன்மூலம் உடலில் உண்டான காயங்களைக் கழுவி வர, அவை விரைவில் ஆறும்.

English summary

Different medicinal properties of Water Lilly

Different medicinal properties of Water Lilly
Story first published: Monday, July 31, 2017, 8:00 [IST]
Subscribe Newsletter