For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வரும் மாரடைப்பு!

|

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நான்கு நபர்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 30-50 வயதுடையவர்கள். இந்தியாவில் இன்றைய நிலையின் படி, மாரடைப்பு ஏற்படுபவர்களில் 25% பேர் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு நாளுக்கு 30 வயதிற்குள் இருக்கின்ற 900 மக்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளினுள் இளைஞர்களை பாதிக்கும் நோய்களில் முன்னிலை பெற்றுள்ளது மாரடைப்பு. இதில் அபாயமான விஷயம் என்னவெனில், பெரும்பாலானோர் அவர்களுக்கு இதய கோளாறு ஏற்படுவது தெரியாமலேயே இறந்துள்ளனர் மற்றும் முதல் மாரடைப்பு ஏற்பட்ட போதே உயிரிழந்துள்ளனர்.

இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!

மிகவும் அமைதியாக காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வருகிறது மாரடைப்பு நோய். இவர்களுக்கு ஏற்படும் இதய கோளாறுகள், மாரடைப்பு பற்றிய அறிகுறிகள் பற்றி இவர்களுக்கு தெரிவதில்லை. மிகவும் சாதரணமாக நாம் நினைக்கும் சில விஷயங்களான, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, மார்பு மற்றும் தோள்பட்டை வலிகள் கூட இதற்கான காரணிகளாய் இருக்கின்றது. எனவே, இளைஞர்கள் இதைப் பற்றி கவனாமாகவும், எதையும் சின்ன சின்னதென தவிர்த்துவிடாது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். சரி இனி இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் இதய கோளாறுகளுக்கான அறிகுறிகள் பற்றி அறிந்துக் கொள்ளலாம்...

ஆளி விதை சாப்பிடுங்க... நீரிழிவு மற்றும் இதய நோயை கட்டுப்படுத்துங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Silent Signs of a Heart Attack

There are 7 silent signs of a heart attach which strikes youngsters badly, read here.
Desktop Bottom Promotion