சிறுநீரகக் கல், சிறுநீரக வலி நீங்கிட இந்த ஒரே ஒரு அற்புத மூலிகை தேநீர் குடிச்சா போதும்!

By: Gnanaa
Subscribe to Boldsky

சிறுநீரகத்தில் கல் உண்டாகி விட்டால், அது மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி, நம்மை முடக்கி விடும் தன்மை கொண்டது.

சிறுநீரகப் பாதையில் உருவான கற்களின் .இயக்கத்தால், அதிக வலியினை ஏற்படுத்தி, என்ன செய்கிறோம் என்று உணர முடியாத நிலையில், உறக்கத்தில் இருப்போர், படுக்கையில் இருந்து தரையில் விழுந்து புரளும் நிலையை ஏற்படுத்தி விடும்.

அத்தகைய வலியும் வேதனையும் தான் சிறுநீரகக் கற்களின் கடுமையான விளைவுகள்.

பொதுவாக, சிலருக்கு சிறிய அளவிலான கற்கள், சிறுநீரின் வழியே வெளியேறி விடும், அந்த சமயத்திலும் வலி கடுமையாக இருக்கும். சிலருக்கோ, கற்கள் சிறு நீரகப் பாதையில் அடைத்துக்கொண்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் அளவு கடந்த வேதனையை உண்டு பண்ணி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதனால் உண்டாகிறது சிறுநீரகக் கற்கள்?

எதனால் உண்டாகிறது சிறுநீரகக் கற்கள்?

சிலருக்கு பரம்பரைக் கோளாறுகள் காரணமாக ஏற்படுகிறது. சிலருக்கு ஒருவகை தைராய்டு சுரப்பிகளின் அதீத சுரப்பினால், கற்கள் உண்டாகின்றன. அதிகப் படியாக உடலில் சேரும் கால்சியம் மற்றும் யூரிக் அமில உப்புகளால், சிலருக்கு சிறுநீரகத்தில் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.

சிறுநீரகக் கோளாறுகளின் அறிகுறிகள்:

சிறுநீரகக் கோளாறுகளின் அறிகுறிகள்:

அடி வயிற்றில் அவ்வப்போது ஏற்படும் வலி, முதுகில் திடீரென ஏற்படும் வலி, இடுப்பின் முன் பக்க வலி அல்லது சிறுநீர் இரத்தம் கலந்து வெளியேறுதல் இவற்றின் மூலம், சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி இருப்பதாக அறியலாம்.

கற்களை கரைக்கும் மூலிகை :

கற்களை கரைக்கும் மூலிகை :

சிறுநீரகக் கோளாறுகளை, எல்லாம் அரிய முறையில் சரிசெய்யும் ஒரு எளிய மூலிகை "யானை வணங்கி" என அழைக்கப்படும் பெரு நெருஞ்சில்.

நெருஞ்சில் செடிகளை நாம் சர்வ சாதாரணமாக வயல் வெளிகளில், கிராமங்களின் தெருக்களில், நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அதிகம் கண்டிருப்போம், ஆயினும், காலில் குத்தினால் அதிக வலி தரும்.

சிறு நெருஞ்சில், குறு நெருஞ்சில் மற்றும் பெரு நெருஞ்சில் என மூன்று வகைகளில் காணப்படும் நெருஞ்சிலில் "யானை வணங்கி" என அழைக்கப் படும் பெரு நெருஞ்சிலே, சிறுநீரக நோய்களுக்கு வலி நிவாரணியாக, சிறுநீரக நோய்கள் போக்கும் அரு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

சூரியனின் திசையை நோக்கித் திரும்பும் மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட சிறு செடி வகையினைச் சேர்ந்த பெரு நெருஞ்சிலின் இலைகள் மற்ற வகை நெருஞ்சில் இலைகளை விட சற்றே பெரியதாகவும் மற்றும் இவற்றின் காய்கள், விரலின் நுனியளவில் சற்று அதிகரித்த அளவிலும் காணப்படும்.

நெருஞ்சில் பயன்படுத்தும் முறை :

நெருஞ்சில் பயன்படுத்தும் முறை :

இத்தகைய பெரு நெருஞ்சில் செடியை, அவற்றின் வேர்கள் அறுந்து விடாமல், கவனமாக வேர்களுடன் எடுத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் நீராக சுருங்கி வரும் போது அதை சேகரித்து அருந்தி வர, சிறுநீரகக் கற்கள் எல்லாம் நொறுங்கி, துகளாகவோ அல்லது கரைந்தோ சிறுநீரின் வழியே வெளியே வந்துவிடும்.

 நெருஞ்சியுடன் கீழா நெல்லி :

நெருஞ்சியுடன் கீழா நெல்லி :

மேலும், நெருஞ்சில் சமூலம் எனப்படும் முழுச் செடியுடன் சிறிது கொத்தமல்லி அல்லது கீழாநெல்லி சேர்த்து மேற் சொன்ன முறையில் காய்ச்சி அருந்தி வர, சிறுநீரகத் தொற்று காரணமாக உண்டான பாதிப்புகளை சரி செய்யும், இதுவே, உடலின் வெப்பம் நீக்கி, குளிர்ச்சியை உண்டாக்கும்.

இப்படி நெருஞ்சில் தீநீர் சில நாட்கள் அருந்தி வர, இத்தனை காலம் வேதனையையும் துன்பங்களையும் தந்து வந்த சிறுநீரக பாதிப்புகள் எல்லாம் நீங்கி விடும்.

கவனிக்க வேண்டியவை :

கவனிக்க வேண்டியவை :

இந்த நீர் பருகும் வேளையில், சிறுநீரகக் கற்கள் உடைந்து சிறுநீருடன் கலந்து வரும் நிலையில், சீரற்ற வடிவில் உள்ள அந்தக் கற்களால், சிறுநீரகப் பாதை தனில், இரத்தப் போக்கு ஏற்படலாம், அவையெல்லாம் தானாகவே சரியாகி விடும், அச்சப்படத் தேவையில்லை. அதிக அளவில் தண்ணீர் அருந்தி வர வேண்டும், இளநீர் அல்லது நுங்கு சாப்பிடலாம்.

சாப்பிட வேண்டிய உணவுகள் :

சாப்பிட வேண்டிய உணவுகள் :

மேலும், உணவில் முள்ளங்கி, வாழைத்தண்டு, வாழைப்பூ, பரங்கிக்காய் சேர்த்து வரலாம். வெள்ளரிப்பிஞ்சு சாப்பிடலாம் மற்றும் புதினா உள்ளிட்ட கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள, சிறுநீரகக் கோளாறுகள் சரியாகும்.

தவிர்க்க வேண்டியவைகள் :

தவிர்க்க வேண்டியவைகள் :

எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், ஸ்ட்ராங்காக அருந்தும் காபி அல்லது தேநீர், பருப்பு வகைகள், சாக்லேட் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்க, சிறுநீரக பாதிப்புகள் முற்றிலும் நீங்கி, நலமுடன் இருக்கலாம்.

நீங்கள் அறிவீர்களா?!

நீங்கள் அறிவீர்களா?!

நெருஞ்சில் செடிகளின் மருத்துவ குணத்தை, அவற்றின் நோய்கள் போக்கும் தன்மையை நாம் அறிகிறோமோ இல்லையோ, நம் தேசத்தில் உள்ள உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு பெரிய ஆயுர்வேத மற்றும் அலோபதி மருத்துவ மருந்துகளின் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றன.

நெருஞ்சிலின் அருமையை பூரணமாக உணர்ந்து கொண்டு, பல வகைப்பட்ட பலன்கள் தரும் நெருஞ்சில் செடிகளின் காய், இலை பூக்கள் மற்றும் வேர்களின் மூலம், பாதிக்கப்படும் மனிதர் உடல் நலனுக்கு நிறைய மருந்துகள் நெருஞ்சில் மூலம் தயாரிக்கின்றன.

அவற்றையே, பல்வேறு வகை சிறுநீரக பாதிப்புகளுக்கு எல்லாம் அரு மருந்தாக, அலோபதி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

An amazing remedy to treat kidney stone

An amazing remedy to dissolve kidney stone
Story first published: Thursday, June 22, 2017, 8:00 [IST]
Subscribe Newsletter