Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
காய்ச்சலை கட்டுப்படுத்தும் புடலை கசாயம்!

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
புடலங்காயில் போதுமான அளவு புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபுலோவின், நியாஸின் போன்றவை உள்ளன.
இதயவலி குணமடையும்
இதயநோய்களுக்குச் சிறந்த டானிக். காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் மருந்து. உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் காய்கறி. நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை எளிதாகக் குறைக்கப் போதுமான அளவு சத்தும், குறைந்த அளவு கலோரியும் கொண்ட காய்கறி. மஞ்சள் காமாலை, தலை வழுக்கை எனப்பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அரிய காய்கறியான புடலங்காய் பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.
கடும் உழைப்பு, கவலை, நோய் முதலியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகமாய் இருக்கும். சிலருக்கு இதயவலியும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் அதிகமாக உணவில் புடலங்காயைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். அதிகாலையில் புடலைக் கொடியில் இளந்தளிரான இலையைப் பறித்து, சாறாகப் பிழிந்து வைத்துக்கொண்டு, ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை வீதம் சாப்பிட வேண்டும். இதனால், இதயம் கடும் முயற்சி செய்து இயங்குவது சமமாகி சாதாரணமாக இயங்கத் தொடங்கும்.
நீரிழிவு நோயாளிகள் இதை நன்கு சேர்த்துக்கொண்டால் உடல் எடையைப் படிப்படியாகக் குறைத்துவிடலாம்; உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும். உடலும் பலவீனமடையாது. தினசரி புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் இதயநோயின்றியும், உடல் எடை அதிகரிக்காமலும், அடிக்கடி காய்ச்சல் ஏற்படாமலும் வாழலாம். ஆரோக்கியமாய் வாழப்பயன்படும் அரிய மருந்து, புடலை.
காய்ச்சலை கட்டுப்படுத்தும்
காய்ச்சல் நேரத்தில் காய்ச்சலை மட்டுப்படுத்தப் புடலங்காய் பொறியல் செய்து சாப்பிட்டால் போதும். சிலர் அலுவலகம் வரும் வரை நன்றாய் இருப்பார்கள். தம் இருக்கையில் அமர்ந்ததும் காய்ச்சல் ஏற்பட்டுவிடும். ஏதேனும் ஒரு காய்ச்சல் மாத்திரையை அப்போது போட்டுக்கொள்வார்கள். காய்ச்சல் உடனே குணமாகும். பிறகு, மாலை அலுவலகத்திலிருந்து புறப்படும் போது மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுவிடும். இப்படி விட்டுவிட்டுக்காய்ச்சல் ஏற்படும் உடல்வாகைப் பெற்றவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் புடலங்காய்ப் பொறியல், கூட்டு என்று தயாரித்துச் சாப்பிட்டால் போதும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் தரும் காய்கறி இது. பிறகு இதுபோன்ற திடீர்க்காய்ச்சல் ஏற்படாது.
வழுக்கையில் முடி முளைக்கும்
இளமையிலேயே வழுக்கைத் தலையுள்ளவர்கள் புடலங்காய் இலைச்சாற்றைத் தினமும் ஒரு கப் அருந்தி வரவேண்டும். வாரத்தில் மூன்று நான்கு நாள்களாவது புடலங்காயையும் உணவுடன் சேர்த்து வரவேண்டும். விரைவில் இவர்களுக்கு வழுக்கை விழுந்த இடத்தில் முடிமுளைக்க ஆரம்பிக்கும்.
மஞ்சள் காமாலையைக் குணமாக்க முப்பது முதல் ஐம்பது கிராம்வரை எடையுள்ள புடலங்காய்க்கொடியின் இலைகளைக் கொத்துமல்லியுடன் இரவு முழுவதும் ஊறப்போட்டு, காலையில் அதை வடித்து, மூன்று வேளைக்குச் சமமாகப் பிரித்து வைத்துக்கொண்டு அதை அருந்த வேண்டும்.
கல்லீரல் கோளாறு, கீல்வாதம் முதலியவற்றுக்கு இலைக் கஷாயத்தை தைலம் போல மேல் பூச்சாக உடல் முழுவதும் தேய்க்க நற்பயன் கிடைக்கும். குழந்தைகளுக்குப் பேதி மருந்தாகவும், வாந்தி எடுக்க வைக்கும் மருந்தாகவும் இந்த இலைச்சாற்றையே பயன்படுத்தலாம்.
புடலையை யார் உண்ணக்கூடாது
புடலையைக் காயாகத்தான் வேகவைத்துச் சமைத்து உண்ணவேண்டும். பழுத்த புடலையை உண்ணக்கூடாது. அது எளிதில் செரிமானம் ஆகாது. பழுத்த புடலையின் உள்ள காய்களை மட்டும் காயவைத்து, அதை இரவில் ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டி அருந்தினால் பேதி ஆகும். பழுத்த புடலங்காயில் உள்ள விதைகளைப் பேதிமருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications