Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
வாதத்தினால் உண்டாகும் வலியை குறைக்க ஒரு ட்ரிங்க் -என்னவென்று தெரியுமா?
வாதம் என்பது உடலிலுள்ள இணைப்புகளில் தாங்க முடியாத வலி, வீக்கம் எற்படும். மூட்டுகளை அசைக்க முடியாதபடி இறுக்கமாக இருக்கும். எல்லா இணைப்புகளிலுமே அசைவதற்கென்று நெகிழ்வுத் தன்மை இருக்கும்.
எப்போது ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கின்றதோ அவை துகள்களாக இணைப்புகளில் சென்று படிந்து கொள்ளும். அப்போது மூட்டுகளில் அசைக்க முடியாதபடி வீக்கம் வலி உண்டாகும். இதனைத்தான் கீல் வாதம் என்று கூறுவார்கள்.

இந்த மாதிரியான கீல்வாதம் மரபணு காரணமாக வரலாம். வாழ்க்கை முறை, உணவு, ஆகியவைகளும் காரணமாகலாம். இதனை குணப்படுத்த நிறைய மருந்துகள் இருந்தாலும் இயற்கையான முறையில் தீர்வு காண்பது மிகவும் உகந்தது.
அந்த வகையில் இங்கு ஒரே ஒரு குடிபானம் மூலம் இந்த கீல்வாதத்தை குணப்படுத்தலாம். அதில் உபயோகிக்கப்படும் பொருட்கள் பப்பாளிக்காய் மற்றும் க்ரீன் டீ.
பப்பாளியில் விட்டமின், மினரல், மற்றும் நுண்ணிய சத்துக்கள், என்சைம்கள் ஆகியவை உள்ளன. கீல்வாத்தில் உண்டாகும் வீக்கத்தினை பப்பாளிக்காய் குறைக்கின்றது. வலிக்கு நிவாரணம் அளிக்கிறது
பப்பாளியின் குணங்கள் :
பப்பாளிக்காய் கீல்வாதத்திற்கு மட்டுமில்லாமல், மூட்டுவாதம், ஆஸ்துமா, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது.
இது குடலினை சுத்தப்படுத்துகிறது. பெண்களின் கர்ப்பப்பைக்கு பலம் அளிக்கிறது. வெள்ளைப்படுதலை தடுக்கிறது.
க்ரீன் டீ :
க்ரீன் டீ யில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. மேலும் அதிலுள்ள பாலிஃபீனால் மற்றும் காலிக் அமிலம் ஆகியவை வீக்கத்தினை கட்டுப்படுத்தும். வலியினை குறைக்கச் செய்யும்.
இவ்விரண்டையும் கலந்து பயன்படுத்தப்படும் இந்த ஜூஸ் அற்புதமான மருத்துவ குணங்களை தருகிறது. இந்த ஆரோக்கியமான பானத்தை எப்படி செய்வது என பார்க்கலாம்.
சிறிய அளவுள்ள பப்பாளிக் காயை விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் நீரை எடுத்து கொதிக்க வையுங்கள்.
அதில் இந்த பப்பாளி துண்டுகளை போட்டி 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். பின்னர் 2 டீஸ்பூன் க்ரீன் டீயை அதில்போட்டு சில நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். அதன்பின் அடுப்பை அணைத்து நீரினை வடிகட்டி, ஆறியபின் குடியுங்கள்.
இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் கீல்வாதத்தினால் உண்டாகும் வலி குறைந்து ஆறுதல் தரும். உடல் நலத்திற்கும் மிக நல்லது.ஜீரண உறுப்புகள் பலமடையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



