Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சோளக்கருதில் இருக்கும் நாரை ஏன் தூக்கிப் போடக் கூடாது? வியக்கும் சத்துக்கள்!!
சோளக் கருதின் நிறமும் சுவையும் மனதை பறிப்பவை. நிறைய மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. அதிக சத்துக்களை கொண்டது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். விட்டமின், மினரல்கள் இருக்கின்றன. இது எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் சோளக்கருதுவில் இருக்கும் பட்டு போன்ற நாரை நாம் என்றைக்காவது உபயோகித்திருக்கிறோமா? அதனை பிய்த்தெறிந்துதான் சாப்பிடுகிறோம். ஆனால் நாரிலிருக்கும் சத்துக்கள் மற்றும் பயன்களைப் பற்றி தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

சோள நாரில் இருக்கும் சத்துக்கள் :
சோள நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து உள்ளது. இதிலுள்ள ஒரு ரசாயனம் சிறு நீரை அதிகப்படுத்தும். காயம் மற்றும் வீக்கங்களை குறைக்கும்.

ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் :
சோள நாரில் அதிகமாக விட்டமின் கே உள்ளது. காயங்களினால் உண்டாகும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி, ரத்தத்தை உறையச் செய்கிறது.

சிறு நீரக கற்களை கரைக்கிறது :
சிறு நீரகத்தில் கரையாத மினரல்கள் படிமமாக மாறுவதைத்தான் கற்கள் என்போம். அதனை கரைக்க சோள நார் உதவுகிறது. மேலும் இம்மாதிரியான கற்களை உருவாகாமலும் உதவுகிறது. ப்ரோஸ்டேட் வராமல் காக்கிறது.

கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது :
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் பல்வேறு பெரிய பிரச்சனைகள் தலை தூக்கும். இந்த சோள நார் கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்துகிறது. அதிக கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பி ஜீரணமாக உதவுகிறது.

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் :
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும், உடல் பருமானனவர்களும் இதை சாப்பிட்டால் பல பிரச்சனைகளிலிருந்து தங்களை பாதுகாக்கலாம். இது இன்சுலின் ஹார்மோனை தூண்டுகிறது. சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகப்படுத்தாமல் காக்கிறது.

சோள நார் தேநீர் :
2 கப் நீரில் 2 ஸ்பூன் நாரை கலந்து கொதி வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்டி அதனை குடித்தால் இதய பிரச்சனைகள் வராது.
உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!



Click it and Unblock the Notifications
