Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
வசியம் உண்டாக்கும் காமவர்த்தினி மூலிகை!

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இத்தாவரத்தில் சிட்டோ, ஸ்டிரால், பினிடால்,நார்எபிநெப்ரைன், மிமோலைன், டேனின் உள்ளன. விதைகள் மியூசிலேஜ் கொண்டவை. இதில் குளுக்கோனிக் அமிலம் ஆகியவை காணப்படுகின்றன.
மாந்தீரிக மூலிகை
தொட்டாற்சுருங்கி செடி மந்திரீக தன்மை உடையது.
“பகரவே இன்னமொரு மூலிகேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டிநிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே." என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர்.
சிறுநீர் கோளாறுகளை போக்கும்
ஒரு மீட்டர் உயரம் வளரக்கூடிய இந்த புதர்ச்செடியின் தண்டு மற்றும் இலைக்காம்புகள் முட்களால் மூடியவை. இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவப் பயன் கொண்டவை.
இலைகளின் சாறு சைனஸ்,மூலநோய், புண் புரைகளுக்கு மருந்தாகிறது. பசை சுரப்பிகளின் வீக்கம் மற்றும் விரை வீக்கத்திற்கு மேல் பூச்சாகிறது. வேர் சிறுநீர் உறுப்பு கோளாறுகளை போக்கும். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும்.
இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
ஆண்மை பெருகும்
பத்து முதல் இருபது நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள சிற்றின்பம் பெருகும்.
ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும்.
இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.
ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுத்து வர நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.
இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர அவை விரைவில் ஆறும். இதன் இலையை மெழுகு போல் அரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத புண்களில் வைத்து கட்டிவைக்க ஆறிவரும்.
வசியம் உண்டாகும்
வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது. தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications